குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Thursday, August 25, 2011

ஞானகுரு - 06: இறைவனை அடையவும் மனம் வசப்படவும் இருக்கவேண்டிய பண்புகள்


ஸ்லோகம் - 02


வாக்கியம் 02: இறைவனிடத்தில் உறுதியான பக்தி கொண்டிருங்கள்
சித்தவித்தையின் படி பக்தி என்பதன் இலக்கணம் சிவவாக்கியர் கூறியபடி இருத்தல் வேண்டும், "நட்டகல்லைத் தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே சுத்தி வந்து மோன மோனென்று சொல்லும் மந்திரம் ஏதடா? நட்ட கல்லு பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்", பக்தியென்ற பெயரில் வீணாக செலவுசெய்தல், ஆடம்பர விழாக்கள் எடுத்தல் என்பன எதுவும் உண்மைபக்தியாகாது. எமது உள்ளத்திலிருக்கும் இறைவனை அறிந்து உணர்ந்து, செய்யும் செயல்கள் யாவற்றையும் அவன் ஆணைக்கு ஏற்ப செய்துவருதலே உண்மை பக்தி, அதாவது தம்மில் இறைவனைக்கண்டு பின்பு இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும் இறைவனைக்காணலே உண்மையான பக்தி. இப்படியான பக்தியினை உறுதியாக கொள்ளுங்கள் என்கிறார்.

வாக்கியம் 03: அமைதி முதலான நற்பண்புகளை உலகில் சம்பாதியுங்கள்
அமைதி முதலான நற்பண்புகள் எவை? சமம், தமம், விடல், சகித்தல், சமாதானம், சிரத்தை ஆகிய ஆறு பண்புகளே இறை மாணவர்கள் கைக்கொள்ள வேண்டிய பண்புகள்.
 • சமம்: மனதில் கலக்கமும் சஞ்சலமும் உண்டாகாமல் எதிலும் அமைதியாக இருத்தல் சமம் எனப்படும்.
 • தமம்: மனம் போனபோக்கில் செல்லவிடாமல் வெளியின்பங்களில் பற்றுதல் உண்டாகாதவண்ணம் மனதை அடக்கிப் பழகல்.
 • விடல்: கிட்டாதாயின் வெட்டென மறத்தல் வேண்டும், வீண் ஜம்பத்திற்காக எதையும் பற்றிக்கொள்ளக் கூடாது.
 • சகித்தல்: நன்மை தீமை, உயர்வு, தாழ்வு, மானம், அவமானம் போன்ற இருமைகளைபொறுத்துக்கொண்டு பொறுமை காக்கும் பண்பு.
 • சமாதானம்: கருத்து வேற்றுமைகளை அதிகரித்து, வீண்வாக்குவாதங்களில் ஈடுபட்டு ஒருங்கிசைவைக் குலைக்காமல் சமாதானமாக இருக்கப்பழகல்
 • சிரத்தை: எக்காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் சிரத்தையுடன் ஈடுபடல் வேண்டும், அவ்வாறல்லாத காரியம் வெற்றி பெறாது.
இந்த ஆறு பண்புகளையும் மேற்கொண்டு வருபவர்களுக்குதான் மனம் குவியும், தியானம் வசப்படும். இப்பண்புகள் இல்லாதவர்களுக்கு மனம் ஒரு நாளும் கட்டுக்கடங்காது, அதனால் இறைவழிபாடும் பயன்படாது. மனதைக்கட்டுப்படுத்தும் சாதனங்கள் இவை.  


5 comments:

 1. சிறப்பான கருத்துக்கள்.. மனக் கட்டுப்பாடே நம் இறைவழிபாட்டின் தன்மையை முடிவு செய்யும் என்பதை அழுத்தமாக பதிவு செய்ததற்கு நன்றி..

  தொடருங்கள்.. காத்திருக்கிறோம்.

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. நீங்கள் மனிதன் அடையும் இறுதி `நிலை`யாக கருதுவது என்ன? சுயவிசாரணை (self inquiry)மூலம் அடையும் தன்னை உணர்ந்தநிலையே (self realization) (`எனது இருப்பு` என்ற பிரக்ஞை (consciousness) மாத்திரம் உள்ள நிலை) இறுதிநிலையாக இருக்கும்போது அதனை அடைவதை இவ்வாறான கோட்பாடுகள், மூக்கை தலையை சுற்றி தொடுவதுபோன்று தாமதப்படுத்தாதா?

  ReplyDelete
 3. நீங்கள் மனிதன் அடையும் இறுதி `நிலை`யாக கருதுவது என்ன? சுயவிசாரணை (self inquiry)மூலம் அடையும் தன்னை உணர்ந்தநிலையே (self realization) (`எனது இருப்பு` என்ற பிரக்ஞை (consciousness) மாத்திரம் உள்ள நிலை) இறுதிநிலையாக இருக்கும்போது அதனை அடைவதை இவ்வாறான கோட்பாடுகள், மூக்கை தலையை சுற்றி தொடுவதுபோன்று தாமதப்படுத்தாதா?

  ReplyDelete
 4. மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை நாலுநாழி
  உம்முளே நாடியே இருந்தபின் பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்; .

  திருவடி தீக்ஷை(Self realization)
  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  Please follow

  (First 2 mins audio may not be clear... sorry for that)
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4 (PART-2)
  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)


  Online Books : TAMIL
  http://www.vallalyaar.com/?p=409

  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

  ReplyDelete
 5. picture is wrong. Moon should be in left side not right ..

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குவாண்டம் கோட்பாட்டு விளக்கம் - 02

1920களின் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட (ஏற்கனவே இயற்கையில் இருந்த ஒன்று அறியப்பட்ட) நிகழ்வு உலகின் சிந்தனைப்போக்கை பெருமளவில் புரட்டிப்போட...