குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, August 21, 2011

கர்மவிஞ்ஞானமும் ஜோதிடமும் - 02


கர்மா என்பது ஒரு செயலிற்க்கான‌ காரண காரிய தொடர்புகளைக் (causal relationship)குறிக்கும் விதியாகும். கர்மாவின் செயற்ப்பாடு வெறுமனே எழுந்தமானமாக எதேச்சையாக நடப்பதில்லை, அச்செயற்ப்பாடு பிரபஞ்சத்தின் மாறாத விதியின் (Universal Law) மூலம் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணம் கூறுவதானால் எந்த நாட்டில், யாருக்கு மகனாகப் பிறக்கவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை எம்மிடத்தில் இல்லை, ஆனால் பிறந்தபின் எமது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும், என்ன செய்யவேண்டும் என்பதை தேர்ந்தெடுத்து அதன் படி செய்ய எமது இச்சா சக்தி இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. இச்சாசக்தியினால் தேர்ந்தெடுக்கும் எந்தக்காரியத்திற்கான விளைவுகளும் அவனால் மறுக்கமுடியாது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதாகிறது.

இதன்படி கர்ம விஞ்ஞானம் மூன்றுவிதமான கர்மங்களை மனிதனிற்க்கு வழங்கிறது. 1)சஞ்சித கர்மா(Gross total Karma):நல்லதும், கெட்டதுமான பலன்களை வழங்குவதற்காக எமது ஆழ்மனத்தில் சேர்ந்துள்ள மொத்தப் பதிவுகள் சஞ்சித கர்மா எனப்படும் 2) பிரார்த்த கர்மா(working karma):இது சஞ்சித கர்மத்திலிருந்து இந்தப்பிறப்பில் எமக்கு பலன் தரக்காத்திருக்கும் நல்லதும் கெட்டது கலந்த செயற்படு கர்மா.3)கிரியமன கர்மா(Accumulating Karma by this birth):புதிதாக இப்பிறப்பில் நாம் சேர்த்துக்கொண்ட, சேர்த்துக்கொண்டிருக்கின்ற, சேர்த்துக்கொள்ளப்போகின்ற கர்மா.

இவற்றில் சஞ்சித கர்மாவும் கிரியமன கர்மாவும் எமது நல்ல, கெட்ட செயல்களின் மூலம் மாற்றப்படக்கூடியவை. ஆனால் பிரார்த்த கர்மத்தின் பலன்கள் மாற்றப்படமுடியாதவை. இது இப்பிறப்பிலேயே அனுபவித்து தீர்க்கப்படவேண்டியவை. இக்கர்ம விதி புத்ததர்மத்தின் கர்மவிதியிலிருந்து வேறுபட்டது. இக்கர்மவிதி மனிதனிற்க்கு செயல் புரியும் உத்வேகத்தினை வழங்குகிறது. அதாவது எமது வாழ்க்கை முழுமையாக ஒரு திடமான திட்டத்தால் வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. எமது இச்சாக்தியினை (free will) முழுமையாக பிரயோகிக்கும் சுதந்திரத்தினை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் அதற்குரிய பலன்களைப் பெறும் அளவுகள் (அதாவது வேலைக்குத்தகுந்த கூலி) பிரார்த்த கர்மாவினால் தீர்மானிக்கப்படுகிறது.

இன்னொரு உதாரணம் மூலம் இதனை விளங்க முயற்சிப்போமானால், ஒரு கம்பனியின் ஆண்டிறுதிக்கணக்கு Annual accounts) போன்றது ஒருவரது ஜாதகம், சென்ற வருட வரவு செலவு கணக்கில் இவ்வளவு இலாபம், நஷ்டம், இவ்வளவு இருப்பு என வருவது போன்று ஒரு நபர் பிறந்தவுடன் அவரது கடந்த பிறப்புகளில் உள்ள தரவுகள், அவரது ஆற்றல்கள், அவரது இருப்பு மீதி (Balance) என்பன தீர்மானிக்கப்படுகிறது. இருக்கும் மீதிக்குத்தக்க அவரது இச்சாசக்தியினூடாக தனது அடுத்த வருடத்திற்குரிய அல்லது பலவருடங்களுக்குரிய வருமானத்தினை திட்டமிட்டு தீர்மானித்து அடைந்துகொள்ளலாம். அதுபோல் தனது இப்பிறப்பின் செயல்கள் மூலம் பழைய இலாப ந‌ஷ்டங்களாகிய பிரார்த்த கர்மங்களையும் எதிர்கால வாழ்க்கைக்கான திட்டங்களையும் உருவாக்கிக்கொள்ளலாம்.

ஜோதிடம் இவற்றில் எதற்க்கு பயன்படும்? ஜோதிடம் ஒருமனிதனின் வாழ்க்கைக்கான கணக்கியல், கணக்கியலில் ஒவ்வொரு பிரச்சனைகளை ஆராய்வதற்க்கு ஒவ்வொரு ஆய்வுமுறை இருப்பது போன்று ராசிச்சக்கரம் ‍- ‍ பொதுக்கணக்கு, நவாம்சம் - திருமணத்திற்கான கணக்கு, சப்தாம்சம் - பிள்ளைகள், தசாம்சம் - தொழில், துவாதசம்சம் - பெற்றோர் என பல கணக்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

பிரார்த்த கர்மம் ராசிச்சக்கரத்தில் உள்ள கிரகங்கள் மூலம் அறியப்படுகிறது. இதன்படி ஒருவரது வாழ்க்கையில் நடைபெறவுள்ள செயல்கள் திசாபுத்தியுடன் கணிக்கப்படுகிறது. இக்கர்மம் நிச்சயமாக நடைபெறவிருப்பது, எமது இச்சாசக்தியின் மூலம் தடை செய்யமுடியாதது, அனுபவித்து தீர்க்க வேண்டியது.

மற்றைய இரு கர்மாக்களான சஞ்சிதம், கிரியமன கர்மாக்கள் தற்போதைய கிரக நடப்புகளின் படி ஒருவரிற்க்கு பலன் தரக்காத்திருப்பவை, இவை எமது இச்சாசக்தியின் மூலம் மாற்றக்கூடியவை. இது எப்படியென்றால் எம்மிடம் கையிருப்பு ஒரு இலட்சம் என்றால் எமது எமது வியாபார தந்திரத்தின் மூலம் பத்துஇலட்ச வியாபாரத்தினை வெற்றிகரமாக முடித்தல் போன்றது, இதற்க்கித்தான் வலிமையான இச்சாசக்தி அவசியமாகிறது.

ஆக ஜோதிடம் என்பது மூடநம்பிக்கையுடன் கேட்டுவிட்டு தனக்கு இதுதான் விதி என சுயமுயற்சி அற்றிருப்பவர்களுக்கோ, அல்லது தனக்கு கோடீஸ்வர யோகம் இருப்பதால் கோடி கோடியாக பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு ஜோதிடம் எவ்விதத்திலும் பயன்பட்டது. யார் தனது வாழ்க்கையைபற்றி முழுமையான அறிவு பெறவிரும்புகிறார்களோ, திட்டமிட விரும்புகிறார்களோ அவர்களுக்குரிய ஆய்வுத்தரவு தான் ஜாதகம், ஆய்வுமுறைதான்‍ ஜோதிடம்.

2 comments:

  1. கர்மாக்களைப்பற்றியும் அவற்றுக்கும் நம் இச்சா சக்திக்கும் இருக்கும் தொடர்பை அற்புதமாக விளக்கி இருக்கிறீர்கள்.

    ஒரு முக்கியமான விசயம் விடுபட்டு விட்டதைப்போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.. பிராரப்த கர்மாவுக்கு தீர்வு சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    அந்த ஆண்டவன் அனுபூதியை வேண்டி பிரார்த்திப்பதும், நம் அனைத்து செயல்களையும் அதன் பலன்களையும் அவனுக்கு அர்ப்பணிப்பதும் இந்த பிராரப்த கர்மாவையும் குறைக்கும் வல்லமை கொண்டது என நான் கருதுகிறேன். தங்களின் மேலான கருத்துடன் இதை சற்று விளக்கினால் நலம்.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. திரு சங்கர் குருசாமி அவர்கள் இட்ட பின்னூட்டத்திற்கான பதில், ஐயா, தங்களது பிரார்த்த கர்மம் பற்றிய இக்கேள்விக்கான பதில் ஞான குரு தொடரில் ஆங்காங்கே வரும். தொடரின் ஒழுங்க்கு கருதி இங்கு விளக்காமல் விடுகிறோம்.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...