வீண் அகங்காரமும், ஜம்பமும் எப்போதும் எதையும் உருப்படியாகச் சாதித்ததில்லை! சமூகமும் தனிமனிதனும் முன்னேறாத குழப்பத்தைத்தான் உருவாக்கியிருக்கிறது.
இயற்கை விவசாயத்தின் அடிப்படை தத்துவங்களில் ஒன்று என்று ஜப்பானிய இயற்கை விவசாய விஞ்ஞானி மசானபு ஃபுகோகா கூறும் உபதேசம்; இயற்கை விவசாயத்தின் நோக்கம் பயிர் சாகுபடி அல்ல, மனிதனில் பூரணத்துவத்தை சாகுபடி செய்வது!
எனது முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரிக்காக முகாமையாளர்களுடன் முகாமைத்துவக் கூட்டம் நடத்தும் பொறுப்பு என்னுடையது. இந்தக் கூட்டத்தில் இருக்கும் பெரிய பிரச்சனை எல்லோரும் தாம் சரி என்று நினைத்துக் கொண்டு நடக்கும் குழப்பங்கள் எல்லாவற்றிற்கும் நாம் பொறுப்பில்லை மற்றவர்தான் காரணம் என்றபடி வட்டமாக குற்றம் சாட்டி சுற்றி வரும் உரையாடல்கள், எப்போதும் தீர்வு வராது.
இந்தப்போக்கினை ஆராய்ந்த நாம் உணர்ந்து கொண்ட விஷயம்;
அனேகமாக எல்லோரும் தம்மைப் பற்றி மற்றவர்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது என்ற வெட்டி ஜம்பத்திற்காக மற்றவர்களிடம் over build up செய்பவர்களாக இருப்பதும், பின்னர் அந்த over build up செய்த பிம்பம் உடையாமல் காப்பாற்றிக் கொள்ள தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி, பழிபோட்டு வீண் சண்டை போட்டு குழுவின் ஆற்றலை சிதறடிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது. தமது இயலாமையை ஒத்துக்கொண்டு அதை எப்படி ஆற்றலாக வளர்த்தெடுப்பது என்ற வழி தெரியாததால் துன்பப்படுபவர்களாக இருப்பார்கள்.
இதற்கு எமக்குள் இருக்கும் அகங்காரம் பெரும் தீனி போட்டுக்கொண்டிருக்கும். ஆனால் இது எம்மை உள்ளிருந்து அழித்துக்கொண்டு இருக்கும் ஒரு எதிரி என்பது தெரியாமல் சிக்கிக்கொண்டு இருப்போம்.
நாம் எதற்காக இதைச் செய்கிறோம்?
இதன் விளைவுகள் என்ன?
அந்த விளைவுகளை ஏற்றுக்கொள்ளத் தயாரா? என்று மூன்று கேள்விகளை எந்தச் செயல் செய்வதற்கு முன்னர் கேட்பதும் அதற்குத் திருப்தியான சரியான பதிலின் பின்னர் அந்தச் செயலில் இறங்குவதும் எப்போதும் அவசியமான ஒன்று.
இதற்குத் தீர்வாக குழுவில் ஒருவருக்கு ஒருவர் போட்டியானவர்கள் அல்ல, மிகை நிரப்பிகள் (compliment) என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தோம். எனது இலாபத்தை, உயர்வை மற்றவன் கொள்ளையடித்து விடுவானோ என்ற பயத்தை அவர்கள் எண்ணுவதற்கு முன்னர் நாம் நியாயமாக நடப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்தோம். முகாமைத்துவம் சீரானது.
ஒருவனின் மிகப்பெரிய பலம் தனது இயலாமையை, ஆற்றலின்மையை அகங்காரமற்று ஒத்துக்கொள்வதுடன், அதற்கு மிகை நிரப்பான மனித ஆற்றல்களை எம்மை நோக்கி நட்புடன் ஈர்த்துக்கொள்வது; இப்படியான பண்பு இருக்கும் போது மற்றவர்கள் உதவியுடன் நாம் வாழ்வில் வெற்றி பெற முடியும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.