குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Friday, August 05, 2011

உங்கள் மனதினை அறிந்து கொள்ளுங்கள் - 03

மனதின் தன்மைகள் - புலனறிவு (Perception) 
இதற்கு முந்தைய பதிவுகள்: 
  1. http://yogicpsychology-research.blogspot.com/2011/08/01_03.html
  2. http://yogicpsychology-research.blogspot.com/2011/08/02_7530.html

உண்மையில் புலனறிவு என்பதுதான் அறிவின் ஆரம்பம், கண்மூலம் காண்கின்றோம், காது மூலம் கேட்கிறோம், நாசி மூலம் நுகர்கிறோம், தோல் மூலம் உணர்கிறோம், இவை மனதில் சேகரிக்கப்பட்டு மனதில் படமாக்கப்படுகிறது, ஒலியாக்கப்படுகிறது, சுவையாக்கப்படுகிறது. மணமாக்கபடுகிறது, இந்த செயன்முறையினை மனவுருவாக்கல் எனக்கூறலாம். ஒரு துலங்கலுக்கு தெளிவான புலனறிவு என்பது ஒருமனிதனது அனுபவ வேற்றுமை, நுண்ணறியும் திறன், எண்ணம், கற்பனையாற்றல் என்ற மற்றைய மனதின் ஆற்றல்களில் தங்கியுள்ளது. இதை இன்னொரு விதத்தில் சொல்வதானால் ஒரே துலங்கல் மனம் குழம்பியிருக்கும் நிலையில் அல்லது வெவ்வேறு நபர்களுக்கு அவர்களது மன ஆற்றல் வேற்றுமைகளில் வெவ்வேறான புலனறிவினைத்தரும்.


இந்த புலனறிவு வேற்றுமை எப்படி நம்மனைவரிலும் செல்வாக்கு செலுத்துகிறது என்பதனை விளக்கமாக பார்ப்போம். உண்மையில் எமது எண்ணங்கள் மூலம் அல்லது வேறொருவரது எண்ணங்கள் மனதில் நாம் புலன்களால் உணரும் விடயங்களில் "எதிர் பார்க்கப்படும் புலனறிவினை" (perceptual expectancy) கட்டமைக்கிறோம். இதற்கு ஒரு உதாரணத்தினைப் பார்ப்போம், இலங்கை - அவுஸ்திரேலியா கிரிக்கட் ஓட்டப்போட்டியொன்றை இலங்கையர் ஒருவரும்  அவுஸ்திரேலியரொருவரும் பார்ப்பதாக வைத்துக்கொள்வோம், இலங்கையர் இந்த பந்தயத்தில் இலங்கை வெல்ல வேண்டும் என்று "எதிர்பார்க்கப்படும் புலனறிவினை" தனது நாடு என்ற எண்ணத்தின் மூலம் மனதில் கட்டமைப்பார், பின் இந்த கட்டமைக்கப்பட்ட புலனறிவுடன் அந்த பந்தயத்தினை பார்க்கும் போது இலங்கை அணி தோற்க நேர்ந்தால் அந்த நபரது மனம் தோற்றதற்கான காரணம் என்ன என எண்ணும்? பலவிதத்தில் அவுஸ்திரேலியா தப்பாட்டம் ஆடியது, நடுவரது தீர்ப்பு பிழை, அணித்தலைவரது திறைமை போதாது என பலவாறாக உரைக்கும். இவை உண்மையில் மற்றைய அணியினது திறமை பற்றிய தவறான புலனறிவினை தரும். அதாவது எதிர்பார்க்கப்படும் புலனறிவு மூலம் மனதில் உத்வேகமும் பக்கச்சார்பு என்பன  கட்டமைக்கப்படுகிறது, அதேவேளை செயலில் மன ஒருமையினை அடைவதற்கு இது பெரும் உதவியாக இருக்கின்றது.

மனதின் இந்த "எதிர் பார்க்கப்படும் புலனறிவின்" மூலம் தான் இன்றைய நவீன வியாபார உத்திகள், விளம்பர உத்திகள், ஆன்மீக விளம்பரங்கள், அரசியல், சினிமா என அனைத்து துறைகளும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதாவது மனதின் இந்த தன்மையினைப்பற்றி அறிந்தவர்கள் தான் தலைவர்களாகவும், ஆள்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்தீர்களென்றால் தெரியும், எந்தவோரு விளம்பரமோ, ஆன்மீக தலைவரது உரையோ, அரசியல் தலைவரது பேச்சோ ஒரு சமூகத்தின் அல்லது குழுவின் மனதில் "எதிர் பார்க்கப்படும் புலனறிவின்" கட்டமைப்பதாகவே இருக்கும். உங்களது மனதில்  "எதிர் பார்க்கப்படும் புலனறிவு" கட்டமைக்கப்பட்ட பின் நீங்கள் அந்த கட்டமைப்பிற்கு ஆதரவாகவும் பக்கசார்பானதாகவும் உங்களது புலனறிவினை ஆக்கிகொள்வீர்கள். இறுதியாக இதனால் ஏற்படும் நன்மைகளிற்கும் தீமைகளிற்கும் நீங்களே பொறுப்பாளியாகின்றீர்கள். உங்களுக்கு வரும் பிரச்சனைகளின் மூலம் இங்குதான் ஆரம்பமாகிறது. நீங்கள் இருக்கும் சூழலிற்கு ஏற்றவாறு உங்களது "எதிர் பார்க்கப்படும் புலனறிவு" கட்டமைக்கப்படாத போது உங்களது மன உத்வேகம் பாதிக்கப்படும், உதாரணத்திற்கு பல்வேறு சமூகங்கள் வாழும் எமது நாட்டில் அச்சமூகத்தின் மத்தியில் தவறான "எதிர் பார்க்கப்படும் புலனறிவு" கட்டமைத்ததன் விளைவுதான் எமது நாட்டில் நாம் அனுபவித்த துயரத்திற்கு மூலமாகும். இது உண்மையான புலனறிவிலிருந்து, உண்மைபிரச்சனையிலிருந்து எம்மை திசை திருப்பி ஆட்டிப்படைக்கும். மூளைச்சலவை என்பது கூட "எதிர் பார்க்கப்படும் புலனறிவினை" ஒருவரது மனதில் கட்டமைப்பதுதான்.  

மிகுதி நாளை தொடரும்...

1 comment:

  1. சிறப்பான விளக்கங்கள். அருமையான உதாரணம்..

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...