குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Saturday, August 06, 2011

ஞானகுரு - 01: இறை சாதனையில் சித்திபெற விரும்புபவர்கள் நாள்தோறும் செய்யவேண்டியவை

ஸ்லோகம் - 01


 
நல்லறிவால் நிற்க விரும்புபவர்களே! 

 1. நாள் தோறும் வேதங்களை படியுங்கள்,  
 2. அதைக் கொண்டு இறைவனை வழிபடுங்கள், 
 3. அதில் சொல்லியபடி கர்மங்ககளை செய்யுங்கள், 
 4. பலனை நாடி கர்மங்களை செய்வதை விலக்குங்கள், 
 5. பாவங்களை அகற்றுங்கள், 
 6. உலக இன்பங்களை அனுபவிப்பதில் குற்றம் நேராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 
 7. எப்போதும் தன்னையறியும் முயற்சியை செய்யுங்கள், 
 8. இல்லற பந்தத்திலிருந்து விரைவில் வெளியில் வாருங்கள். 

வாக்கியம் 01:
நாள் தோறும் வேதங்களை படியுங்கள்
இது எந்த நூலையும் குறிப்பதல்ல. சித்த வித்தையின் படி அறிவு என்று பொருள் படும். மனிதப்படைப்பின் முதன் முதலில் பிரபஞ்ச இரகசியங்களையும், உயிரினங்க்களின் வாழ்க்கை முறையினையும் படைத்த இறைவனே சொல்லி இருக்கிறார் என்ற கருத்தை எல்லா மதங்களும் கூறியிருக்கின்றன. இப்படி பிரபஞ்ச உண்மைகளின் தொகுப்பே வேதங்கள். இதனை பின்னர் மக்களின் பரிணாம நிலைக்குத்தக்க உபநிடதம், வேதாந்த சித்தாந்த நூல்களாக தொகுத்தளித்தனர். ஆக வேதம் எனப்படுவது பிரஞ்ச உண்மைகளை கூறும் நூற்களின் தொகுப்பு எனக்கொள்ளவேண்டும். இந்த நூற்களை அதில் சொல்லப்பட்ட விடயங்களை இறையருளைப் பெறவிரும்பும் யாரும் தினமும் படிக்க வேண்டும். நாள் தோறும் மனதில் அதன் கருத்துக்கள் புகுத்தப்பட்டால் மனம் தானாகவே அதே கருத்தில் இயங்க்கத்தொடங்கும். சில நாட்கள் படித்து மற்றைய நாட்களில் வேறு நூற்களையும் படித்து வந்தால் மனம் இறையெண்ணத்தில் இயங்காது போகும். இதன் அடிப்படியிலேயே ஒரு மண்டலம் சாதனை செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. இறையருள் பெற மனவடக்கம் முதன்மையாதலால் அதற்கு நாள் தோறும் தவறாமல் பிரபஞ்ச உண்மைகளை கூறும் வேத நூற்களை படிக்கும் பழக்கத்தை மேற்க்கொள்ள வேண்டும்.  

வாக்கியம் 02:
அதைக் கொண்டு இறைவனை வழிபடுங்கள்
கடவுளை வழிபட்டுய்ய வேண்டும் என்று விரும்பும் பலர் தவறான நூல்களைப் படித்து அதன் படி செய்ய முயற்சிகின்றனர். இத்தகையோர் பல்லாண்டு காலம் வழிபாடுகளை செய்தும் இறையுதவி பெற இயலாமல் "இறையே பொய்" என்ற முடிவுக்கு வந்து வீழ்ச்சியுறுகிறார்கள். இந்த முறையே தவறு, எந்தவொரு கலையினையும் கற்று தேர்ச்சி பெற விரும்புபவர்கள் தானே சில நூற்களை படித்து மனம் போன போக்கில் அதைச்செய்யக் கூடாது. அதில் முன்பே தேர்ச்சிபெற்ற அனுபவமுடைய ஒரு ஆசிரியரை அணுகி அவர் சொல்லும் அனுபவ செயன் முறை விளக்கங்களை கற்று அதனை தன் அனுபவத்திற்கேற்ப வகுத்து கொண்டால் தான் அக்கலையாலாகும் நன்மையினைப் பெற்றுக்கொள்ளமுடியும். ஆக இந்த வாக்கியத்தின் மறை பொருளை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். 

வாக்கியம் 03:
அதில் சொல்லியபடி கர்மங்ககளை செய்யுங்கள் 
உடல், வாக்கு, மனங்களில்  கர்மங்கள் செய்யப்படுமகின்றன. இக்கர்மங்களின் பலனாகவே நன்மை தீமைகளை அனுபவிக்கப் பிறப்புகள் பல உண்டாகின்றன. நல்ல காரியங்களை செய்தால் எடுக்கும் பிறப்பு நன்மைகளையும் தீய கர்மங்க்களை செய்தால் எடுக்கும் பிறப்பு தீய பலனை அனுபவிக்கவும் செய்யும். மனிதன் எந்தக்காரியத்தையும் செய்யாமல் இருக்க முடியாது. மனதால் எண்ணுவதும் கர்மம்தான் இப்படி எந்தக்கர்மத்தை செய்தாலும் பிறவி தப்பாது. அப்படியானால் எப்படி பிறவாப்பேரின்பம் பெறுவது? இதற்கு ஒரு வழி இருக்கிறது, எந்தக் காரியத்தை செய்தாலும் பலனை எதிர்பாரமல் செய்தால் அதனால் பிறவி வராது. பிரபஞ்ச விதிக்கமைவாக உள்ள காரியங்கள் 


1 comment:

 1. வாழும் முறைபற்றிய தங்கள் விளக்கம் அருமை. தொடருங்கள்.

  பகிர்வுக்கு நன்றி

  http://anubhudhi.blogspot.com.

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

காயத்ரி குப்த விஞ்ஞானம் பாடம் 15 & 16

இந்த வாரத்திற்குரிய பாடம்:  பாடம் 15 & 16 காயத்ரி குப்த விஞ்ஞானம் என்பது காயத்ரி மந்திரம் பற்றிய அனேக ரிஷி பாரம்பரிய இரகசியங்கள்...