குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Friday, August 12, 2011

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 03

ஏழாவது அடிப்படை சூரிய நாள்காட்டி: அதாவது சூரிய கலண்டரில் ஒரு வருடம் என்பது 360 பாகையினையும் மாதம் என்பது 30 பாகையினையும் கடக்க எடுக்கும் நேரமாகும். நாள் என்பது சரியாக 1 பாகையினைக் கடக்க எடுக்கும் நேரமாகும்.

எட்டாவது அடிப்படை திதிகளும் சந்திர நாள்காட்டியும்: சூரியனை வைத்து நாளினைக்கணிப்பது போல் சந்திரனை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படும் மாதம் திதிகளால் ஆனது. திதி எனப்படுவது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாளாகும், அதாவது விளக்கமாகக் கூறுவதானால் சூரியனும் சந்திரனும் ஒரே அகலாங்கில் இருக்கும் போது சந்திர மாததின் 30 திதிகளும் ஆரம்பமாகும். சூரியனை விட்டு சந்திரன் விலகும் போது திதி ஆரம்பமாகும். எப்போது சந்திரன் சரியாக‌ 12 பாகை சூரியனை விட்டு விலகி நிற்கிறதோ அப்போது முதலாவது திதி முடிவுற்று இரண்டாவது திதி ஆரம்பமாகும், 24 பாகையிற்க்கு வரும் போது இரண்டாவது திதி முடிவுற்று மூன்றாவது திதி ஆரம்பமாகும். இவ்வாறு சந்திர மாதத்தில் பன்னிரண்டு பாகைகளுக்கு ஒருதிதியென மொத்தம் 30 திதிகள் வருகின்றன. இந்த முப்பது திதிகளும் இரண்டு பட்சங்களாக

வளர் பிறை/சுக்கில பட்சம்/ பூர்வபட்சம்: இது சூரியனிலிருந்து சந்திரன் 0º இலுருந்து 180º க்குள் இருக்கும் போது காணப்படுகிறது.

தேய்பிறை கிருஷ்ணபட்சம் அபர பட்சம்: சந்திரன் 180º இலிருந்து 360º க்குள் உள்ளபோது. இவ்வாறு ஒருமாத இறுதியில் சந்திரன் சூரியனை 360º பாகையால் வந்தடையும். இந்த நாள் அமாவாசை எனப்படும். சரியாக 180º யில் இருக்கும் போது பௌர்ணமி எனப்படும்.

கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் திதிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளது.

வளர் பிறை/
சுக்கில பட்சம்/ 
பூர்வபட்சம்
தேய்பிறை/கிருஷ்ணபட்சம் அபர பட்சம்
திதியின் பெயர்
கிரகாதிபதி
1
16
பிரதமை
சூரியன்
2
17
துவிதியை
சந்திரன்
3
18
திருதியை
செவ்வாய்
4
19
சதுர்த்தி
புதன்
5
20
பஞ்சமி
வியாழன்
6
21
சஷ்டி
சுக்கிரன்
7
22
சப்தமி
சனி
8
23
அஷ்டமி
ராகு
9
24
நவமி
சூரியன்
10
25
தசமி
சந்திரன்
11
26
ஏகாதசி
செவ்வாய்
12
27
துவாதசி
புதன்
13
28
திரயோதசி
வியாழன்
14
29
சதுர்த்தி
சுக்கிரன்
15
பௌர்ணமி
சனி
30
அமாவாசை
ராகு

1 comment:

  1. எளிய முறையிலான தங்கள் விளக்கங்கள் அருமை..

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடம் 15 & 16

இந்த வாரத்திற்குரிய பாடம்:  பாடம் 15 & 16 காயத்ரி குப்த விஞ்ஞானம் என்பது காயத்ரி மந்திரம் பற்றிய அனேக ரிஷி பாரம்பரிய இரகசியங்கள்...