வாக்கியம் 08: இல்லற பந்தத்திலிருந்து விரைவில் வெளியில் வாருங்கள்
இதற்கு யாரும் இறையருளைப் பெறவேண்டுமானால் வீட்டைத்துறந்து காட்டிற்கு போகவேண்டும், துறவறம் பேண வேண்டும் என எண்ணிவிடக் கூடாது. பிரம்ம ஞானத்தில் மேம்பட்ட ரிஷிகள் அனைவரும் தமது குடும்பத்துடன் வீடுகளில் மனைவி மக்களுடன் வசித்தவர்கள் தான். வசிஷ்ட மகரிஷி 101 புதல்வர்களுடன் அருந்ததியாம் மனைவியுடன் பர்ணசாலையில் வசித்தவர்தான். சீதையின் வளர்ப்பு தந்தையான ஜனகமஹாராஜா ராஜயோகியாக அரச மளிகையில் வசித்தவண்ணமே சாதனை புரிந்து பிரம்ம ஞானம் பெற்றிருந்தார். இல்லற பந்தத்திலிருந்து வெளியில் வாருங்கள் என்றால் மனைவி, மக்கள், சொத்துக்களை விட்டு விலகி ஓடி விடுங்கள் என்பது அல்ல, இவைகளில் பற்று கொள்ளாமல் இருங்கள் என்பதுதான் பொருள். இப்படித்தான் ஞானிகள் அனைவரும் வாழ்ந்திருந்தார்கள். எனேனில் இந்தப் பிறப்பில் நடைபெறும் செயல்கள் நாம் முன்பு சேர்த்த வினையின் படி (பிராப்த கர்மத்தின்படி) நடைபெறுகிறது. அதனை தடுத்தால் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிவரும். ஆனால் இந்தப் பிறப்பில் அடுத்த பிறப்பு எடுக்க வேண்டிய அளவிற்கு கர்மத்தினை சேர்த்து விடக்கூடாது. ஆதலால் அனைத்திலும் இருக்கும் ஆசைகளை விட்டு வெளியேறுங்கள் என்பதே இதற்கு பொருள்.
அடுத்த பதிவில் இந்த ஸ்லோகத்தின் உட்பொருள், பிரம்மவித்யா விளக்கம், உபதேச விளக்கம் பதியப்படும்.
அற்புதமான கருத்துக்கள்... ஒவ்வொரு வரியும் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியவை...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி..
http://anubhudhi.blogspot.com/