குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, August 05, 2011

நவபாஷாணத்தின் யோகவிளக்கம் - 03


முந்தைய பதிவுகளைப்பார்க்க: 

  1. http://yogicpsychology-research.blogspot.com/2011/08/01.html
  2. போகநாதரது நவபாஷாணத்தின் உண்மை விளக்கம் - 02


நவபாஷாண பதிவுகளின் நோக்கம்/தெளிவு 

முதலில் இந்தக்கட்டுரை ஏன் எழுதப்பட்டது என கூறவேண்டிய பொறுப்பு ஒன்று உள்ளது, ஏனனில் முதற்பதிவில் இக்கட்டுரை எழுதப்பட்டதற்கான நோக்கம் தெளிவாக விளக்கப்பட்டு இருந்தது. சில நண்பர்கள் அது தனிப்பட்ட நபரினை குறிப்பிடுவதாக இருப்பதாக கமெண்ட் அனுப்பி இருந்ததால் அதனை நீக்கினோம்.  எனினும் குறித்த கட்டுரையாளருடன் தொடர்புடையவர்களே கருத்து அனுப்பியிருப்பதால் இதனை தெளிவுபடுத்த இங்கு பதிலிடுகின்றோம்.


அதன் படி இந்தக்கட்டுரை எழுதப்பட்டதன் நோக்கம் தோழி என்பவர் தனது சித்தர்கள் இராச்சியம் எனும் வலைப்பூவில் (நாமும் அவரது  நெடு நாளைய வாசகர்தான்) பதியப்பட்ட பஞ்சபாஷாணம், நவபாஷாணம் தொடர்பான பதிவுகளின் பொருள் கூறலுக்கான மாற்றுக்கருத்து பதிவுதான் இது. எமது கட்டுரையில் கூறப்பட்டிருப்பதுதான் உண்மை என்பது வாதம் இல்லை, ஆனால் சித்தர்களை அற்புதத்திற்கும் சித்துகளுக்கும் உள்ளே இழுப்பதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டே இந்தக்கட்டுரையினை எழுத எண்ணினோம்;

இந்தக்கட்டுரை சித்தர்கள் இராச்சியம் எனும் வலைப்பதிவில் பதியப்பட்ட பஞ்சபாஷாணம், நவபாஷாணம் ஆகிய பதிவுகளிற்கான மாற்றுக்கருத்து விமர்சனமாகும். ஏனெனில் ஒருவிடயத்தினை தகவலாக பதிவது வேறு, அதனை அனுபவமாக பதிதல் வேறு, அனுபவம் எனும் போது அதனை படிப்பவர்கள் மீண்டும் செய்து பார்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது, அதன்போது எற்படும் பாதிப்புகளுக்கு போக நாதரோ, சித்தர்களோ பொறுப்பாக மாட்டார்கள். எமது அறிவே குருவாகுமன்றி எமது மன எழுச்சிகளால் எழும் எண்ணங்களை செயற்படுத்தி வரும் விளைவுகளுக்கு வேறு எவரும் பொறுப்பாகமாட்டார்கள்.  

இனி பின்னூட்டமிட்ட நண்பர்களது கேள்விகளுக்கான பதில்கள் வருமாறு;

கேள்வி பதில்கள்

திரு மு. சரவணக்குமார் அவரது கேள்விக்கான பதில்கள்; 

நல்ல முயற்சி, வாழ்த்துகக்ள் நண்பரே!. உங்கள் பதிவை இரண்டு மூன்று தடவை படித்த பின்னர் எனக்கு சில கேள்விகள் இருக்கிறது.

1. இந்த பாடல்களை எல்லாம் எந்த புத்தகங்களில் இருந்து எடுத்தீர்கள்?.அந்த புத்தக விவரங்கள் மற்றும் பாடல்களின் எண் மற்றும் இடம்பெற்ற பக்க விவரங்களைத் தரமுடியுமா?

இதற்கான பதில் மேற்பந்தியில் தரப்பட்டுள்ளது, எனினும் போகர் 7000 உட்பட மற்றைய போகரின், புலிப்பாணியாரின், இரசவாதம், முப்பு, பாஷாணம் தோடர்பான எமது கடந்த 16 வருட வாசிப்பும், பரம்பரை வைத்திய அறிவு, தகுந்த சித்த குருவிடம் வித்தை, வேதியல்/இரசாயனவியல் விஞ்ஞான ஆராய்ச்சி கற்றறிவு, அனுபவம்,  கற்ற புரிந்துணர்வுமே இக்கட்டுரையின் கருப்பொருள். எமதும், எமது முன்னோரதும் சேகரிப்பின்படி தாமரை நூலகம் வெளியிட்ட போகர் 7000, யோகி ராமையா வெளியிட்டது, யார் வெளியிட்டது என தெரியாத 100 ஆண்டுகளுக்கு முன்னதாகிய பதிப்பு என சேகரிப்புகள் உள்ளன. இவை நாம் பலகாலமாய் வாசித்து வருவன. இந்த அனுபவத்தினையும் முடிவுகளையும் கொண்டு எழுதப்பட்ட விமர்சனம் தான் இந்தக்கட்டுரை, இந்தப்பதிவிலுள்ள மற்றைய விடயங்கள்... 

2.என்னுடைய அனுபவத்தில் சித்தர் பாடல்களில் தகவல்களை மாற்றி மாற்றி வெவ்வேறு இடத்தில் சொல்லியிருப்பதை கவனித்திருக்கிறேன்.இந்த பாடல்களுக்கு முன்னும்,பின்னும் உள்ள பாடல்களில் நீங்கள் முன்வைக்கும் கருத்தினையொட்டி எதுவும் சொல்லப் பட்டிருக்கிறதா?, சொல்லப் பட்டிருந்தால் அந்த பாடல்களை இங்கே பகிரலாமே!

இந்தக் கேள்வி உங்களுடைய அனுபவத்தில் இல்லை என்பது எமது துணிபு! (பிழையாக இருந்தால் மன்னிக்கவும்), நீங்கள் போகர் 7000 இனையோ சித்தர் பாடல்களையோ முறையாக கற்பவராக இருந்தால் இந்த கேள்வி வந்திருக்காது, ஏனெனில் சித்தர் பாடல்களில் குறுக்கு உசாத்துணை (Cross reference) கூறப்பட்டிருக்கும், எப்படியெனில் இந்த நூலில் இதனைக்கூறிவிட்டேன் மேலதிக விபரத்திற்கு இந்த நூலைப்பார்க்கவும் என்றிருக்கும். அத்துடன் நீங்கள் போகர் ஏழாயிரத்தின் தொடர்ச்சியை அவதானித்திருப்பீர்கள் (?) என நம்புகிறேன். ஆறாதார விளக்கத்துடன் தான் தொடங்குகிறது, பாஷாணம் பற்றிய இரண்டாம், மூன்றாம் காண்டம் காண்டம் பகுதியில் ஒவ்வொரு பாஷாணத்திற்கும் உற்பத்தி, சத்து, கட்டு அத்துடன் யோகம், ஞானமும் கூறுகின்றார். ஆக ஒவ்வொரு பாடலிலும் யோகம் ஞானம் ஆகிய விளக்கங்களும் மறைந்துள்ளன. நான் முன்வைக்கும் கருத்து எனது சொந்தக்கருத்தல்ல, போகர் கூறிய பாடலின் யோகம் ஞானம் எனும் தளத்திலிருந்து அறியப்பட்ட விடயம். இங்கு நீங்கள் கேட்பது போன்று ஒவ்வொன்றையும் எடுத்து பதிவது என்பது நேரத்தினை கொல்லும் விடயம், எமக்கு தற்போது அத்தகைய கால அவகாசம் இல்லை, தாங்கள் உண்மையான ஆர்வத்துடன் கேட்பவராயிருந்தால் போகர் 7000 இனை வாசிப்பு செய்த பின் உங்கள் வாசிப்பினை பகிருங்கள், கேள்வி பதிலூடான பகிர்வாக பதிலிடலாம்.  

3. உங்களுடைய முந்தைய பதிவில் பாஷாணங்களின் அறிவியல் பெயர்களை பட்டியலிட்ட நீங்கள்,இங்கு மட்டும் அவை மனித உடலின் சக்தி மையங்கள் என்பதாக சொல்லுவது ஏன்? இந்த ஒன்பது பாஷாணஙக்ளுக்கு இனையான அறிவியல் பெயர்கள் இல்லையா? அல்லது அதை வேண்டுமென்றே பூசி மெழுக முனைகிறீர்களா?

இந்தக்கேள்வி உங்களது "உங்கள் பதிவை இரண்டு மூன்று தடவை படித்த பின்னர் எனக்கு சில கேள்விகள் இருக்கிறது" என்ற அறிமுகத்தினை கேள்விக்குள்ளாக்கிறது. 

//இந்த ஒன்பது பாஷாணஙக்ளுக்கு இனையான அறிவியல் பெயர்கள் இல்லையா?// 

பதிவுகளை மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டுகிறேன். இந்தக்கட்டுரையின் நோக்கம் பாடலை குறிவிலக்கம் செய்வதேயன்றி, முழுமையான விளக்கம் கொடுப்பதல்ல, ஒன்பது ஆதாரங்கள் என்பன சூட்சும உடலில் இருப்பன, ஸ்தூல உடலில் அவற்றுக்கிணையான நரம்பு பின்னல்கள் காணப்படுகின்றன, அவற்றுக்கான அறிவியல் பெயர்கள் விளக்கம் என்பன கட்டாயம் தொடர்ந்து வரும் பதிவுகளில் வெளிவரும். அப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள். ஆர்வமிருந்தால் தேடுங்கள் கிடைக்கும். 

//அல்லது அதை வேண்டுமென்றே பூசி மெழுக முனைகிறீர்களா?// -

இந்த வார்த்தைப் பிரயோகம் தங்களது இந்த பின்னூட்டமிடலின் நோக்கத்தினை புலப்படுத்துகிறது. எமக்கு இந்தப்பதிவினை எழுதி பூசி மெழுகிட எந்தத்தேவையும் இல்லை. உங்களுக்கு உண்மையான ஆர்வமிருந்தால் தொடர்ந்து இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் பதிவினை படியுங்கள். சரியான கேள்வி சரியான முறையில் கேளுங்கள், பதிலளிக்கப்படும். அத்துடன் போகர் 7000 இனை வாசிப்பு செய்யுங்கள், ஸ்தூல சூஷ்ம உடலிலுள்ள சக்தி ஆதாரங்களுக்கும் - கோயில் வழிபாடு - சித்தர்கள் - விக்கிரகங்கள் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு விளங்கும். இதற்கு மேல் எமது பதிவிலிருந்துதான் உண்மையை அறியவேண்டுமென்றால் அகத்தியர் ஞானம் - 01 பதிவில் கூறியபடி போக நாதரை தியானியுங்கள் விடை கிட்டும். 


4. பாஷாணம் என்ற சொல்லுக்கு தமிழில் கல் என்று எந்த அகராதியில் படித்தீர்கள்? அந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?

இந்த வலைப்பூவின் நோக்கம் என்னவென்று முன்னரே விளங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது, சித்தர் பாடல்களை குறிவிலக்கம் செய்வது என்பதுதான் நோக்கம், குறிவிலக்கம் செய்வதற்கு ஒருபோதும் நேர்ப்பொருள் பார்ப்பதில்லை நண்பரே, சற்று வேறு கோணத்தில் யோசிக்க வேண்டும். இதற்கு பலமுறைகள் இருக்கின்றன! உதாரணமாக நீங்கள் ஏன் இப்படி கேள்வி கேட்கிறீர்கள் அல்லது உங்களுடைய கேள்விகளுக்கான உண்மை நோக்கம் என்ன என்ன? என்பதை குறிவிலக்கம் செய்யவேண்டுமானால் செய்யவேண்டிய படிமுறை இவ்வாறு அமையலாம்;

  • உங்களுக்கு எந்த பாதையூடாக எமது வலைப்பூவின் தொடர்பு கிடைத்தது? தோழியினுடைய சித்தர்கள் இராச்சியம் பதிவினுடாக 
  • இது தொடர்பான வேறு தரவுகள் என்ன?
  • நீங்கள் சித்தர்கள் இராச்சியம் வாசிப்பாளர்
  • தோழி உங்களுடைய பதிவு வாசிப்பாளர்
  • எம்முடைய பதிவினை பார்த்தவுடன் தோழியின் பதிவிலுள்ள பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளது, 
  • ஆகவே எம்மை பரீட்சிப்பதற்கு இந்த கேள்வி
  • எமது குறிவிலக்கம் சரியாக இருக்கிறதா! 


இது போல் சித்தர்கள் பாடல்களின் குறிவிலக்கத்திற்கு, குறிப்பாக பாஷாணம் என்பதற்கு எந்த தமிழ் அகராதியிலும் சரியான அர்த்தம் இல்லை என்பது எமது துணிபு, இது வடமொழிச்சொல், சமஸ்கிருதம், ஆக வடமொழி அகராதியினை எடுத்துப்பாருங்கள் பொருள் விளங்கும். தமிழில் கூறப்பட்ட அர்த்தம் சுய நலத்தினால், உண்மையினை மறைக்க வேண்டும் என நோக்கம் கொண்டு பரப்பப்பட்ட பொருள், 

உங்களுடைய இந்த கேள்வி ஏன் தமிழன் தனது ஞானம் விஞ்ஞானம் இரண்டையும் இழந்து, ஊழல், வறுமை, சமூக சீர்கேடு என்ற சாக்கடையில் உழல்கின்றான் என்பதற்கு சரியான பதில், ஆரியம் திராவிடம், சாதியியல் என்று ஐரோப்பியர் தொடக்கிய சொஷியல் மனிப்புலேனால் இன்று தமிழன் திராவிடர் கழகம், சமஸ்கிருத புறக்கணிப்பு, தனித்தமிழ் கொள்கை என்ற பொல்டிகல் மனிபுலேஷன் ஆகி எமது கலாச்சார விழுமியங்களை உண்மைகளை அறிய முடியாத பாமரர்களாகி விட்டோம். இந்த ஆரிய திராவிட அரசியலினால் தமிழர்கள் தமது முன்னைய கலாச்சாரத்தினை, அறிவினை இழந்துவிட்டனர். 

சித்தர்பாடல்களை தமிழினை மாத்திரம் வைத்துக்கொண்டு பொருள் பார்த்தால் இவ்வாறு தவறான பொருள் கொண்டு நஞ்சினை உட்கொண்டு மாளவேண்டியதுதான், போகரே தமிழரில்லை சீனர், பிறகெப்படி அவர் எழுதிய பாடலிற்கு தமிழ் பொருளை மாத்திரம் வைத்துக்கொண்டு பொருள் கொள்வது, ஆக சித்தரிலக்கியங்க்களுக்கு சமஸ்கிருத பொருளினை ஒப்பீட்டு நோக்குவது இன்றியமையாதது. ஐம்பத்தியொரு அட்சரம், பாஷாணம் என்பனவெல்லாம் சமஸ்கிருதம் கொண்டு பொருளறிய வேண்டும். சமஸ்கிருதம் மொழியல்ல ஒலி, இது பிராமணருக்கோ வட நாட்டவருக்கோ சொந்தமானதல்ல, பிரபஞ்ச்ச ஞானத்தினை அடைய வேண்டியவர்களுக்கான ஒலியியல் பாதை. 

எந்த ஒரு விடயமும் அதன் பொருள்/அர்த்தம் உண்மையா? பொய்யா? என்பது அது மற்றவருக்கும், உங்களுக்கும் பயன்படுமா இல்லையா? என்பதால் மட்டுமே கருத்தப்படவேண்டுமே ஒழிய எங்களுடைய முன்னோர்களின் பிரதாபத்தினை புகழ்பாடுவதற்கு பயன்படுத்தப்பட்டால் இன்று தமிழ் சமூகம் உள்ள நிலை மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். நவபாஷாணம் என்பதற்கு தற்போதைய சித்தவைத்தியர்கள் கொள்ளும் பொருள் முற்றிலும் தவறு! இந்தக்கருத்தில் எமக்கு எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. யாராவது நவபாஷாணத்தை சுத்திகரித்து மனித உடலில் தீங்கு ஏற்படாத வண்ணம் இரசாயனவியல், உடற்றொழிலியல் முறைப்படி நிருபித்துக்காட்டினால் அதன் பின் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வோமே! 

சித்தர் பாடல்களை அற்புதமயமாக்குவதும், அறிவுக்கு புறம்பான வழியில் மக்களுக்கு எடுத்துக் கூறுவது மீண்டும் எமது சமூகத்திற்கு இந்த அரிய ஞானம் கிடைக்க விடாமல் செய்த முற்கால தவறானசெயலுக்கு ஒப்பானது.  இதனால் உருவாக்கப்படும் பயம் மீண்டும் சமூகத்தினை சித்த வித்தையினை அண்டவிடாது செய்யும். 

இதன் அர்த்தம் போகர் பொய் கூறினார் என்பதில்லை, அவரது கருத்துக்கள் சரியாக விளங்கப்படவில்லை, கிட்டத்தட்ட ஐயன்ஸ்டீனின் சார்புவேககோட்பாட்டினை நாம் எல்லாரும் விளங்கி வைத்துகொண்டுள்ள மாதிரியென்று வைத்துக்கொள்ளுங்களேன்.

இறுதியாக உங்கள் கேள்விகளுக்கு எமது பதில் திருப்தி அளிக்கும் என எண்ணுகிறேன், அத்துடன் நாம் தோழி அவர்களை தாக்கி எழுதுவதாக எண்ணியிருந்தால் அதுவல்ல எமது நோக்கம் என்பதனையும் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். அவரது வலைப்பூ நல்லதொரு தகவல் களஞ்சியம், அத்துடன் இந்த சிறிய வயதில் அவர் செய்திருக்கும் இந்த அரிய சேவைக்கு அவருக்கு நிச்சயமாய் சித்தர்களது மானசீக ஆசிகள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். அவரது புரிதல்களில் மேலும் தெளிவுகள் தேவை என்பதனை சுட்டிக்காட்டவே இந்த பதிவு. அத்துடன் மேலும் எமது புரிதல்களை பதிவதற்கு களம் ஏற்ப்படுத்தி நல்ல கேள்விகளை கேட்டமைக்கு மீண்டுமொருமுறை தங்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்! 

மற்றைய கேள்விகளுக்கு பதில் அடுத்த பதிவில்....


5 comments:

  1. சித்தர்களை ஒரே முறையில் அறிய முடியாது என்பதற்கு இந்த விவாதம் ஒரு அருமையான உதாரணம்.

    பகிர்வுக்கு நன்றி

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. நவ பாஷாணம் குறித்த சென்ற இரண்டாம் பதிவில் நான் கேட்ட கேள்விக்கு இன்று வரை பதிலைக் காணோம்

    பாம்பின் விஷத்தை விஷ முரிவாகப் பயன்படுத்துவது எப்படி?

    நவ பாஷாணம் உண்மை விளக்கம் தேவை.

    ReplyDelete
  3. போகரின் பாடலில் \\ பாடானம் ஒன்பதும்தான் உருக்கி // என்ற வரியில் “பாடானங்கள் ஒன்பது” என்றில்லாமல் “பாடானம் ஒன்பதும்தான்” என்று இருக்கிறது. எனவே “பாடானம்” என்பதற்கு தனியாகவும் “ஒன்பதும்” என்பதற்குதனியாகவும் பொருள் கொள்ளவேண்டும் என்பது உங்கள் கருத்து – இதை சரி என்று வைத்துக் கொண்டால். புளிப்பானியாரது பாடலில் \\ கட்டான பாடானவகை எட்டுடனொன்று // இதற்கு எப்படி பெருள் கொள்வது? போகரின் மற்றொரு பாடலில் \\ பாங்கான படானம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொள்ளக் கேளு // இந்த வரிக்கு எப்படி பெருள் கொள்வது?

    அன்புள்ள ஆளவந்தான் அவர்களே தங்களது ஆர்வதிற்கும், தொடர்விற்கும் நன்றி,

    உங்க‌ளுடையா க‌ருத்து எதுவென‌ச் சொன்னால் தெளிவாக‌ கூற‌லாம். மேலுள்ள பின்னூட்டலிற்கான பதில் அவரவர் அனுபவத்திற்கொப்ப பொருள் கூறலாம். இந்த கேள்விக்கு தனிப்பட்ட பதிலினை எழுதாமல் விட்டது பதில் பதிவுகளில் ஆங்காங்கே உள்ளது என்பதால் தான், தங்களது கருத்து எதுவென கூறுவீர்களானால் எமது கருத்தை தெளிவுபடுத்த முடியும்.

    நீங்க‌ள் க‌டைசியாக‌ இட்ட‌ப‌திவில் விஷ‌த்தினை எப்ப‌டி விஷ‌முறிவாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து என‌க்கேட்டிருதீர்க‌ள். இத‌ன் ப‌டி பார்த்தால் போக‌நாத‌ர் குறித்த‌ ந‌ச்சுப்பொருட்க‌ளை கொண்டு செய்த‌ விக்கிர‌க‌ம்தான் ந‌வ‌பாஷாண‌க்க‌ட்டு என்ப‌து உங்க‌ள் க‌ருத்து என‌ அனுமானிக்கிறோம். அது சித்த‌ம் வ‌ச‌ப்ப‌ட்ட‌ சித்த‌ரிற்க்கு சித்திக்கும். சித்த‌ம் எனும் ஆழ்ம‌ன‌ம் வ‌ச‌ப்ப‌ட்டால் உடலினுள் நஞ்சினை செலுத்தினும் பாதிக்காது. ஆழ்ம‌ன‌மாகிய‌ சித்த‌ம் வ‌ச‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் சித்த‌ர்க‌ள். சித்த‌ர் என்ப‌த‌ன் உண்மைப்பொருளும் அதுதான். இதுபற்றி தொடர்ந்து வரும் பதிவுகளில் எழுத‌வுள்ளோம்.

    அத்துட‌ன் மேல‌திக‌மாக‌ இன்னுமொரு க‌ருத்தும் கூற விரும்புகிறேன், த‌ற்போது கிடைக்கும் சித்த‌ர்பாட‌ல்க‌ள் அனைத்தும் சித்த‌ர்க‌ள் எழுதிய‌த‌ல்ல‌. ப‌ல‌ இடைச்செருக‌ல்க‌ள் உள்ள‌ன‌. ஆக‌வே அத‌ன‌து உண்மைத்த‌ன்மையினை ந‌டைமுறைக்கு ஒத்துவ‌ருமாறு ஒப்பிட்டு நோக்குத‌ல் இன்றிய‌மையாத‌து.

    அன்புட‌ன்
    சும‌ன‌ன்

    ReplyDelete
  4. போகரின் பாடலில் \\ பாடானம் ஒன்பதும்தான் உருக்கி // என்ற வரியில் “பாடானங்கள் ஒன்பது” என்றில்லாமல் “பாடானம் ஒன்பதும்தான்” என்று இருக்கிறது. எனவே “பாடானம்” என்பதற்கு தனியாகவும் “ஒன்பதும்” என்பதற்குதனியாகவும் பொருள் கொள்ளவேண்டும் என்பது உங்கள் கருத்து – இதை சரி என்று வைத்துக் கொண்டால். புளிப்பானியாரது பாடலில் \\ கட்டான பாடானவகை எட்டுடனொன்று // இதற்கு எப்படி பெருள் கொள்வது? போகரின் மற்றொரு பாடலில் \\ பாங்கான படானம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொள்ளக் கேளு // இந்த வரிக்கு எப்படி பெருள் கொள்வது?

    அன்புள்ள ஆளவந்தான் அவர்களே தங்களது ஆர்வதிற்கும், தொடர்விற்கும் நன்றி,

    உங்க‌ளுடையா க‌ருத்து எதுவென‌ச் சொன்னால் தெளிவாக‌ கூற‌லாம். மேலுள்ள பின்னூட்டலிற்கான பதில் அவரவர் அனுபவத்திற்கொப்ப பொருள் கூறலாம். இந்த கேள்விக்கு தனிப்பட்ட பதிலினை எழுதாமல் விட்டது பதில் பதிவுகளில் ஆங்காங்கே உள்ளது என்பதால் தான், தங்களது கருத்து எதுவென கூறுவீர்களானால் எமது கருத்தை தெளிவுபடுத்த முடியும்.

    நீங்க‌ள் க‌டைசியாக‌ இட்ட‌ப‌திவில் விஷ‌த்தினை எப்ப‌டி விஷ‌முறிவாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து என‌க்கேட்டிருதீர்க‌ள். இத‌ன் ப‌டி பார்த்தால் போக‌நாத‌ர் குறித்த‌ ந‌ச்சுப்பொருட்க‌ளை கொண்டு செய்த‌ விக்கிர‌க‌ம்தான் ந‌வ‌பாஷாண‌க்க‌ட்டு என்ப‌து உங்க‌ள் க‌ருத்து என‌ அனுமானிக்கிறோம். அது சித்த‌ம் வ‌ச‌ப்ப‌ட்ட‌ சித்த‌ரிற்க்கு சித்திக்கும். சித்த‌ம் எனும் ஆழ்ம‌ன‌ம் வ‌ச‌ப்ப‌ட்டால் உடலினுள் நஞ்சினை செலுத்தினும் பாதிக்காது. ஆழ்ம‌ன‌மாகிய‌ சித்த‌ம் வ‌ச‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் சித்த‌ர்க‌ள். சித்த‌ர் என்ப‌த‌ன் உண்மைப்பொருளும் அதுதான். இதுபற்றி தொடர்ந்து வரும் பதிவுகளில் எழுத‌வுள்ளோம்.

    அத்துட‌ன் மேல‌திக‌மாக‌ இன்னுமொரு க‌ருத்தும் கூற விரும்புகிறேன், த‌ற்போது கிடைக்கும் சித்த‌ர்பாட‌ல்க‌ள் அனைத்தும் சித்த‌ர்க‌ள் எழுதிய‌த‌ல்ல‌. ப‌ல‌ இடைச்செருக‌ல்க‌ள் உள்ள‌ன‌. ஆக‌வே அத‌ன‌து உண்மைத்த‌ன்மையினை ந‌டைமுறைக்கு ஒத்துவ‌ருமாறு ஒப்பிட்டு நோக்குத‌ல் இன்றிய‌மையாத‌து.

    அன்புட‌ன்
    சும‌ன‌ன்

    ReplyDelete
  5. போகரின் பாடலில் \\ பாடானம் ஒன்பதும்தான் உருக்கி // என்ற வரியில் “பாடானங்கள் ஒன்பது” என்றில்லாமல் “பாடானம் ஒன்பதும்தான்” என்று இருக்கிறது. எனவே “பாடானம்” என்பதற்கு தனியாகவும் “ஒன்பதும்” என்பதற்குதனியாகவும் பொருள் கொள்ளவேண்டும் என்பது உங்கள் கருத்து – இதை சரி என்று வைத்துக் கொண்டால். புளிப்பானியாரது பாடலில் \\ கட்டான பாடானவகை எட்டுடனொன்று // இதற்கு எப்படி பெருள் கொள்வது? போகரின் மற்றொரு பாடலில் \\ பாங்கான படானம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொள்ளக் கேளு // இந்த வரிக்கு எப்படி பெருள் கொள்வது?

    அன்புள்ள ஆளவந்தான் அவர்களே தங்களது ஆர்வதிற்கும், தொடர்விற்கும் நன்றி,

    உங்க‌ளுடையா க‌ருத்து எதுவென‌ச் சொன்னால் தெளிவாக‌ கூற‌லாம். மேலுள்ள பின்னூட்டலிற்கான பதில் அவரவர் அனுபவத்திற்கொப்ப பொருள் கூறலாம். இந்த கேள்விக்கு தனிப்பட்ட பதிலினை எழுதாமல் விட்டது பதில் பதிவுகளில் ஆங்காங்கே உள்ளது என்பதால் தான், தங்களது கருத்து எதுவென கூறுவீர்களானால் எமது கருத்தை தெளிவுபடுத்த முடியும்.

    நீங்க‌ள் க‌டைசியாக‌ இட்ட‌ப‌திவில் விஷ‌த்தினை எப்ப‌டி விஷ‌முறிவாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து என‌க்கேட்டிருதீர்க‌ள். இத‌ன் ப‌டி பார்த்தால் போக‌நாத‌ர் குறித்த‌ ந‌ச்சுப்பொருட்க‌ளை கொண்டு செய்த‌ விக்கிர‌க‌ம்தான் ந‌வ‌பாஷாண‌க்க‌ட்டு என்ப‌து உங்க‌ள் க‌ருத்து என‌ அனுமானிக்கிறோம். அது சித்த‌ம் வ‌ச‌ப்ப‌ட்ட‌ சித்த‌ரிற்க்கு சித்திக்கும். சித்த‌ம் எனும் ஆழ்ம‌ன‌ம் வ‌ச‌ப்ப‌ட்டால் உடலினுள் நஞ்சினை செலுத்தினும் பாதிக்காது. ஆழ்ம‌ன‌மாகிய‌ சித்த‌ம் வ‌ச‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் சித்த‌ர்க‌ள். சித்த‌ர் என்ப‌த‌ன் உண்மைப்பொருளும் அதுதான். இதுபற்றி தொடர்ந்து வரும் பதிவுகளில் எழுத‌வுள்ளோம்.

    அத்துட‌ன் மேல‌திக‌மாக‌ இன்னுமொரு க‌ருத்தும் கூற விரும்புகிறேன், த‌ற்போது கிடைக்கும் சித்த‌ர்பாட‌ல்க‌ள் அனைத்தும் சித்த‌ர்க‌ள் எழுதிய‌த‌ல்ல‌. ப‌ல‌ இடைச்செருக‌ல்க‌ள் உள்ள‌ன‌. ஆக‌வே அத‌ன‌து உண்மைத்த‌ன்மையினை ந‌டைமுறைக்கு ஒத்துவ‌ருமாறு ஒப்பிட்டு நோக்குத‌ல் இன்றிய‌மையாத‌து.

    அன்புட‌ன்
    சும‌ன‌ன்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...