குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Wednesday, August 10, 2011

யோக சாதனையில் எந்தப்படிநிலையில் கோள்களின் தாக்கம் அற்றுப்போகும் ?

சித்ரா எனும் வாசகர் கேட்ட கேள்வி: தியானத்தில் எந்தப்படிநிலையில் கோள்களின் தாக்கம் அற்றுப்போகும் ?

இந்தக் கேள்வி யோக சாதனையில் எந்தப்படிநிலையில் கோள்களின் தாக்கம் அற்றுப்போகும் ? என அமைந்திருக்க வேண்டும் என்பது எமது அபிப்பிராயம் ஏனேனில்  தியானம என்பது யோக சாதனையின் உயர்ந்த ஒரு படியாகும். ஒருவருக்கு தியானம் கைவருவதற்கு முன்னராக சில படிமுறைகள் இயமம, நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை சித்தியாக வேண்டும், அதன் பின்னரே   தியானம் கைகூடும். இந்த நிலையில் கிரக தாக்கத்திலிருந்து விடுபடலாம் என்பது பற்றிய விளக்கத்தினை தற்போது பார்ப்போம்;

இந்தக் கேள்விக்கான பதிலை சித்த வித்தைப்படி அணுகுவோமேயானால் மனம், சித்தம் ஆகிய இரண்டினதும் செயற்பாட்டினையும்  புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே மனம் பற்றிய பதிவிலும், சித்ரகுப்தனார் பற்றிய பதிவிலும் இதுபற்றி விளக்கியுள்ளோம், அப்பதிவுகளையும் பார்க்க வேண்டுகிறோம்.


 1. http://yogicpsychology-research.blogspot.com/2011/08/blog-post_7353.html
 2. http://yogicpsychology-research.blogspot.com/2011/07/blog-post_1036.html

ஒவ்வோருமனிதன் பிறக்கும் இடம் மற்றும் நேரத்தின் படி (இதுவும் அவனது முற்பிறப்பு கணக்கின் படிதான்!) அவனது உடல், மனம், மனத்தின் கூறாகிய சித்தம் என்பன வடிவமைக்கப்படுகின்றன. இதனுடைய வலிமையினை கோள்கள் தீர்மானிக்கின்றன! 

அதாவது நீங்கள் செய்த கர்மத்திற்குரிய விளைவு தரும் பொறுப்பு குறித்த கிரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் செயலுக்கான காரணத்தினை (உங்களுடைய இன்ப துன்பம், செல்வம் வறுமை என்பவற்றை ) நீங்களே ப்ரோகிராம் எழுதுகிறீர்கள், அதனை ஆக்டிவேட் பண்ணுவதற்குரிய கொமாண்ட் குறித்த கிரகத்தினால் வழங்கப்படுகிறது. இதுவே ஜோதிடத்தில் காரகத்துவம் எனக்குறிக்கப்படுகிறது.

இது எப்படி செயற்படுகிறது? எந்தவொரு செயலை நீங்கள் செய்ய வேண்டுமாயினும் அதற்குரிய சித்த பதிவினை கொண்டிருத்தல் வேண்டும்.   பின்பு அந்த சித்த பதிவு வலிமை பெற்று செயல் நிலைக்கு வர வேண்டும்.  எப்படியெனில் நீங்கள் செல்வம் பெறவேண்டும் என உங்கள் சித்தத்தில்  ஆழமான பதிவு இருக்குமானால், கிரகத்தின் வலிமையால் அது செயலுருவும் பெறும், அதேபோல் தடை படவும் கூடும், எப்படியெனில் குறித்த கிரகம் உங்களது சித்தம் எனும் ஆழ்மனதிலுள்ள சித்தப்பதிவினை  தூண்டி, மேல் மனதினூடாக செயல் நிலைக்கு கொண்டு வருகிறது. ஆக கொமாண்ட் கிரகத்தினிடமிருந்து வந்தாலும் அது உங்களது சித்தத்திற்கூடாகத்தான் விழிப்படைந்து செயல் நிலைக்கு வர வேண்டும்.

இதனை ஒரு உதாரணம் முலம் விளங்குவோம்,  எப்படியெனில் ஏழரைச்சனி காலத்தில் விபத்து நடைபெறும் என உங்கள் கர்மா இருக்குமானால் குறித்த ஒரு நாளில் வழமைக்குமாறான பாதையில் செல்ல எத்தனித்து விபத்தில் சிக்கிக்கொள்வீர்கள், பின்பு சிந்தித்துப்பார்த்தால் அடே! வழமையாக இந்தப்பாதையில் செல்வதில்லையே பிறகேன் இந்த பாதையில் வந்தோம்? என எண்ணி வருத்தப்படுவீர்கள், இது அந்த கிரகம் இதுபோல் நன்மையும் நடைபெறும். இந்த உதாரணத்தின் மூலம் கிரகங்கள் எப்படி செயற்படுகின்றன என்று விளங்கியிருக்கும். ஆக சித்தத்தின் தூண்டல்களை உங்களால் கட்டுப்படுத்த முடியுமானால் கிரகத்தின் தாக்கத்திலிருந்து விடுபடமுடியும். உங்கள் சித்தத்தினை துண்டியதால் வந்த விளைவாகும், சரி இதனை எப்படி பயிற்சியில் கொண்டு வருவது?

 1. இதற்குத்தான் யோகத்தில் "பிரத்தியாகாரம்" எனும் படி உள்ளது, மனதினை வெளித்தூண்டல்களிலிருந்தும் உள்தூண்டல்களிலிருந்தும் விலகி இருத்தல் எப்படி என்பதனைப்  பயிற்சித்தல்!  
 2. ஆழ்ந்த மன ஒருமைப்பாட்டின் மூலம் சித்தத்தில் தகுந்த பதிவினை பதிப்பித்தல்.இதனை தியானம் தாரணை, சுய ஹிப்னாடிசம் மூலமும் சாதிக்கலாம். 
 3. இவையெல்லாவற்றையும் விட இலகுவான வழி தகுந்த இஷ்ட தெய்வ உபாசனையினை முறைப்படி குருமூலம் கற்று பக்தியுடன் செய்துவருதல். 
 4. இதுதவிர சித்தவித்தையில் சில இரகசிய முறைகள் உள்ளது, அவை பொதுவில் பதிய இயலாதவை. 
இவற்றை தவிர வேறு பரிகாரம் என்று அர்த்தமற்ற சடங்குகளை செய்வதோ, காசு கொடுத்து அர்ச்சனை செய்வதோ எதுவித பலனையும் முழுமையாக தராது என்பது அனுபவ  உண்மை. 

.      

2 comments:

 1. நல்ல விளக்கம்.. சாமானியர்களுக்கு, எவ்வளவுதான் விலகிப் போனாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் கிரகங்களின் பாதிப்பு கொஞ்சமாவது இருக்கும்.. கிரகங்களின் பாதிப்பு வேண்டாம் என்ற நிலையை அடைய முடியுமா என்பதே ஒரு ஆராய்ச்சிக்குறிய விசயம். ஏனெனில் நன்மை, தீமை இரண்டும் செய்வதும் கிரகங்களின் பணி. நன்மையும் தீமையும் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை.

  பகிர்வுக்கு நன்றி..


  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. சித்தர்கள் ஆசீர்வாதத்தில் விளக்கம் கிடைத்தது.விளக்கத்திற்கு நன்றி.இறைஅருளும் குருஅருளும் கூடிவரும்போது எல்லாம் முகம்முகமாகும்.மீண்டும் மிக்க நன்றி.

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...