{பெரும் பொய்யனின் ஆய்வும் இரசாயன உரங்களின் வளர்ச்சியும்}
பெரும்பொய்யன் இந்த உக்கல்/மட்கு அல்லது Humus என்பதை எப்படிப் பார்த்தார் என்பதில் தான் இன்றைய இரசாயன உர ஆக்கிரமிப்பு விவசாயம் ஆதித்தியம் பெற்றது.
இவர் ஹியுமஸ் மண்ணின் வளத்திற்கு பெரும் பங்காற்றுகிறது என்ற பண்டைய விவசாயக் கொள்கைகளை பெரும் விவாதத்திற்கு உட்படுத்தினார். உக்கல் அல்லது மட்கு என்பது தாவரத்தைப் பொறுத்த வரையில் காபன் மூலகத்தைப் பெறுவதற்கான ஒரு தளம் மாத்திரமே அன்றி வேறு பயன் ஒன்றுமில்லை என்றார்; செயற்கையாக உருவாக்கப்படும் அசேதன உரம் (Inorganic fertilizer) இந்தப் படையைத் தகர்த்துச் சென்று தாவரங்களைப் போசிக்கும் என்று வாதிட்டார்!
ஆனால் இது உண்மையில்லை தாவரம் தனது காபன் தேவைகளுக்கு வளிமண்டலத்தையே நம்பியிருக்கிறது.
எப்படியோ இந்தப் பெரும்பொய்யன்-Liebig கூறிய அறிவியல் உண்மை (??) என்ற முடிவுகள் அதிக விளைச்சலைப் பெற தாவரங்கள் தமது இயற்கையான உக்கலில் இருந்து தாவரம் வளரமுடியாது, அதற்கு செயற்கையாக அசேதன இரசாயனக்கலவை (Inorganic chemical) இட்டால்தான் அது வளரும், விளைச்சல் கூடும் என்ற கருத்தை பெரிதாக நம்ப வைத்தது.
இதைப் போல் தாவரங்கள் எல்லாம் நைதரசனை வளிமண்டலத்திலிருந்தே பெறுகிறது, அது விளைச்சலுக்குப் போதுமானதில்லை என்று வாதிட்டார், ஆகவே நைதரசன் உரம் அவசியம் என்ற தேவையை "ஏற்படுத்தினார்", ஆனால் பிற்காலத்தில் அவரைக் குடும்பங்கள் மாத்திரமே வளிமண்டலத்தில் இருந்து பெற்று மண்ணிற்குப் பதிப்பதன் மூலம் மற்றைய தாவரங்களுக்கு பகிர்கின்றது என்று புரியப்பட்டது.
இப்போது பலரும் அவரைத் தாவரம் மாத்திரம் தான் வளிமண்டலத்திலிருந்து பெறுகிறது என்றால் பெரும்பொய்யன் கூறியது சரிதானே என்று வாதிட வருவார்கள், ஆனால் அது சரியல்ல! அதுவரை பாரம்பரிய விவசாயத்தில் சுழற்சி முறைப் பயிர் செய்கை, கலப்புப் பயிர்ச் செய்கை என்ற பயிரிடல் முறைகள் மூலம் நைதரசன் பதிக்கப்பட்டு வந்தது, உரத்தின் மூலம் இதை ஈடுகட்டலாம் என்ற நம்பிக்கை விவசாயிகளிடம் விதைக்கப்பட்ட பின்னர் சுழற்சி, கலப்பு பயிர்ச் செய்கையெல்லாம் நாம் பின்பற்றத்தேவையில்லை, வெறுமனே இந்தப் பெரும்பொய்யனின் கோட்பாட்டு அடிப்படையில் உரத்தினை வாங்கி மண்ணுக்கு போட்டுவிட்டால் பயிர் வளர்ந்து விடும் என்று விவசாயிகள் நம்ப வைக்கப்பட்டார்கள்! நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பெரும்பொய்யனின் கோட்பாடுகள் நீடித்து நிலைத்திருக்கும் விவசாயத்தை (sustainable agriculture) வளர்க்கவில்லை, விவசாயத்திற்கான உள்ளீடுகள் என்ற உர உற்பத்தியை வளர்த்தது. பெரும் உரக்கம் பனிகள்தான் விவசாயக் கம்பனிகளாக உருப்பெற்றது! பின்னர் அதிக உரப்பாவனை நீர் மாசு, மண் மாசினை உருவாக்கில் நிலத்தடி நீரை மாசாக்கி நோயை உருவாக்கும் காரணியாக வந்து நிற்கிறது. நீண்டகால உரப்பாவனை நிலங்கள் எல்லாம் உவர் நிலங்களாக செத்துபோயின!
பிறகு உரத்திற்கு வளர்ச்சி தரும் இனங்கள் என்று கலப்பு, GMO என்று விவசாயம் வளர்ச்சியை நோக்கிச் செல்வதாக மாயை உருவாக்கப்பட்டது.
ஆனால் பெரும்பொய்யன் மறுதலித்த உக்கல்/மட்கு/humus மண்ணின் வளம் இல்லை என்ற போலிக் கோட்பாடு சூழலியல் ஆய்வினால் பொய்யாக்கப்பட்டது. மண்ணின் வளத்திற்கும், தரத்திற்கும், விவசாயத்திற்கும், தாவர வளர்சிக்கும் உக்கல்/மக்கு ஹியுமஸ் எவ்வளவு பங்களிப்புச் செய்கிறது என்பதை கண்டறிந்திருக்கிறது.
அதைத்தான் இந்தக் கட்டுரைத் தொடரில் பார்க்கப் போகிறோம்!
இதை அறிய ஆவலுள்ளவர்கள் உங்கள் விருப்பை comment இல் தெரிவியுங்கள், அனேகரின் ஆர்வம் எம்மை எழுதத்தூண்டும் டானிக்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.