குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Saturday, August 06, 2011

மனம் பற்றிய சித்தவித்யா விளக்கம்


சித்த யோகத்தின் அடிப்படைகளில் ஒன்று மனம் என்பது என்னவென்று அறிந்து தெளிந்து கொள்ளுதலாகும். இதன் மூலம் தன்னை அறிதல் வசப்படும் என்பதுதான் உண்மை. இந்தப்பதிவின் நோக்கம் மனித மனம் எவ்வாறு செயற்படுகிறது என்பதனை அறிந்துகொள்வதாகும். இதனை இலகுவான நடையில் அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கேள்வி பதில் வடிவில் தந்துள்ளோம். இந்த பதிவின் பயன்பாடு பற்றி பின்னூட்டமிடவும்.
 1. மனம் என்ற சொல் எதனைக் குறிக்கிறது?: மனம் என்பது மனிதன் என்ற சொல்லிற்கு அடிப்படையானது, மனம் உடையவன் மனிதன், எந்த மொழியில் நீங்கள் பார்த்தாலும் மனிதனைக்குறிக்கும் சொல் அந்த மொழிக்கான மனம் எனும் சொல்லுடன் தொடர்புடையதாகவே இருக்கும். ஆக மனம் என்பது மனிதனுடைய ஒரு கூறு.
 2. மனம் எதனால் ஆக்கப்பட்டுள்ளது?:மனமானது மேல்மனம், ஆழ்மனம், தெய்வமனம் எனும் கூறுகளை உடையது, இதை இப்படி மூனறாக பகுத்தாலும் ஒன்றுடன் ஒன்று இரண்டறக்கலந்தது. ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டது. ஒவ்வொரு மனத்தினதும் சேமிப்பு பகுதிதான் சித்தம் எனப்படும் ஆழ்மனம்,
 3. சித்தம் என்பது என்ன?:சித்தம் என்பது ஆழ்மனம் எனப்படுவது, அதாவது சேமிப்பகம், அத்துடன் மேல்மனத்திற்கும் தெய்வ மனத்திற்கும் இணைப்பாக இருக்கும் ஒரு இடைப்பாலமும் ஆகும். 
 4. மனது எதனால் ஆக்கப்பட்டுள்ளது?:மனம் ஒலி, ஒளி போன்றவொரு சக்தியாகும். ஆக இந்த சக்தியலைகளுக்கு பொருந்தும் பௌதீகவிதிகள் மனத்தின் செயற்பாடுகளுக்கும் பொருந்தும். 
 5. மனதின் செயற்பாடுகள் எவை?: மனத்தின் முதலாவது செயற்பாடு எண்ணம்: எண்ணம் புலனறிவாலும் சித்தத்தினாலும் உருவாக்கப்படுகிறது. மனமானது எமது புலன்களால் பெறும் தூண்டலுக்கேற்றவாறும் சித்தத்திலுள்ள பதிவிற்கேற்றவாறும் திரிந்து அறிவாகவும்/புத்தியாகவும் மாறும். இப்படி மனதினூடாக பெறும் புலனறிவு சித்தம் எனும் பகுதியில் சேர்த்து வைக்கப்படும். இதுவே நினைவு/வாசனை எனப்படும். எண்ணங்களின் சேகரிப்பு சித்தம் எனப்படும் ஆழ்மனம். 
 6. "சித்தத்தில் சேகரிக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட எண்ணங்கள்" புத்தி: இந்த வாசனைகள் சித்தத்தில் சேரும் போது புத்தி உருவாகும். அதாவது முதலில் சேர்ந்த எண்ணங்கள் சித்தத்தில் ஒழுங்கு முறைப்படுத்தப்படுத்தப்படும் போது புத்தியாகிறது. இது மனம் வேறு விடயங்களை பகுத்தறிவதற்கு உதவியாகிறது. சேர்ந்த வாசனைகளை கொண்டு நினைவு நிலையில் ஆராய்தல் விசாரணை எனவும், இல்லாத பொருளைபற்றிய தொடர்சியான எண்ண நினைவு கற்பனை எனவும் சொல்லப்படும். அதாவது புத்தி என்ற ஒரு அடிப்படையை வைத்துக்கொண்டுதான் மனதில் விசாரணையும் கற்பனையும் நடைபெறுகின்றது. 
 7. இதுபோல் தூக்கத்தில் நடைபெறும் செயற்பாடு கனவு: சித்தத்தில் சேகரிக்கப்பட்ட எண்ணங்கள் தூண்டப்பட்டு கனவு உண்டாகிறது. இது ஒழுங்கு முறப்படுத்தப்பட்டதாகவும் இருக்கலாம். அல்லது ஒழுங்க்கற்றதாகவும் இருக்கலாம். 


அன்பர்களது கேள்வி கொண்டு மேலும் விளக்கலாம் என்று எண்ணியுள்ளோம்!

4 comments:

 1. மிகவும் நுட்பமான விஷயங்களைப் பகிர்கிறீர்கள். இவை பெரும்பாலும் வார்த்தைகளை சரியாக நினைவு படுத்தவே என எண்ணுகிறேன்.

  மேல் மனம், கீழ் மனம், ஆழ் மனம் என 3 பகுதி கேள்விப் பட்டிருக்கிறேன். அதை தாங்கள் சித்த முறைப்படி விவரித்திருப்பது அருமை.

  பகிர்வுக்கு நன்றி.

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. அன்புள்ள நண்பரே,

  //மேல் மனம், கீழ் மனம், ஆழ் மனம் என 3 பகுதி கேள்விப் பட்டிருக்கிறேன். அதை தாங்கள் சித்த முறைப்படி விவரித்திருப்பது அருமை.// சிந்தையை தூண்டும் இந்த பின்னூட்டலுக்கு நன்றி,

  உண்மையில் இந்த மனத்தின் பாகுபாடெல்லாம் மனதின் செயற்பாடு, ஆற்றல் வேறுபாடு என்பவற்றை கொண்டு கூறப்படுபவை, சாதாரண மனிதரின் மேல் மனம் அதிகளவு செயற்படும், சற்று வலிமையுடைய சிந்தனையுடையவர்களுக்கு ஆழ்மனம் செயற்படும், தெய்வ சாதனை, தியானம் புரிபவர்களுக்கும், சித்தர்களுக்கு தெய்வ மனம் செயற்படும்.

  இது எவ்வாறு எனில் கிட்டத்தட்ட அரசியல் அதிகார அலகுபோன்றது, மாவட்ட ஆட்சியாளர், மானில முதல்வர், பிரதமர்/ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் போன்றதுதான் இந்த மூன்று மனங்களதும் சக்தி, எனினும் ஒரு நாட்டில் வசிக்கும்பிரஜை அந்த நாட்டின் எந்த பகுதிக்கும் போய்வர அனுமதி உள்ளது போல், மனிதனிற்கு இந்த மூன்று மனத்தினையும் பாவிக்கும் சக்தி உள்ளது. ஆனால் யார் சரியாக பயிற்சிக்கிறார்களோ அவர்களுக்கு அதற்கான வழிமுறை கிடைக்கும்!

  அதேபோல் நாட்டிற்கு நாடு அரசியல் அதிகார அலகு மாறுவதுபோல் மனத்தை பற்றிய பாகுபாடும் ஒவ்வொருவரது அனுபவத்திற்கேற்றவாறு மாறுபடும், இந்த பாகுபாடு விளங்க்கிக்கொள்வதற்காகவே அன்றி ஸ்திரமான உண்மையல்ல! உண்மை எதுவெனில், மனம் என்ற சக்தி ஒன்று உள்ளது, அதனை பல்வேறு ஆற்றல் நிலைகளில் உபயோகிக்கலாம் என்பதும் மனத்தைக்கொண்டு என்னென்ன பயன்பாடு அடையலாம் என தெரிந்துகொள்வதுதான்!

  தொடர்ச்சியாக கட்டுரைகளை படித்து கருத்து தெரிவிப்பதற்கு மீண்டுமொரு முறை நன்றி

  ReplyDelete
 3. அடக்கினும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்
  அடக்கினிம் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே
  கிடக்கினும் இருக்கினுங் கிலேசம் வந்திருக்கினும்
  நடக்கினும் இடைவிடாத நாதசங்கு ஒலிக்குமே. மூன்று மனங்களில் எது சிவவாக்கியர் குறிக்கும்நாதஒலியைக்கேட்க்கும்/ நன்றி.

  ReplyDelete
 4. வாழ்க வளமுடன், உலக சமுதாய சேவை சங்கத்தின் மனவளக்கலை பயிற்சியில் மனம் ஆன்மா,உயிர் மற்றும் இறைநிலை பற்றியும் சித்தர்களின் பல்வேறு மறைபொருள் விளக்கத்துக்கும் எளிய முறையில் கற்பிக்கப்படுகிறது. உதாரணமாக-சித்தம் என்ற சொல்லுக்கு பதில் கருமையம் என்ற ஒன்றை வேதாத்திரி மகரிஷி பயன்படுத்துகிறார். கருமையம் நம் ஒவ்வொருவருக்கும் முதுகுதண்டின் முடிவின் கீழே அமைந்துள்ளது. அதிலே இறைநிலை muthal தற்போதைய நிகழ்வு வரை அனைத்தும் பதிவாகயுள்ளது. அப்பதிவுகளே எண்ணங்கள் ஆகும்.மனம் என்பது உயிர் எனும் சக்தியில் இருந்து வெளிப்படும் ஆற்றல். இது ஒரு செயற்படுபொருலாகும். இதற்க்கு என thani குணம் கிடையாது. கருமையத்திலிருந்தோ allathu ஸூழ்நிலையால் எந்த எண்ணம் எழுச்சி பெறுகிறதோ அந்த எண்ணமாக மாறி செயல்படும்.ஒவ்வொரு செல்களிலும் பதிவுகள் ஏற்படும் அப்பதிவுகளே மேல்மானமாகவும்,மூளையிள் பதிவாகும் பதிவுகள் நடுமனமாகவும், கருமையத்தில் பதிவதே ஆழ்மனமாகவும் வழங்கப்படுகிறது. இவ்வகையில் எளிய முறையில் விளக்கம் கொடுக்கப்படுகிறது மனவளக்கலை மன்றங்களில்.

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குவாண்டம் இயற்பியல் அடிப்படைகள் - 01

குவாண்டம் இயற்பியல் குவாண்டம் இயற்பியல் 1800ம் ஆண்டளவில் அணுக்களின் உபதுணிக்கைகள் பற்றிய கருதுகோளுடன் வளர்ச்சி பெற்றது. இதை குவாண்டம் ...