குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Tuesday, August 02, 2011

சித்தர்கள் பாடல்களின் பொருளறிதலில் எம்முறை சரியானது?


சித்தர்கள் மக்களின் பரிபக்குவ நிலைக்கேற்ப விளங்கிகொள்வதற்காக ஞானம், யோகம், வாதம், வைத்தியம் என பல பாடல்களாக பாடிச் சென்றுள்ளனர். 

இவற்றின் பொருள் ஒவ்வொரு மனிதனதும் பரிணாமத்துக்கேற்ப ஒவ்வொருவிதமாக பொருள் விளங்கும். இரசவாதம் என்றால் இரும்பை தங்கமாக்குதல் என்று பொன்னாசையுள்ளவருக்கு விளங்கும், மாசடைந்து அழியக்கூடிய மனதாகிய இரும்பினை அப்பளுக்கற்ற ஞானம் எனும் தங்கமாக்குதல் என ஞானமுடையவனுக்கு விளங்கும். 

இதுபோலவே சித்தர்பாடல்களனைத்தையும் ஒவ்வொருவர‌து பரிபக்குவ நிலைக்கமைய பொருள் கூறலாம். எதையும் சரியென்பதோ, பிழையென்பதோ கூறமுடியாது. அவரவர் பரிணாம உயர்வுக்குத்தக்க பொருள் விளங்கும். அதன் படி நடப்பதால் ஏற்படும் விளைவுகளையும் அவரே ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். 

சித்தர்பாடல்கள் சந்தித்த பெரும் பின்னடைவு ஆங்கிலேயர் முதலான ஐரோப்பியரது கையில் சிக்கியமை, இதனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக எமது பரம்பரையினர் சேர்த்து வந்த ஞானத்தினை இடையில் வந்த பரதேசிகள் அழித்து புதிய கல்விமுறையினை புகுத்தியமை. இதனால் நாம் எமது முன்னோர்கள் கூறியதன் உண்மையினை அறியும் தன்மையினை இழந்து விட்டோம். இப்போது நாம் பார்ப்பது அவர்களால் புகுத்தப்பட்ட மேற்கத்தேய தர்க்க அறிவினைக் கொண்டு, எமது கலாச்சாரம் அக நோக்கு கொண்டது, மனதினை வசப்படுத்தி அதன் மூலம் இன்பம் அடைவது எப்படி? என்பதனை நன்கு அறிந்து நுண்கலைகளாக வகுத்து ஆடல், பாடல், காமசாத்திரம் என தொடங்கி அதன் மூலம் யோகத்தினை அடைவது எப்படி என்பதுதான் கல்வியின் நோக்கமாக இருந்தது. எமது இரசவாதத்தினை கொண்டுதான் நவீன வேதியல்/இரசாயனவியல் வளர்ந்தது என்பது நாம் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விடயம். 

அடுத்த பின்னடைவு இந்த கலைகள் ஒருசாரார் மாத்திரமே தமக்குரியது என வகுப்புவாதம் கொண்டு ஆணவத்தினால் பகுத்தறிவு இன்றி தம்மனம் போன போக்கில் கையாளத்தொடங்கியது. 

இதனால் இன்று சித்தர்கள் பற்றிய விடயங்கள் ராஜேஸ்குமாரின் கிரைம் நாவல்  அளவிற்கு மனதுக்கு திகில் கொடுப்பதாகவும் அற்புதம்/ இரசவாதம் என்று மனித கற்பனையின் உச்சகட்டத்தில் மக்களை ஒருவித கற்பனா வாதத்திலும் (fantasy) வாழ்க்கைக்கு ஒவ்வாத‌ ஒன்றாகத்தான் காணப்படுகிறது. இதனால் தான் தவறான வழியில், தமது வாழ்க்கைக்கு பயன் படுத்தமுடியாத வகையில் எதைத்தின்றால் பித்தம் தீரும் என்ற நிலையில் இன்றைய ஆன்மீகம் உள்ளது, இதனை அரசியலாக்கி நாத்திகம் பேசும் கூட்டம் ஒருபுறம், கடவுளை காட்டுகிறேன் வா என காமலீலை நடாத்தும் சாமியார் கூட்டம் மறுபுறம், இவற்றையெல்லாம் பார்த்து தன் சந்தர்ப்பத்திற்கேற்ப கடவுளை வணங்கும் பக்தன் நடுவில் நின்று தலையை பிய்த்து தன் வாழ்வை அழித்துக்கொள்கிறான்.

ஆக கூறமுற்படுவது என்னவெனில் "சித்தர்கள் மனிதவாழ்வுக்கொவ்வாத எதையும் கூற‌வில்லை! அப்படிக்கூறப்பட்ட எவையும் நாம் பொருள் கொள்ளும் வகையில் இல்லை! சித்தர்கள் பெயரைக்கூறி அவர்களை வினோதவேடிக்கை காட்டும் மந்திரவாதிகளாக்காமல் அவர்கள் கூறிய ஞானத்தினை அடைந்து வாழும் வாழ்க்கையினை இன்பமுடையதாக்குங்கள்" 

அவர்கள் அருள் மானசீகமாக எப்போதும் எல்லோருக்கும் கிட்டும்!

1 comment:

  1. சித்தர்கள் என்றாலே மாயாஜாலம் என்ற மாயையை இப்போதய ஊடகங்களும், சீரியல்களும், கதைகளும் உருவாக்கி வைத்திருப்பது முற்றிலும் உண்மை. அவர்களின் உண்மையான தன்மை அறிந்தவர் எவரும் இருப்பதாகவும் தெரியவில்லை...

    இருந்தாலும் தங்களின் கருத்துக்கள் சிறிது நம்பிக்கை தருகிறது.

    பகிர்வுக்கு நன்றி...

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

குவாண்டம் இயற்பியல் அடிப்படைகள் - 01

குவாண்டம் இயற்பியல் குவாண்டம் இயற்பியல் 1800ம் ஆண்டளவில் அணுக்களின் உபதுணிக்கைகள் பற்றிய கருதுகோளுடன் வளர்ச்சி பெற்றது. இதை குவாண்டம் ...