குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Tuesday, August 23, 2011

ஞானகுரு - 04: இறைவன் அருளை பெறவிரும்புபவர்கள் செய்யவேண்டியது?
முதலாவது ஸ்லோகத்தின் உட்பொருள்:

இறைவனின பேரருளைப் பெற்று அஞ்ஞான மாயை கர்ம பந்தங்களிலிருந்து விடுபட்டு இறையின்பம் பெற விரும்புபவர்கள் நாள்தோறும் வேதம் முதலிய இறை நூற்களைப் படித்து அவைகளில் கூறியுள்ளபடி பற்றற்று கடமைகளையும், இறை வழிபாட்டினை அனுபூதி பெற்ற பெரியார்கள் மூலம் அறிந்து முறையாக சாதனை செய்தபடி இறைவனது தியானத்தால் சித்தத்தில் பதிவுற்றிருக்கும் பாபங்களை அகற்றி புதிய பாபங்கள் சேராமல் இருப்தற்கு உலகவாழ்வில் தமது வாழ்க்கைக்கு தேவையான அளவு செல்வம் திரட்டி, வாழ்வதில் திருப்தி அடைந்தபடியும், எப்போதும் தன்னை யாரென்று தெரிந்துகொள்ளும் விசாரணையில் ஈடுபடுத்தி, இல்லற பந்தத்தில் மனதினை இழந்துவிடாமல் மனதைகட்டுப்படுத்தி வாழ்ந்து வருதல் வேண்டும்.

பிரம்மவித்யா விளக்கம்:

இறையருளை பெற்றுய்ய வேண்டும் என்பவன் இறைவன் கூறிய வழிகளை கடைப்பிடித்து வரும் பெரியோர்களாகிய குருவினை அணுகி அவர்களிடம் உபதேசம் பெற்று அவ்வழியில் சாதனை புரிந்து வருதல் வேண்டும். உண்மையான ஆச்சார்யனை காண எங்கும் தேடி அலையத்தேவையில்லை. இறை சாதனையினை அறியவேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டால் அத்தொடர்பு தானாகவே கிட்டும். 

உபதேசவிளக்கம்:
இறையருள் பெற்றுய்ய விரும்புபவர்கள் குருவினை அண்டி தகுந்த சாதனா முறைகளின் விளக்கங்கள், செயல் முறையினைக்கற்று அதன்படி கடைப்பிடித்தல் வேண்டும். இதற்காக தம் கடமைகளை, வீடு, மனைவி, பிள்ளைகள், தொழிலை விட்டு ஊர் ஊராக சுற்றத்தேவையில்லை, அப்படி செய்யவும் கூடாது.இல்லறத்தில் இருந்த வண்ணம் முறையாக அறங்களை கடைப்பிடித்தல் வேண்டும். 

3 comments:

 1. தங்களின் உபதேச விளக்கங்கள் அருமை.. தொடருங்கள்...

  பகிர்வுக்கு நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. Mr. Sankar Gurusamy,

  நன்றி, இந்தப்பதிவுகளது எல்லா புகழும் குருதேவருக்கே உரியது, தாங்கள் அனுப்பிய‌ கேள்விகள் ச‌ந்தேகங்கள் அனைத்திற்குமான பதில்கள் தொடர்ந்து வரும் பதிவுகளில் கட்டாயம் வரும், வேலைப்பளுவுடன் எழுதுவதால் உடனுக்குடன் பதிலளிக்கமுடியாமைக்கு மன்னிக்கவும்!

  ReplyDelete
 3. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
  இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
  ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

  இங்கே சொடுக்கவும்

  ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...