குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Thursday, August 11, 2011

கிரகங்களின் பாதிப்பினை தவிர்க்கமுடியுமா? ‍- ஓர் ஆய்வு

வலைப்பூ நண்பராகிய திரு சங்கர் குருசாமி அவர்கள் இட்ட பின்னூட்டம் எமது சிந்தனையினை தூண்டியது, இந்தப்பின்னூட்டம் எமது சிந்தையினை தூண்டியதன் விளைவாக வந்த கருத்துக்களை /பதிவினை கீழே பதிந்துள்ளோம். இந்தக்கட்டுரை பற்றிய மாற்றுக்கருத்து விமர்சனத்தினை வரவேற்கிறோம்.
சாமானியர்களுக்கு, எவ்வளவுதான் விலகிப் போனாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் கிரகங்களின் பாதிப்பு கொஞ்சமாவது இருக்கும். கிரகங்களின் பாதிப்பு வேண்டாம் என்ற நிலையை அடைய முடியுமா என்பதே ஒரு ஆராய்ச்சிக்குறிய விசயம். ஏனெனில் நன்மை, தீமை இரண்டும் செய்வதும் கிரகங்களின் பணி. நன்மையும் தீமையும் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை”. - திரு சங்கர் குருசாமி அவர்களது பின்னூட்டம்
ஆம்! உண்மை தான் சாமானியர்களல்ல, அவதாரங்கள், இறைவன், முனிவர் என எவருமே கோள்களின் தாக்கத்திலிருந்து தப்ப இயலாது என்பதுதான் உண்மை. மூச்சு விடுவது எவ்வளவு உண்மையோ அதுபோல் கோள்களது தாக்கம் உண்மை. கோள்களில் நன்மையும் இல்லை, தீமையும் இல்லை, நாம் செய்யும் கர்மத்திற்கேற்றவாறு அவற்றுனுடைய சக்தியை ஈர்த்துக்கொள்கிறோம், எமது எண்ணம் செயலுக்கு ஏற்றவாறு பலனை அனுபவிக்கிறோம். இது தவிர சுக்கிரன் கெட்டுள்ளது, சூரியன் பகை என்பதெல்லாம் மனித சுபாவத்தினை கிரகத்தில் தெய்வத்தில் சாட்டுவதால் வந்த சொற்பிரயோகம். சாதாரணமாக மனிதன் தனது குற்றங்களை ஏற்றுக்கொள்வதற்கு தயக்கமுடையவன், தான் செய்யும் பிழையிற்கு காரணம் கூட மற்றவர்தான் காரணம் எனக்கூறும் மனவலிமயற்றவன். இப்படியான மனிதன் கையில் ஜோதிடம் சிக்கியதால் வந்ததுதான் இன்றைய ஜோதிடம், இன்று ஜோதிடம் "பயத்தினை இலாபமாக்கும் கலை",  சுக்கிரன் கெட்டுள்ளது என்பது நீங்கள் சென்ற பிறப்பில் சுக்கிரனது சக்தியை வீணாக்கியதால் வந்த வினையேயன்றிசுக்கிரன் கெட்டவரல்ல.
பழங்காலத்தில் ஜோதிடம் ஒரு  தந்திரோபாயமாக (Strategic) பயன்பட்டதன்றி இன்றைப்போல் வியாபாரமாகவில்லை. எப்படியெனில் மனிதன் ஒரு பிறப்பிலிருந்து மற்றைய பிறப்பிற்கு செல்லும் போது அவனது முற்கணக்கும் மேல் மன ஞாபகத்திற்கு வராதவண்ணம் மறைக்கப்படுகிறது, (இது ஏன் என்பது எமக்கு தெரியவில்லை, தெரிந்தவர் எவருமிருப்பின் கூறலாம்) ஆக தான் இந்த உலகத்தில் பிறந்ததன் நோக்கம் என்ன என்பதனை மறந்து விடுகிறான். குறித்த காரத்தினை அறிவற்கானஒரு ருவி ஜோதிடம், து மிகுதி எவ்வவு என்பற்கானன்ஸ் ஷீட் (Balance sheet) தான் ஒருவது ஜாதம். ஜாதத்தில் உள்ளஇருப்பை வைத்துக்கொண்டு து வாழ்வின் நோக்கம் என்ன‌? செல்லவேண்டியபாதை என்ன‌? என்பனை அனுமானிக்கலாம்.
இது எப்படியெனில் பிரஞ்சத்தின் ஒவ்வொரு அசைவும் ப்ரோகிராம்(program) செய்யப்பட்டுள்ளது. பூமியில் உள்ளஒவ்வோரு அசைவும் பிரஞ்ச அசைவின் சார்பானது என்பனை எமது முன்னோர்கள் அறிந்திருந்தர், அதன் மூலம் எமது செயல்களைக்கணிக்கலாம் என்பது தான் ஜோதிடவிஞ்ஞானம். அப்படியானால் அனைத்தும் முன்னர் எழுதப்பட்டஒரே ஒழுங்கில்தான் டைபெறுகிறதா? இல்லை இந்தப்ரோகிராமினை எப்போதும் தனது விருப்பத்திற்கேற்றவாறு மாற்றி எழுதக்கூடியஒரு மாகத்தான் (Platform)  னிதது மும், சித்தமும் டைக்கப்பட்டுள்ளது. எமது அன்றாட வாழ்க்கை கர்மங்கள் போன்ற சிலப்ரோகிராம்கள் எமக்கு வேண்டியவாறு எழுதிக்கொள்ளலாம் (எமது னியில் அப்லிகேஷன் (Application) சாப்ட்வேர் எழுதிக்கொள்வது போல்) எமது கல்வி, வேலை, அன்றாட வாழ்க்கைக்கு தேவையான செல்வம் போன்றஒரு சிலது ஒரவு மாற்றக்கூடியது (எம் எஸ் ஆபிஸில் சிலஅட் இன் (Add on/in) உள்ளது போல்) சிலர்மங்கள் எம்மால் மாற்றவே முடியாதவை.
இதனி விளங்கிகொள்ள கணணி மென்பொருள் (Software) பயன்பாட்டினை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.
இது எப்படியெனில் மைக்ரோ ப்ட் (Microsoft) வெளியிடும் ணி மென் பொருளில் உங்களுக்கு இருக்கும் உபயோக உரிமை போன்றதுப்பட்டமென்பொருளை நீங்கள் உங்கது திறமையினால் உச்சட்சம் ன் டுத்தமுடியும்இது உங்கது பாவபுண்ணியம் எனப்ரோகிராமிற்கேற்றவாறு உங்கள் வாழ்வை சிறப்பாகஅமைத்துக்கொள்வது போன்றது.
உங்களுக்கு மேலும் சிலஅப்லிகேஷன்(Application) வேண்டுமானால் சிலப்ரோகிராம் மொழிகளை ன் டுத்தி அதன் உபயோகத்தினை அதிகரித்துக்கொள்ளமுடியும். இதைச் செய்யும் போது ஏற்கனவே எழுதப்பட்டப்ரோகிராம் மொழியினை ன்படுத்தவேண்டும், அதன் ஒழுங்கமைப்புக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். அது போல் ஜாதம் என்றஎமது உண்மையானப்ரோகிராமினை ஆராய்ந்து சுயஹிப்னாடிசம், ந்திரஜெபம், போன்றப்ரோகிராம்கள் மூலம் வாழ்க்கையினை மேலும் மேம்படுத்திக்கொள்ளவேண்டும்
உங்களுக்கு முழுமையாகவே ப்ரோகிராமினை மாற்றவேண்டுமெனில் அதற்கு மைக்ரோசப்ட் லைமை அதிகாரி, சாப்ட்வேர் பொறியியலாளர் அனைவது அனுமதியும் உத்தவும் வேணும். இவர்களை போன்றர்கள் தான் கிரங்களும், உங்கது த்குருவும், உபாசனை தெய்வமும். முறையானதெய்வஉபாசனையினால் உங்கது விதி எனும் ப்ரோகிராமினை குறித்தஅளவுக்கு மாற்றி எழுதமுடியும்எனினும் முற்று முழுதாகமாற்றி எழுதமுடியுமா என்பது அவவரது முயற்சியில் உள்ளது
ஆகசாமானியர்களா இல்லையா என்பது அவர்கது முயற்சியில்தான் உள்ளது. ஏனெனில் தற்கால னிதன் பாஸ்புட்(fast food) லாச்சாரத்தன், ன் உடனடியாகவேன்டுபன், இந்தகீனம் தான் தற்போதையபாஸ் புட்” ஜோதிடக்கலையினை வைத்தது
ஜோதிடத்தின் உண்மையான நோக்கம், அதனது பயன்பாடு என்பன மறக்கப்பட்டு/மறைக்கப்பட்டு இன்று பொருள் தேடும் தொழிலாக்கப்பட்டுவிட்டதுஉண்மையில் ஜோதிடம் ஒரு முடிவு எடுப்பதற்கு பயன்படும் (decision support system) உப கலையேயன்றி முடிந்த முடிபல்ல, எப்படியெனில் தற்காலத்தில் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதானால் அதனது சாத்தியக்கூறு அறிக்கை (Feasibility) தயாரிப்பதற்கு சில ஆய்வு முறைகள் பயன்படுத்தப்படும் அவ்வாறான ஒரு ஆய்வுமுறைதான் ஜோதிடமேவொழிய முடிந்தமுடிவான கலையல்ல.
அப்படியானால் ஜோதிடர்கள் சொல்லும் விடயங்கள் நிஜத்தில் பலித்துவிடுகிறதே அதற்கு என்ன சொல்லப்போகிறீர்கள்? எனக் கேள்விவரலாம்இதற்கு பதில் "அவர் சொல்லும் பலனை உங்களது ஆழ்மனமாகிய சித்தம் ஏற்றுக்கொள்கிறது, ஏனெனில் ஏதோ ஒரு பயத்தில், தேவையில் எதிர்பார்ப்பு உணர்ச்சியில்தான் (Expectation feeling) நீங்கள் ஜோதிடரையோ, மாந்திரீகரையோ அணுகுகிறீர்கள், இந்த நிலைதான் உங்களது ஆழ்மனதை இலகுவாக அணுகுவதற்கான சந்தர்ப்பம், அந்த நேரத்தில் உங்கள் மனதில் பதியப்படும் எதுவும் நிச்சயமாய் நடந்தேறும். ஆக ஜாதகம் கேட்பவர்களது வாழ்க்கையினை நூற்றுக்கு 90% தாக்கம் ஜோதிடர்கள்தான் பாதிப்பினை புகுத்துகிறார்களே என்பதேயல்லாது கிரகங்கள் அல்ல என்பது எமது கருத்து. இதற்காகத்தான் அக்காலத்தில் எமது முன்னோர்கள் ஜோதிடர், மருத்துவர் ஆகியோருக்குரிய  இலக்கணம் கூறியிருந்தனர்
கிரகத்தின் தாக்கம் என்பதற்கு தற்காலத்து ஜோதிடர்களும், மக்களும் பொருள் கொள்ளும் விதம் பிழையானது என்பது எமது கருத்து, கிரகம், இறைவன், சித்தர்கள், ரிஷிகள் எவருமே எதையும் மறைத்து வைக்கவில்லை, குறித்த ஒருசாராரிற்கு ஒழித்து வைக்கவுமில்லைஎல்லாம் எல்லோருக்கும் உரியது, ஆனால் மனிதன் தனது வியாபார தந்திர மூளையினால் ஒவ்வொரு வகையில் அனைத்தையும் வியாபாரமாக்கியுள்ளான்,
வியாபாரத்தின் முதல் தந்திரமே ஒரு மனிதனிற்கு வாழ்க்கையினை பயமுள்ளதாக்கி, பாதுகாப்பற்ற தன்மையினை உருவாக்கி, வீண்மாயைகளினை அதிகரித்து, தேவையற்றதேவைகளை அதிகரிக்கச் செய்து பொருட்களை விற்பனை செய்வதுதான்அதுபோல் இன்று ஜோதிடமும் ஜோதிட வியாபாரிகளால் "சூரியன் பகை, சந்திரன் நீசம், சுக்கிரன் கெட்டுள்ளது" என கிரகங்களை வசைபாடி மனிதனிற்கு பயத்தினை உண்டாக்கி, அதற்கு தீர்வாக அந்தப்பரிகாரம் இந்தப்பரிகாரம் என ஹொட்டல் டுவர் "பக்கேஜ்" போல் இன்று ஜோதிடம் ஆகிவிட்டது.
இந்த விடயத்தில் எமது கருத்து என்னவெனில் " கிரகங்களது தாக்கம் என்பது நல்லதோ, கெட்டதோ அல்ல, மின்சாரத்தின் பயன்பாடு போன்றது, மின்சாரத்தினை சரியான இணைப்பினைகொடுத்து, சரியான அளவில் பயன்படுத்தினால் மனிதனிற்கு மிக உபயோகமுள்ளதுஅதேபோல் தவறான முறையில் பயன்படுத்தினால் துன்பத்தினை தரும், இது மனிதனது எண்ணம், நடத்தை சார்ந்த விடயம், இது  போல கிரகங்களும் சூட்சும சக்தியினை வெளிவிடுகின்றன, அவற்றை எமது எண்ணம், செயல் என்பவற்றிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம், அவற்றை பயன் படுத்தும் நோக்கத்திற்கு தக்க விளைவு அமையும். இதனை கீழ்வரும் உதாரணம் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
சுக்கிரனது சக்தியினை கற்பனை, அழகு, கலை, காதல் என நல்லவிடயத்திற்கும் பயன்படுத்த‌லாம், அதீத காமம், அதீத சுகபோகம் என வரவுக்கு மேற்பட்ட செலவினையும் செய்யலாம், இதன் விளைவினை அவரவரும் அவரைச்சார்ந்தவர்களும் அனுபவிக்க நேரிடும்.
மனிதன் தனது விழிப்புணர்வினை (Awarness) இழக்கும் போது மற்றவரது கைப்பாவையாகிறான், அதுபோல் தனது விழிப்புணர்வு இல்லாமல் ஜோதிடரை அணுகும் போது ஜோதிடரது "பலன் கூறலுக்கு ஏற்றவாறு" அவனது வாழ்வு கட்டமைக்கப்படுகிற‌தேயல்லாது, கிரகங்கள் யாருக்கும் நன்மையினையோ தீமையினையோ வழங்குவதில்லை
ஆக நாம் எமது வாழ்க்கையினையும் ஆழ்மனமாகிய சித்தத்தினையும் ஒழுங்குபடுத்துவதற்கைமைய கிரகங்கள், பிரபஞ்ச சக்தி என்பவற்றிலிருந்து சக்தியினை ஈர்த்து வாழ்வை அமைத்துத் தருகிறது என்பதுதான் எமது கருத்து.
உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிடுவதன் மூலம் மேலும் பல விடயங்களுக்கான இரு வழி சிந்தனை தெளிவு பெறலாம். இறுதியாக இந்த கருத்தை பதிவதற்கு தூண்டுகோலாக இருந்த நண்பர் Sankar Gurusamy  அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

11 comments:

 1. அன்பு சுமனேந்திரன் அவர்களுக்கு , நல்ல விளக்கம் ,

  கணினி , மைக்ரோசாப்ட் போன்றவற்றின் மூலம் சில விளக்கங்களையும் தந்து அசத்தியிருந்தீர்கள்.

  ஒரு ஐயத் தெரிபு ,

  மைரோசாப்ட் பதிப்பிலோ , நமது கணினியிலோ இல்லாத ஒன்றை நாம் என்னதான் முயன்றாலும் உருமாற்றம் செய்யவோ , உருவாக்கவோ இயலாது .

  அந்த அந்த நிறுவனங்களே மாற்றம் செய்து மறு பதிப்புகளை வேறு பெயரில் வெளியிடவேண்டும் , அதனை வாங்கியவர்கள் அந்த மேலதிக பயனை அனுபவிக்கலாம் .

  மற்றவர்கள் அவர்களைப் பார்த்து மகிழலாம் . வேறொன்றும் செய்ய இயலாது .

  மனித வாழ்வில் விதிக்கப்பட்டதெல்லாம் விதிக்கப்பட்டதே ! அதனை மாற்றம் செய்ய விதியை செய்தவனாலேயே முடியாது.

  ஏதேனும் செய்து மாற்றம் நமக்கு உண்டானால் அதுவும் நமக்கு முன்பே விதிக்கப்பட்டதுதானே தவிர நம்மால்தான் நமது முன்னோர் சொன்னபடி நடந்துதான் நாம் இதனை செய்தோம் என்றெண்ணிக்கொண்டால் அது பெரும் பிழையாகும்.

  மேலும் இயற்கையின் முன்னே விழயம் அறிந்தவர் ,அறியாதவர், உறவு, உறவற்றவர் ,ஞானி ,அஞ்ஞானி பக்திமான் , பக்தியற்றவன் என்ற
  பாகுபாடெல்ல்லாம் இல்லை .

  அதைப்போலவே முன்னோர்கள் வழிவந்தவர்கள் , புதிதாகவந்தவர்கள் என்பதெல்லாம் நாம் சொல்லிக்கொள்ளலாமே தவிர அதுபோன்ற சீனியாரிட்டி பேஸிக்கிற்கெல்லாம் இங்கே இடமில்லை . வகுக்கப்பட்டிருந்தால் கிடைக்கும் வகுக்கப்படவில்லையெனில் உயிரே போனாலும் கிடைக்காது .

  இயற்கை அனைத்தையும் பொதுவாகவே தான் வைத்துள்ளது . நாம்தான் தேடி எடுக்கவேண்டும் அதற்கு தான் ஜாதகம் உதவி செய்யுமே தவிர இல்லாததை உருவாக்கும் என்கின்ற வாதம் மிக பொய்யானது, வலிமையற்றது.


  மேலும் இன்று ஜோதிடர்கள் மிக அதிக பொய்யை முடிந்த அளவு சொல்லி வருகிறார்கள் என்றால் அதற்கும் அவர்களின் விதியே காரணமாகும்.

  அன்புடன் உங்கள்

  ReplyDelete
 2. எனது ஒரு சாதாரண பின்னூட்டத்துக்கு இவ்வளவு பெரிய அற்புதமான பதிவு இட்டு விளக்கம் கொடுத்ததற்கு மிக நன்றி..

  மேலும் சில என் கருத்துக்கள் :

  இந்த உடல் என்பது நமது சூட்சும கர்மங்களின் ஸ்தூல வெளிப்பாடு. இந்த உடலில்தான் நம் கர்மங்கள் பொதிந்துள்ளன. நம் மனம், பொறி, இந்திரியங்கள், செயல்கள் மூலம் அவை வெளியாகின்றன அல்லது மேலும் சேர்க்கப்படுகின்றன.

  ஆகவே இந்த உடலில் நாம் இருக்கும் வரை கர்மங்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இறந்த பின் ஆத்மாவுடன், மீதமிருக்கும் கர்மங்கள் அடுத்த உடலை நோக்கி பயணப்படுகின்றன.

  எனவே பூவுலகில் இருக்கும் வரை இந்த கர்ம பலங்களை நாம் அனுபவிக்கிறோம். இதை நமக்கு சரியான வகையில் சரியான நேரத்தில் வழங்கும் கருவிதான் கிரகங்கள். நம் கர்ம பலன்களையே நாம் பெறுகிறோம்.

  இவ்வாறு இந்த கிரகங்கள் வழங்கும் பலன்களை நம் மனம் எவ்வாறு எதிர் கொள்கிறது, அது எப்படிப்பட்ட செயல்களாக நம்மால் எதிரொலிக்கப் படுகிறது என்பதைப் பொருத்தே நம் வாழ்வின் நிகழ்வுகள் அமைகின்றன.

  சுகமும் துக்கமும் நம் மனதின் உணர்வுகளே. இவை எந்த வெளி நிகழ்வுக்கும் சம்பந்தம் இல்லாதவை. இருந்தாலும் நம் மனம் சுகத்தையும் துக்கத்தையும் நிகழ்வுகளுடன் சம்பந்தப்படுத்தி பழக்கப்பட்டு விட்டதன் விளைவுதான் கிரகங்களைப் பார்த்து நாம் பயப்படுவதும் சுக துக்கங்கள் அடிக்கடி மாறுபடுவதும்.

  உண்மையில் நாம் ஆனந்த மயமானவர்களே... இதை நாம் உணர ஆத்ம சாதனையும், ஆண்டவன் அனுபூதியும் எப்போதும் அவசியம். நம் வாழ்வின் அனைத்து செயல்களும் நம்மால் ஏற்படுத்தப்பட்ட கர்மங்களின் விளைவுதான் என்றாலும் அவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து அதன் சுக துக்கங்களை அவனிடம் சமர்ப்பித்து நமது உண்மையான இயல்பான ஆனந்தத்தை வேண்டி பிரார்த்திதால் நிச்சயம் ஒருநாள் நாம் இந்த சுக துக்கமற்ற நிலையை அடைய முடியும்.

  அப்படி அடைவதே ஞானம் அல்லது முக்தி என நாம் வேறு பெயர்களில் அழைக்கிறோம்.

  சுருக்கமாக சொன்னால், உடல் இருக்கும் வரை கர்மம் இருக்கும். கர்மம் இருக்கும் வரை உடல் இருக்கும். இவை இரண்டும் இருக்கும் வரை கிரகங்களின் பாதிப்பிலிருந்து விடுதலை இல்லை.

  பகிர்வுக்கு நன்றி

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 3. நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
  கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்? குமரேசர் இரு
  தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
  தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!

  ReplyDelete
 4. உண்மைதான் , இதனை சொன்னவர்போல் நாமிருந்தால் -
  உங்கள்

  ReplyDelete
 5. //Cithra//

  தெய்வ உபாசனையால் கோள்களின் தாக்கத்தினை தவிர்க்க இயலும் என்பதனை விளக்கும் செய்யுள்!

  ReplyDelete
 6. அன்பு சுமனன் (சுமனேந்திரன்) அவர்களுக்கு ,

  ஒரு பாடலை தெரிந்து கொண்டு அதனை சொல்வதால் நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்றால் - வேறு ஒன்றுமே தேவையில்லை - சும்மா பாட்டு பாடிக்கொண்டே இருந்துவிடலாம் - உடலும் மனமும் உருகி ஆன்ம நேயம் பெருகி ஆன்மாவை இறையவன் தந்த கொடையாக எண்ணி இந்த பூத உடலை பிறவிப்பிணி அறுக்கும் கருவியாக கண்டு வாழ்பவர்களுக்குதான் அந்த பாடல் பொருந்தும் - தன்னை தானறியாமல் தன் மனம் போன போக்கில் வாழும் மானிடராகிய நாம் அதை சொல்வதே பாபம்.

  சரி! அதற்கு நீங்கள் ஏன் வந்து பதில் தந்தீர்கள் ? அதில் உங்களை அடியேன் எந்த வகையிலும் குறிப்பிடவில்லையே? யாரையும் குறிப்பிட்டும் கேள்வி இல்லை, அடியேனின் பதில் யாரையும் குறிப்பிட்டும் அமைய வில்லையே .


  அன்புடன்

  ReplyDelete
 7. அய்யா,
  நவ கோள்களின் தாக்கத்தை மனிதனால் தடுத்து கொள்ள முடியாது என்ற தங்களின் கட்டுரையை படித்தேன் ,
  சில வினாக்களுக்கு விடை கொடுக்க வேண்டுகிறேன்

  நவ கோள்களின் தாக்கம் மனிதனில் அவனுடைய எந்த எந்த பகுதி இல் இருந்தது செயல் படுகிறது ,

  அய்யா பண்டிட் கண்ணைய யோகி அவர்கள் நமது சக்கரங்களில் இருந்து செயல் படுவதாக தெரிவிக்கிறார்கள்

  அப்படியெனில் சக்கரா தியானம் செய்வதன் ஒன்றின்முலம் நவ கோள்களின் தாக்கத்தை மனிதனால் தடுத்து கொள்ள முடியும் என்று புலன் ஆகிறது
  சக்கரா சுத்தி செய்து தினமும் தியானம் செய்தால் கண்டிப்பாக நவ கோள்களின் தாக்கத்தை மனிதனால் தடுத்து கொள்ள முடியும்
  ஏதேனும் தவறு இருந்தால் அடியேனை மன்னித்து விடை தர வேண்டி அடி பணிகிறேன்
  நன்றி
  நந்தகுமார்
  தாம்பரம்

  ReplyDelete
 8. சரியான துணிபு! எந்த கிரகமும் சித்தத்தை தூண்டி மனதினை செயற்படுத்தியே செயல் புரிகின்றன; சித்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியால் கோள்களின் பாதிப்பை குறைக்கலாம் என்பதே கண்ணைய யோகீஸ்வரரின் துணிபும் கூட! கண்ணைய யோகியாரின் மானச யோகம் புத்தகம் படித்துப்பாருங்கள் மேலும் விளக்கம் கிட்டும்!

  தந்திரீக முறைப்படி சக்கர தியானத்தாலும் கோள்களின் தாக்கத்தினை கட்டுப்படுத்தலாம், அதற்கு குறித்த மந்திர ஜெபத்தை குறித்த சக்கரத்தில் மனதை செலுத்தி, குறிப்பிட்ட அளவு ஜெபமும், அந்த கிரகத்திற்குரிய நாளில், நேரத்தில் அந்த கிரகத்திற்குரிய எண்ணெய், திரவியங்களால் சக்கரங்களை குறிக்கும் உடலின் பாகத்திற்கு தேய்ப்பு செய்யவேண்டும்!

  ReplyDelete
 9. அருமையான பதிவு

  ReplyDelete
 10. அருமையான பதிவு

  ReplyDelete
 11. செயல்களின் பலன் பற்றிய அதிகமான எதிர்பார்ப்புதான் ஜோதிடம் என்ற ஒர் கலை வளரக் காரணமாகி இருக்க வேண்டும்.கீதையில் அருளியிருக்கும் சுலபமான வழிகள்
  செயல்களின் பலன்களைப்பற்றிய கவலை வேண்டாம் என்பதும், தன்னை பஞ்ச பூதங்களாகவும்,மனம்,அறிவு, ஆன்மா என்ற எட்டு பரிமானங்களாக முழுவதுமாக உணர்ந்து கொள்ளுதல்.

  கிரங்கங்கள் பற்றிய கவலை நமக்கெதற்கு. நம் அறிவுக்கு எட்டிய அளவிற்கு நற்செயல் செய்வதும் நமது உடலையும் மனத்தையும் பராமரித்துக் கொள்வதும் ஒவ்வொரு கணத்திலும் நம்மால் செய்யப்படும் செயல்களின் தரம் மிகவும் சிறப்பாக இருக்கும் வண்ணம் அர்பணிக்கக் கற்றுக் கொள்வதும் நம்மால் பிறருக்கு கிடைக்கும் நன்மையின் பிரதிபலன் அல்லது மிச்சம் மட்டுமே நமதுடமை எங்கின்ற புரிதலும் இருந்து விட்டால் ஜோதிடத்திற்கு இடம் இருப்பதாகத் தெரியவில்லை.

  இந்த எண்ணத்தில் இதுவரை நான் கடந்த நாட்களும் இதமானவையே.

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02

1920களின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட (ஏற்கனவே இயற்கையில் இருந்த ஒன்று அறியப்பட்ட) நிகழ்வு உலகின் சிந்தனைப்போக்கை பெருமளவில் புரட்டிப்போட...