குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Saturday, August 13, 2011

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 04


ஒன்பதாவது அடிப்படை யோகங்கள்: சந்திரனதும் சூரியனது ஸ்புடத்தினை அல்லது அகலாங்கினை கூட்டி அந்த தொகை 360 இலும் அதிகமாக வருமாயின்

அதனை 360 பாகயில் இருந்து கழித்து வரும் தொகையினை ஒரு நட்சத்திரத்தினது பாகை அளவினால்(13°20' அல்லது 800')வகுத்தால் வேண்டும். வகுக்கும் தொகையில் வரும் தசமங்களை விடுத்து முழுஎண்ணுடன் 1 ஐக் கூட்ட வ்ரும் தொகைக்கான எண்ணை கீழ்வரும் அட்டவணையில் பார்ப்பதன் மூலம் எந்த யோகம் என அறியலா. அல்லது சுலபமாக பஞ்சாங்கம் ஒன்றில் பார்த்துக் கொள்ளலாம்.  

எண்
பெயர்
பொருள்
1
விஷ்கம்பம்
தாங்கும் தூண்
2
பிரீதி
அன்பு/ஆதரவு
3
ஆயுஷ்மான்
நீண்ட ஆயுள்
4
சௌபாக்யம்
அதிஷ்டமுள்ள மனைவி
5
சோபனம்
பிரகாசம்
6
அதிகண்டம்
பெரும் ஆபத்து
7
சுகர்மம்
கடவுளுடன் ஒன்று பட்ட செய்கை
8
திருதி
உறுதி
9
சூலம்
சிவனின் அழித்தலுக்கான ஆயுதம்
10
கண்டம்
ஆபத்து
11
விருத்தி
வளர்ச்சி
12
துருவம்
நிலையானது
13
வியாகாதம்
பெருங் காற்று
14
ஹர்ஷ்ணம்
ஆனந்தமான
15
வஜ்ரம்
வைரம்
16
ஸித்தி
சித்தியடைந்த
17
வியதீபாதம்
மோசமான பின்னடைவு
18
வரீயான்
தலைமை
19
பரீகம்
தடை
20
சிவம்
தூய்மை /சிவன்
21
ஸித்தம்
பூர்த்தியான
22
சாத்தியம்
நடைபெறக்கூடிய
23
சுபம்
சுபம்
24
சுப்பிரம்
வெண்மை
25
பிராம்மம்
தூய அறிவும் தூய்மையும்
26
ஜந்திரம்
இறைவர்களின் தலைவன்
 27
வைதிருதி
கடவுளர்களின் வகுப்பு


இதனை ஒரு உதாரண கணிதம் மூலம் விளங்கிக்கொள்ளலாம்
 • சூரியன் 23°50'இல் மகரத்திலும் சந்திரன் 17°20' இல் துலாவிலும் நிற்பதாக கொள்க
 • சூரியனது ஸ்புடம் 23°50' + 9 x 30° = 293°50', 
 • சந்திரனது ஸ்புடம் 17°20' + 6x 30° = 197°20'. 
 • மொத்தம் 293°50' + 197°20' = 491°10'. 
 • மேற்கூறிய விதிப்படி 360 ஐக்கழித்தால் 131°10, 
 • இதனை கலைகளிற்கு மாற்றினால் 131 x 60 + 10 = 7870'. 
 • மேற்குறிப்பிட்ட விதிப்படி ஒரு நட்சத்திரத்தின் அளவால் வகுத்தால் 9.8375 வரும்
 • தசமதானத்தை விடுத்து முழு எண்ணை எடுத்தோமானால் 9. அதனுடன் ஒன்றைக் கூட்டினால் 10. 
 • ஆக யோகம் கண்ட யோகமாகும்
அதாவது யோகம் என்பது சூரியனதும் சந்திரனதும் இருப்பை நட்ச்சத்திரத்தினது சார்பாக கணித்து அதன் விளைவினது தன்மையினை பொதுவாக விளக்கும் செயல்முறையாகும்

2 comments:

 1. நான் தொடர்ந்து தங்கள் பதிவினைப்
  படித்து வருகிறேன்
  மிக கடினமாக இதுவரை தோன்றியவைகளை எல்லாம்
  எல்லோரும் மிக எளிதாகப் புரிந்து கொள்ளும்படி
  மிக அழகாக விளக்கிச் செல்லுகிறீர்கள்
  பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்.நன்றி

  ReplyDelete
 2. //Ramani//
  தங்கள் பின்னூட்டத்திற்கு, கருத்துக்கு, உற்சாகத்திற்கு நன்றி! இன்னும் பல விடயங்களை பதியலாம் என்று எண்ணியுள்ளோம்! இணைந்திருங்கள்!

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...