- கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தான் என்பதும் அவன் எங்கும் எதிலும் நிறைந்துள்ளான் என்பதும் அனைத்து மதங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, அவனுடைய குணங்கள் மனிதனை தவிர்ந்த வேறெந்த படைப்புகளிலும் முழுமையாக வெளிப்படவில்லை. ஆகவே மனிதன் தனது தெய்வீக குணங்களை விழிப்படையச் செய்யாமல் வேறெந்த வழிகளிலும் அவனை அடையமுடியாது.
- கடவுள் என்பது ஒரு மனிதனே, பல தலை, கால்களுடைய உருவமோ, சொர்க்கம் அல்லது மேலுலகத்தில் வசிப்பவனோ அல்ல, அது தூய உணர்வுமய சக்தியாக எல்லவற்றிலும் வியாபித்து எங்கும் பொருளாகவும், சக்தியாகவும் நிலைகொண்டு ஆக்கி, அமைத்து, அழித்து தனது செயலை நடாத்தி வருகிறது.
- மனிதன் அனைத்து நல்லது கெட்டது என்பவற்றை கடவுளின் சக்தியினூடாக அவனுடைய விருப்பத்தின் பெயரில் செய்கிறான், ஆனால் அவனுடைய விருப்பத்தின் பெயரில் செய்பவற்றிற்கான பலனையும் அவனே அனுபவிக்கின்றான்.
- கடவுள், ஆன்மா மற்றும் சக்தி, பொருள் என்பன அழிவற்றவை இவை ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியவையல்ல, ஒன்றினுள் ஒன்றாக கலந்து உள்ளவை.
- மக்கள் கோயிலில் உள்ள விக்கிரகங்களை கடவுள் எனக்கருதுகிறார்கள், இது சுத்தமான அறியாமை. கோயில்,விக்கிரகங்கள் என்பன கடவுளின் உண்மைத்தத்துவங்களை படைப்புத்தத்துவங்களை விளக்கும் சின்னங்கள். புராணங்களில் எழுதப்பட்டுள்ள கடவுளரின் கதைகள் உண்மையில் எப்போதோ, எங்கோ நடைபெற்றதல்ல. இவை மனிதனினுள் நடைபெறும் தெய்வ, அசுர சக்திகளிற்கிடையிலான போரட்டங்களை உருவகப்படுத்தி கூறப்பட்டவை. மற்றும் தற்போது கோயில்கள் வர்த்தக நிலையங்களாகவே காட்சியளிக்கின்றன. உண்மை பக்தன் இத்தகைய இடங்களிற்கு செல்வதாலோ, வழிபடுவதாலோ உண்மையான ஆன்மீகத்தினை பெறமுடியாது. உண்மை ஆன்மீக அதிர்வுகள் இவ்டங்களில் காணப்படுவதே இல்லை. ஆகவே இவ்வாறான இடங்களிற்க்குச் சென்று வழிபடுவதை விட வீட்டலிருந்தே தெய்வ வழிபாடு செய்வது நன்மையான ஒன்று. அதைவிட பெரிய அறியாமை கடவுளைத்தேடி பல இடங்களிற்க்கு யாத்திரை செய்வது. யார் எல்லாவற்றினுள்ளும் நிறைந்து, அனைத்தையும் விட அதிக விளக்கமாக எம்மில் நிறைந்துள்ளானோ அவனை தன்னுள் அறியாதவன், அனுபவிக்காதவன் இந்தப்பிரபஞ்ஞத்தில் எங்கும் அவனை அறியமாட்டான். “ அமர்ந்து, உன்னுள் நோக்கி கடவுளை உணர்”இதுவே உபதேசமாகும்.
- தனது ஆசைகள், நனமைகளை பூஜை, உபாசனை மூலம் நிறைவேற்றிக்கொள்ள விரும்பும் பக்தன் முதலாவதாக “உபாசனா தீட்சை” சித்தி பெற்ற குருவிடமிருந்து பெறவேண்டும். தீட்சையென்பது பக்தனிற்க்கு புதிய வேடங்களை, உடைகளை அணிவிப்பதோ, கால் கைகளில் குறியிடுவதோ அல்ல. இவை சுயநலம் மிக்க மதத்தலைவர்களால் உருவாக்கப்பட்ட முறைமைகள். தீட்சையென்பது பிராண-காந்த அலைகளளுடைய ஆன்ம அதிர்வை பக்தனில் செலுத்தி அவனை அச்சக்தியை உறிஞ்சச்செய்து பின்பு மெதுவாக பூஜை, உபாசனை என்பன மூலம் உயர்வான அதிர்வுடைய சக்தியலைகளை குறிப்பிட்ட தெய்வத்தினுடைய அதிர்விற்க்கு பரிவுறச் செய்து அவ்வலைகளை கவர்ந்து தனக்குரிய நன்மைமையினைப் பெறுவதே தெய்வ உபாசனை, பூஜைகளின் விளக்கம்.
- ஒருவன் பல்லாண்டுகாலம் பூஜை, உபாசனைகளை முறைதவறாமல் தினமும் செய்து வந்தாலும் தியான சித்தி பெறாமல் அவன் தெய்வ சக்தி தன்னில் விழிப்படைந்திருப்பதை அனுபவிப்பதில்லை. ஆதலால் சித்த யோக பூஜைமுறைகளில் தியானம் ஒரு முக்கிய அங்கமாக்கப்பட்டுள்ளது.
- தற்காலத்தில் மக்கள் இறைவனின் அருளைப்பெறுவதற்காக கோயில்களுக்கு பல பொருட்களை காசு பணத்தை அளித்து வருகின்றனர். ஆனால் எமது சித்த யோக கொள்கைப்படி “கடவுளே இப்பிரபஞ்ஞத்திலுள்ள அனைத்தையும் படைத்தவனாதலால் அவனிற்கு எந்த ஒரு பொருளும் பக்தனிடமிருந்து அவசியமானதல்ல, அத்துடன் இந்த காணிக்கைகள் ஒருவனிற்கு கடவுளின் அருளை ஆசியை பெற்றுத்தராது”. உண்மையாக அன்புள்ள தந்தை தன் பிள்ளையிடமிருந்து உண்மை அன்பைத்தவிர எதையும் எதிர்பார்ப்பதில்லை, அதுபோல் கடவுள் தன் பக்தனிடமிருந்து உண்மைப் பக்தி ஒன்றைத் தவிர வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை. சாமி ஆடுதல், வேல் குத்துதல், காவடி எடுத்தல், மலையேருதல், கோயிலைச் சுற்றிவருதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தீமிதித்தல், திருவிளாக்கொண்டாடுதல் என்பன எப்போதும் கடவுளின் அருளைத் தருவதில்லை. அதே நேரம் உண்மையு பக்தியுடன் செய்யப்படும் பிரர்த்தனைகள், முழுமையான பாவனையுடன் செய்யப்படும் வேண்டுதல்கள் பக்தனுடைய நோய்களை, வறுமையை நீக்குவதுடன் அவன் விரும்பிய பலன்களைத்தருகின்றது. பிரார்த்தனை புரியும் போது அவற்றில் எதிர்மறை அர்த்த சொற்கள் அவற்றில் இடம் பெறாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும். தமது இஷ்ட தெய்வங்களிடம் தத்தமது இடர்ப்பாடுகளிஅயும் இழப்புக்களையும் துன்பங்களையும் சொல்லிப் புலம்பி அழுவது இற்றைய நாட்களில் பக்தர்களிடம் காணப்படும் ஒரு பழக்கமாய் உள்ளது. இது தவறானது. நவீன பிரார்த்தனையில் பல பிழையான முன் மொழிவுகளும், அறிவீனமான விளக்கங்களும் கணப்படுகின்றது. ஒரு பக்தன் தனது பேரிடர்களை கடந்து இன்பமான வாழ்வை வாழ்வதற்கான விடயங்களை தனது இஷ்ட தெய்வங்களிடம் வேண்டிக்கேட்கவேண்டும்.; ஆனால் மற்றவர்கள் மகிழ்ச்சியாய் இருக்க தனக்கு மட்டும் பற்பல பிரச்சனைகள் நேரும்படி விதித்துவிட்டதாக கடவுளை நொந்துகொள்ளக்கூடாது.. அதேசமயம் பகவத்கீதையில் கிருஷ்ணபரமாத்மா உபதேசித்ததைப் போன்று ஒருவர் தமது கஷ்டங்களிலிருந்து மீள்வதற்கானதும் பரம் பொருளைச்சரணடைவதற்கான வழிமுறைகளை சித்த யோகத்தின் படி அடையலாம். அதன் மூலம் குறித்த ஒரு பக்தர் தனக்கு எது சிறந்தது எனத் தேர்ந்து அவ்வழிச் செல்லலாம்.
- பக்தி, கர்ம, ஞான யோகங்கள் அல்லது வேறொரு சாதனை – இவற்றில் எதுவாக இருந்தாலும் ஒருவன்/ஒருத்தி தூய்மையானதும், அறவழியிலானதுமான வாழ்க்கையைக் கைக்கொள்ளாதவிடத்து அவரது இலக்கினை அடைவதற்கான முயற்ச்சிகள் எவற்றிலும் வெற்றி கிட்டவே கிட்டாது. எப்போதும் குரூரமானது, தீங்கிளைப்பதுமான சிந்தனைகளால் நிறையப்பெற்ற மனத்தையுடைய ஒருவன் எவ்வழியிலும் கடவுளின் கடாட்சத்தைப் பெற்றுய்ய மாட்டான், அவ்வாறான ஒருவன் தனது எண்ணங்களை கூர்ந்து கவனித்து கட்டுப்படுத்துவாதோடல்லாது அவற்றை பக்தி சார்ந்ததாகவும் நலம் பயக்கக்கூடியதாகவும் மாற்றிக்கொள்ளா வேண்டும்.
- தனது கர்மவினையின் தாக்கங்கள் ஆழப்படிந்துள்ள இடமான சித்தத்தை தூய்மைப்படுத்தும் வரையில் ஒருவர் கடுமையான சாதனைகளை பல நீண்டகாலம் செய்தாலும் அவரிற்க்கு எவ்வித பலாபலனும் கிட்டாது.
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Tuesday, August 02, 2011
சித்த யோக தெய்வ ஆன்மீக கொள்கை விளக்கம் - 01
பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்
பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள் எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால் சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...
-
குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் தனது ஸௌபாக்யா மந்திர சாதனா ஒலி நாடாவில் மூன்று ஆசீர்வாத மந்திரங்களை கூறியுள்ளார். இந்த மூன்று மந்திரங்க...
நிறைய விசயங்களை ஒரே பதிவில் இடுவதற்குப் பதில் ஒவ்வொரு கருத்துக்கும் விளக்கங்கள் கூறி தனித்தனிப் பதிவுகளாக இட்டால் சிறப்பாக இருக்குமே...
ReplyDeleteஅற்புதமான கருத்துக்கள்.. பகிர்வுக்கு நன்றி.
http://anubhudhi.blogspot.com/
நல்லது நண்பரே,இந்தப்பதிவின் நோக்கம் முழுமையான அறிமுகத்தினை அறியத்தருவதுதான், பதிவுகளை தொடர்ந்து பாருங்கள் இதுதொடர்பான முழுவிபரங்கள் குருவருளால் மேலும் வெளியாகும்
ReplyDeleteThangal gyana pichai pera petrathuku migavum magizchi. Thangal karunaiku miga nanri. your service is the blessing of siddhars to ordnary peopple like me.. I bow down brother
ReplyDeletevikraj
வணக்கம்,
ReplyDeleteஇன்றுதான் முதல் முறையாக தங்களின் வலைத்தளத்தை பார்வையிட நேர்ந்தது.
ஒரே நேரத்தில் பல பதிவுகளை படித்தேன். சித்த யோகத்தை பற்றிய பல பதிவுகள் தெளிவாக உள்ளது.
சித்த யோக தெய்வ ஆன்மீக கொள்கை விளக்கம் என்னும் இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
தங்கள் பதிவுகளில் பாஷாணங்களைப் பற்றிய விளக்கங்கள் தெளிவாக இல்லை. நான் சித்த மருத்துவத்தை அறிந்தவன் என்பதால் சில விஷயங்களை தனிப்பட்ட முறையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன். ஏன் எனில் சித்த மருத்துவத்தில் பாஷாணவைத்தியம் என்ற ஒரு முறை உள்ளது. இதனை எனது வைத்திய ஆசான் சொல்லிக்கொடுத்துள்ளார். பாஷாண வைத்தியத்தின் தத்துவத்தையும் அறிவித்துள்ளார். அப்படி இருக்கும் போது தாங்கள் பாஷாணங்கள் விஷத்தன்மையுடையது. அதனை சுத்தி செய்து, உண்பதும் கெடுதி விளைவிக்கும் என்று கூறியுள்ளீர்கள்.
நம்மை (நாமிருவரைப்) பொறுத்தவரை, நாம் சித்த யோகம் பற்றி விளக்கவுள்ளோம். அதில் பாஷாண சப்ஜெக்ட் பற்றிய விவாதம் தேவையெனில் சுருக்கமாக பேசலாம். இதனால் நமது சித்த யோக பாதை மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம். நமது வாழ்வியல் நோக்கம் எது என்பது உங்களுக்கு தெரியும் என்று நான் நினைக்கின்றேன்.
அன்புடன்,
பா.முருகையன், வடலூர்.
www.siddharkal.blogspot.com