குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, August 05, 2011

காயத்ரி சித்தர் அருளிய ஞானகுரு


இன்று பலரும் சித்தவித்தை ஆன்மீகம் தமக்கு சரிவராது, வயது போனபின்புதான் ஆன்மீகம், அல்லது அவை அடைய முடியாத ஒன்று எனவும், குறித்த ஒரு சில ஜாதியினரோ பரம்பரையினரோ மட்டுமே அடையக்கூடியது எனவும் எண்ணி வருகின்றனர். ஆனால் உண்மையில் ஒருவன் உலகவாழ்விலும் சரி, ஆன்மீக வாழ்விலும் சரி எந்த ஒரு விடயத்தினை அடைவதற்கு தேவையானவை மூன்று விடயங்கள் மாத்திரமே ஆகும். அவை எவை?
  1. முயற்சி
  2. பண்பு
  3. பக்குவம்

இவற்றை பெற்றுவிட்டால் மற்றையவை தானாக வருமென்பது ஆன்றோர்கள் வாக்கு.

இந்த நூல் ஆதிசங்கரர் வடமொழியில் எழுதிய "சாதனா பஞ்சகம்" என்ற அரிய நூல், இதற்கு பலரும் உரையெழுதியிருக்கின்றார்கள், ஆனால் எமது குரு நாதர் எழுதிய உரையைபோல் எங்கும் காணப்படவில்லை என்பது எமது துணிபு, இது மிகைப்படுத்தலாக இருக்கலாம், ஆயினும் தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது.

எனது வித்யா குருவான காயத்ரி சித்தரை நான் சந்தித்த சித்தவித்தை பயில வேண்டும் என்ற ஆர்வத்தினை தெரிவித்த போது இதனை தந்து ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக பலமுறை படிக்கும் படி கூறினார், இவற்றிலுள்ள கருத்துக்கள் எமது சித்தம் எனும் ஆழ்மனதில் பதிந்தபின்புதான் ஒருவர் சித்தவித்தை கற்பதற்குரிய தகுதியினை பெறுவான் என்று அடிக்கடி கூறுவார். இதனை நான் தொடர்ந்து பலவருடங்களாக படித்துவருகிறேன். 

இவ்வரிய நூலை குருதேவரின் உத்தரவுக்கமைய சித்தவித்தை பயின்று இன்புறவிரும்பும் அன்பர்களுக்காக இங்குபதிகிறோம். கற்று பயன் பெற்றால் எமக்கும் தெரிவியுங்கள். 

ஸத்குரவே நமஹ!

சுமனன்

ஞானதேடலும் காரிய சித்தியும் - அறிமுகம்

அது வேண்டும் இது வேண்டும் என்று அலையும் மனிதனெல்லாம் தங்கள் தேவைகளெல்லாம் நிறை வேறாமலே மண்ணுலகில் பரிணாமம் அடைகின்றன. இனி நான் பெற வேண்டியது எதுவுமில்லை எனக் சொன்ன மனிதனுமில்லை; தேவனுமில்லை. எல்லருக்கும் ஏதாவது ஒரு தேவை இருந்து கொண்டுதானிருக்கிறது. அதைப்பெற்று இன்புற ஆசைப்படுவது இயல்பு. ஆனால் ஆசைப்படுவதால் மட்டும் தேவைகள் பூர்த்தியாகி விடாது. அதை பெறுவதற்கு பெரும் முயற்சியும் செய்ய வேண்டும். விடாமுயற்சியால் பெறமுடியாதது ஒன்றுமில்லை என்பது பலரின் கருத்து. ஆனால் இது ஒரு வகையில் சரியில்லை. விடாமுயற்சியைஸ் செய்தவர்கள் எல்லோருமே வெற்றி பெற்றவர்களென்று சொல்ல முடியாது. 

வாழ்க்கை முழுவதும் முயன்று போராடியும் காரியம் வெற்றி பெறாமல் கருத்தழிந்து போனவர்கள் பலருளர். அப்படியானால், நிச்சயாமாஉ ஒரு காரியத்தில் வெற்றி பெற வழியே இல்லையா?பல வருடங்கள் மழையே இல்லாமல் நிலத்தின் வெகு ஆழம் வரையும் காய்ந்து போயிருக்கும் பூமியில் நீர் பெறுவேன் என்று சொல்லி ஒருவன் விடாமுயற்சியுடன் கிணறு தோண்டினால் பலனடைவானா?

அல்லது தீய்ந்து போன விதையை அறியாமல் நிலத்திலிட்டு நிச்சயமாய் கனி பெறுவேன் என எருவும் நீரும் இடுபவன் கனி பெறுவானா?

அப்படியானால் என்னதான் வழி?

ஒரு காரியத்தை விடாமுயற்சியுடன் தொடங்குமுன் அக்காரியம் வெற்றியடைய சாதகமான காலம், இடம் எல்லாம் இருக்கின்றனவா? வெற்றியடையும் நாள்வரையில் அதற்கு தேவையான உழைப்பை செய்ய தன்னில் போதியபலம் இருக்கிறதா என்பதை அறிந்து முடிவு செய்தபின்னர் தான் அக்காரியத்தை தொடங்க வேண்டும். ஆசையும் முயற்சியும் மட்டும் இருந்தால் போதாது, தேவையான பண்பும் பக்குவமும் இருக்க வேண்டும். 

அவ்வாறு பண்பும் பக்குவமும் இல்லாது தொடங்கினால் என்னவாகும்?

மிகவும் வறுமை நிலையிலிருக்கும் ஒருவனுக்கு திடீரென கோடி ரூபாய் பெறவேண்டும் என ஆசைப்பட்டு முயற்சி செய்தால் உடனடியாக கிடைத்து விடுமா? அப்படி கிடைத்தாலும் அதனை உரிய நிலையில் பயன்படுத்தி அவன் பயன் பெறமுடியுமா? பலர் ஆசைப்பட்டு முயற்சி செய்து கிடைத்த பலபொருட்கள் தமக்கு இன்பம் அளிக்காது துன்பம் தருவதை அனுபவமாக உணர்ந்துள்ளனர்.

இதைப்போல் பரம்பொருளை இறைவனது அருள் பெற்று உய்யவேண்டும் என்று ஒருவன் விரும்பி கோயிலுக்கு செல்வது, விரதம் இருப்பது, தியான ஜெபங்களை செய்வது என பல முயற்சிகள் செய்தால் மட்டும் போதாது. இறை சாதனையினை தொடங்குமுன்பே அதில் வெற்றியடைவதற்கான பக்குவத்தினை தன்னில் உண்டாக்கிக் கொள்ள வேண்டும். இதையல்லாது பல்லாண்டுகாலம் விடாமுயற்சியுடன் இறைசாதனைகளை செய்து பலன் காணாத்தால் இறைவனே இல்லை என்று முடிவுக்கு வந்து விரக்தியடைந்தவர்கள் பலருள்ளனர். 

பெரும்பாலானவர்கள் இப்படியே பக்குவம் அறியாமல் எதோ படித்த கேட்டவைகளினால் ஏற்பட்ட ஆசையினால் பல வகையில் வழிபாடுகளில் முனைந்து, சிறிதும் பயன் காணாது மனம் சோர்ந்து போகின்றனர். ஆகையால் இறைவனது பேரருளை பெற்றுய்ய விரும்ம்புகின்றவர்கள் முதலில் அதற்குரிய பக்குவத்தை தம்மில் இருக்கின்றதா என தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதனை தம்மில் உருவாக்கிகொள்ள முயல வேண்டும். அதன் பின்புதான் சாதனையில் இறங்க வேண்டும். 

ஒவ்வோரு கலையிலும் வெற்றியடைய அதில் வெற்றி பெற்றவர்களிடமே எத்தகைய பக்குவம் வேண்டுமென்பதை கேட்டறிந்து கொள்ளவேண்டும். சித்திரம் வரையப்பழக சங்கீத வித்துவானிடம் கேட்க முடியாதல்லவா? அதுபோல் இறையருள் பெற அதை பெற்றுய்த பெரியோர்கள் வாயிலாகத்தான் கேட்டறிய வேண்டும். 

இந்த பதிவுத்தொடரில் ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய "ஸாதனா பஞ்சகம்" என்ற அரிய நூலிற்கு சித்தவித்தை, பிரம்மவித்தை ஆகிய அடிப்படையில் உரையுடன் வெளியிடுகிறோம்.  

இந்த பதிவுத்தொடரினை தொடர்ச்சியாக கற்று தமது சித்தத்தில் பதிவித்துக் கொள்பவர்கள் நிச்சயம் சித்தர்களது வழியில் முன்னேறி சாதனை சித்திபெறுவார்கள் என்பதற்கு உறுதி கூறுகிறோம். 

அடுத்த பதிவிலிருந்து ஒவ்வொரு ஸ்லோகத்தின் தமிழ் மொழிபெயர்ப்புடன் ஒவ்வொரு வாக்கியமும் என்ன கூறுகின்றது என்பதனை விரிவாக பார்ப்போம் .


1 comment:

  1. அற்புதமான ஒரு விசயத்தை ஆரம்பிக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...