குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Monday, August 08, 2011

ஜோதிட தத்துவ விஞ்ஞானம் ‍-02


பௌதிகவியலில் எந்த பொருளின் இருப்பை குறிப்பிடுவதற்க்கும் சில கணித ஆள்கூறுகளை பயன் படுத்துவர் ஆள்கூற்றுகேத்திரகணிதம் அறிந்தவர்களுக்கு தெரியும் ஒரு பொருளின் இருப்பை குறிப்பிட X, Y, Z என அச்சுகளை பயன்படுத்துவர். பின்பு அதன் அசைவுகளை வரைபுகளில் குறிப்பிடுவதற்கு சார் மாறி,சாராமறி என அதன் தொழிற்பாடுகளை விளங்கப்படுத்துவர். இது போல் பிரபஞ்சம் எனும் வரைபில் மனிதனது இருப்பை, தொழிற்பாடுகளை விளங்கப்படுத்தும் வரைபு முறைதான் ஜோதிடம்.

ஒரு புள்ளியினைச் சுற்றி 360 பாகையிலான வட்டம் காணப்படுகிறது. பூமியினை புள்ளியாக எடுத்தால் ராசிமண்டலம் அதன் சுற்றளவாகின்றது. பூமிக்கும் இந்த ராசி மண்டலத்திற்க்கும் இடையில் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், சனி, வியாழன், செவ்வாய் ஆகிய ஏழுகோள்களும் காணப்படுகின்றது. ராகு, கேது என்பன கிரகங்கள் அல்ல, அவை சார்புப் புள்ளிகள்.

இதனை மேலும் தெளிவாக விளங்கிக்கொள்ள‌ த‌ற்கால விஞ்ஞான ஒப்பீட்டின் மூலமும் அறிந்து கொள்ளலாம். செயற்க்கைக்கோள், விண்ணில் சுழலும் போது எவ்வாறு கீழுள்ள வாங்கி சமிஞ்ஞைகளை பெறுகின்றதோ அது போல் இந்த பூமியில் உள்ள அனைத்து பொருட்களும் இந்த நட்ச்சத்திர மண்டலங்களிலிருந்து அதற்க்குத்தேவையான இயங்கு சக்திகளைப்பெறுகின்றன. இந்த சஞ்ஞைகளின் அளவுகளை கூட்டி குறைப்பதற்க்கு இடையில் பெருப்பாக்கிகள்(Boosters) காணப்படும். அவைதான் இந்த நவகோள்கள். செயற்க்கைக்கோள்கள் இருக்கும் அமைவிடம், அமைவுக்கோணம், சார்பு, தூரம் என்பவற்றிற்கேற்ப சமிஞ்ஞைகளது தெளிவு மாறுபடுவது போன்று, ஒவ்வொரு மனிதனது குணம், அமைப்பு, வாழ்க்கை என்பன இந்த நட்ச்சத்திர மண்டலத்தினாலும், நவகோள்களினாலும் இருக்கும் ராசிமண்டலம், பூமியின் அமைவிடம், தூரம் என்பவற்றால் அவை தீர்மானிக்கப்படுகிறது.

ஒவ்வொரு கிரகமும் குறித்த ராசியில் நிற்க்கும் போது பொதுவான ஒரு சமிஞ்ஞையும், நட்ச்சத்திரத்தில் இருக்கும் போது தெளிவான சமிஞ்ஞையினையும் தரும். இதன் படி நமது வாழ்க்கையில், சூழலில் இருக்கும் ஒவ்வொரு செயலின் விளைவுகளை நாம் கணித்துக்கொள்ளலாம். தற்போது சூழலியல் ஆய்வுகளிலும், விண்ணியல் மற்றும் பலதுறைகளில் பரவலாக பயன்படுத்தப்படும் செய‌ற்கைக்கோள் தொழில்நுட்பம் போன்றதுதான் ஜோதிடம். ‌

இந்த ச‌மிஞ்ஞைகளது தெளிவு, தரம் என்பவற்றைக் ஜோதிடத்தில் குறிக்கும் வார்த்தைகள் தான் உச்சம், நீச்சம், நட்பு, பகை, வக்கிரம் என்பன.

4 comments:

 1. ஜோதிடம் பற்றி ஒரு புதிய கோணத்தில் விளக்க முயற்சி செய்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.

  பகிர்வுக்கு நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. தியானத்தில் எந்தப்படிநிலையில் கோள்களின் தாக்கம் அற்றுப்போகும் ? நன்றி

  ReplyDelete
 3. நல்ல கேள்வி, இது மறைமுகமாக யோகத்தினை தியானத்தினை எப்படி செயற்பாட்டறிவில் (practical knowledge) கொண்டுவரலாம் என்பதை ஆராய்கிறது, இதற்கு பதிலாக கிரகங்களின் இயக்கமும் மனமும் என்ற கட்டுரை விளக்கம் பதியப்படவுள்ளது, தொடர்ச்சியாக பதிவினை பாருங்கள், இதிலிருந்து உங்களுக்கு தேவையான முழுமையான பதிலினையும் கிரகதாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையினையும் கற்றுக்கொள்ளலாம்.

  ReplyDelete
 4. மிகவும் புரிதலுடன் கூடிய பதிலுக்கு நன்றி.பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02

1920களின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட (ஏற்கனவே இயற்கையில் இருந்த ஒன்று அறியப்பட்ட) நிகழ்வு உலகின் சிந்தனைப்போக்கை பெருமளவில் புரட்டிப்போட...