குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Tuesday, August 09, 2011

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 01

கிரகங்கள் பூமியிற்கும் நட்சத்திரங்களுக்கும் சார்பாக‌ வானத்தில் சுழல்கின்றன, இவை பூமியில், மனிதனின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெறப்போகின்ற சம்பவங்களுக்கான குறிகாட்டிகளாக செயற்படுகின்றன என்பது தான் ஜோதிடத்தின் அடிப்படை. இந்த அடிப்படையினைக் கொண்டு பல கோட்பாடுகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்தப்பதிவுகள் பாரத தேசத்தைச் சார்ந்து வளர்ந்த ஜோதிடக்கலையினைப் பற்றியே அதிகம் பேசப்போகிறது.

இந்திய ஜோதிடக்கலை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இதன் படி பல நுணுக்கமான கணிதங்கள் அச்சொட்டாக வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டக்கூடியவாறான விதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.


முதலாவது அடிப்படை: கிரகங்கள், வானியலில் பிரயோகிக்கப்படும் கிரகம் என்ற வார்த்தையும் ஜோதிடத்தில் பிரயோகிக்கப்படும் கிரகம் என்ற வார்த்தையும் வேறு அர்த்தம் கொண்டவை. புதன் தொடக்கம் யுரேனஸ் வரையிலான சூரியனைச் சுற்றிவருவனவே வானியலில் கிரகங்கள் எனப்படுகின்றன. ஆனல் ஜோதிடத்தில் சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய ஏழுமே கிரகங்கள். இவற்றுக்கு மேலதிகமாக ராகு, கேது என்பன நிழல் கிரகங்கள் கருதப்படுகின்றன. இவை உண்மையில் கணிதப் புள்ளிகள், ஆக மொத்தம் ஒன்பது கிரகங்கள் முக்கியமாக கருதப்படுகிறது.

இதுதவிர 11 உபகிரகங்களாக ஒருசில கணிதப்புள்ளிகள் காணப்படுகின்றன. லக்கினம் என்பது பூமிசுழலும் போது எந்தப்புள்ளி கிழக்கு நெட்டாங்கில் வானத்தில் எந்த ராசியினைப் பார்த்து நிற்கிறதோ அப்புள்ளி லக்கினம் எனப்படும். இது தவிர சில கணிதப்புள்ளிகள் விஷேட லக்கினங்கள் எனப்படுகிறது.

இரண்டாவது அடிப்படை இராசி: மேற்குறிப்பிட்ட கிரகங்கள், உபகிரகங்கள், லக்கினம், விஷேட லக்கினங்கள் என்பன நட்சத்திர மண்டலத்தில் பாகை, கலை, விகலை என குறித்த ஒரு மாறாப்புள்ளியினை கருதி கணிக்கப்படுகின்றது. இப்புள்ளியினை பூமத்திய புள்ளி என அழைக்கலாம். இப்புள்ளியிலிருந்து கிரகங்கள், உபகிரகங்கள், லக்கினம், விஷேட லக்கினங்கள் என்பனவற்றின் இருப்பைக்குறிப்பிட அகலாங்கு அல்லது ஸ்புடம் எனும் சொல் பாவிக்கப்படுகிறது. பூமியின் சார்பாக வானத்தில் காணப்படும் எந்தவொரு கிரகத்தின் இருப்பும் 0°0'0'' (0 degrees 0 minutes 0 second) தொடக்கம் ‌ 359°59'59'வரையில் காணப்படும். 0°0'0''எனபது ராசிமண்டலத்தின் தொடக்கமாகும். மேற்க்கத்திய முறையில் சாயன ராசிமுறை அதாவது நகரும் ராசிமண்டலமும், இந்திய ஜோதிடத்தில் நிராயன ராசி முறை அதாவது நகராத ராசிமண்டலமும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்க்குறிப்பிட்ட வானத்தில் உள்ள ராசி மண்டலம் 360 பாகைகளால் ஆனது, அவற்றை சரிசமனாக 12 பகுதிகளாக பிரிப்பதன் மூலம் ராசிகள் பெறப்படுகின்றது.

கீழே உள்ள அட்டவணையில் 12 ராசிகளுக்குமுரிய ஆங்கில, தமிழ் பெயர்களும் அவை அடங்கும் பாகைகளும் தரப்பட்டுள்ளது.

உதாரணமாக செவ்வாய் 221°37" பாகையில் இருப்பதாக கருதின் இந்த அட்டவணையின் மூலம் விருட்சிக‌ ராசியில் இருக்கின்றது எனக்கண்டுபிடிக்கலாம்.

மூன்றாவது அடிப்படை பாவம்: இதனை தமிழில் கூறுவதானால் வீடு எனக்கூறலாம். ஒரு ஜாதகத்தினை எடுத்துக்கொண்டால் வீடுகள் குறித்த சார்புப் புள்ளிகளான லக்கினம், சந்திர லக்கினம், விஷேட லக்கினம் என்பவற்றினூடாக ராசிமண்டலத்துடன் வரையறுக்கப்படும். லக்கினம் முதலாவது வீடாகக் கொண்டு 1 தொடக்கம் 12 வீடுகள் ராசிமண்டலத்துடன் வரையறுக்கப்படும். உதாரணமாக துலா லக்கினம் எனின் இரண்டாவது வீடு விருச்சிகம், மூன்றாவது வீடு தனுசு என பன்னிரண்டாவது வீடு கன்னியாக ராசிச்சக்கரம் முடிவுறும். இந்த ஒவ்வொரு வீடும் வாழ்க்கையின் ஒவ்வொரு விடயத்தினைக் குறிக்கின்றது. இதுபற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.


ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் அடுத்த பதிவிலும் தொடரும் ......3 comments:

 1. தங்கள் ஜோதிட விளக்கம் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்..

  பகிர்வுக்கு நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. தங்களது உற்சாகமான தொடர் பின்னூட்டமிடலிற்கு நன்றி!

  ReplyDelete
 3. நல்ல முயற்சி , அருமையான பாட திட்ட வழிமுறைகள் , தொடர்ந்து தந்து எல்லோரும் பயன் பெற செய்யுங்கள்.


  அன்புடன்
  www.janiyaa.freeforums.org

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முடிவெடுத்தல் வரைவிலக்கணம் - Decision-making

முடிவெடுத்தல் என்பது நாம் ஒரு செயலை செய்வதற்கான அர்ப்பணிப்பினை ஏற்றுக்கொள்ளல். முடிவெடுத்தலில் மூன்று காரணிகள் காணப்படும்: 1) இரண்டு அ...