குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, August 03, 2011

போகநாதரது நவபாஷாணத்தின் யோக விளக்கம் - 02

போகநாதரதும் புலிப்பாணி மகரிஷியினது நவபாஷாணம் பற்றிய  பாடல்களது குறிவிலக்கம் செய்யப்பட்ட யோகவித்தை  பொருள் இந்தப்பதிவில் வெளியிடப்படுகிறது. படித்துவிட்டு  தங்கள் மேலான கருத்துக்களை கூறவும்.


முந்தைய பதிவினை பார்க்க http://yogicpsychology-research.blogspot.com/2011/08/01.html  

சென்ற பதிவில் நவபாஷாணம் என்று தற்போதைய வழக்கில் குறிப்பிடும் பொருட்களின் நச்சுத்தன்மை பற்றி பார்த்தோம், ஆக நிச்சயமாய் நம்பலாம் தற்போதைய சித்தவைத்தியர்கள் கூறுவது போல் கொடிய நச்சினைக் கொண்டு விக்கிரகம் செய்து அதன் மூலம் பலநோய்கள் தீர்ந்தது என்பது தவறு என்று, அப்படியானால் இதனது உண்மை விளக்கம் என்ன?

இதற்கு சித்த வித்தையின் யோக அடிப்படை விளங்க வேண்டும், மனிதனின் மனமும்  உடலும்தான்  தெய்வ சக்தியின் இருப்பிடம், சித்த வித்தையின் படி "அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு" என்பதுதான் அடிப்படை,  முதலில் மனிதன் தன் மனதிலும் உடலிலும் தெய்வசக்தியினை விழிப்படைய செய்தால் மாத்திரமே இறைவனை பிரபஞ்ச உண்மைகளை தெரிந்து கொள்ளமுடியும், அப்படிப்பட்ட  சித்தி பெற்ற மனிதன் மற்றவர்களுக்கு அதனை பிரயோசனமான வழியில்   கொடுக்கவும் முடியும். அப்படி சித்தர்கள் மனியாதுக்கு தனது யோக ஆற்றலை  கொடுக்க உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் கோயில்,  கோயிலில் விக்கிரகம் அமைக்கப்பட்டாலும் அதற்கு தெய்வ சக்தியூட்ட மனித உடலுடன் கூடிய தெய்வ சக்தி விழிப்படைந்த சித்தர் ஒருவரே சக்தியேற்றவேண்டும். இது எப்படி? மனித உடலில் மொத்தம் ஒன்பது பிரதான சக்கரங்கள் உள்ளன. அவையாவன அகுளம், மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, துவாதசாந்தம், சகஸ்ராரம் என்பனவே இவை ஒன்பதும் யோகசாதனையால்  பிரபஞ்ச மஹா சக்தியினை ஈர்க்கவல்லவை. எப்படியோ தேகம் கடைசியில் மண்ணாகப்போவது உறுதி, ஆதலால் அதைக்கொண்டு பிரயோசனமாய் வாழ்ந்துவிட்டு போகவேண்டும் என்பது தான் சித்தர்களது குறிக்கோள். கலியுகத்தில் மக்கள் தன் சக்தியால் பயன்பெற வேண்டும் என தன் யோகசாதனைமூலம் பெற்ற சக்தியினை எப்படி மக்களுக்கு பயன் படுத்துவது என எண்ணிய போக நாதர் கல்லிலே (மூலிகைகலந்த கல்லாக இருக்கலாம், ஆனால் நிச்சயமாக மேற்குறிப்பிட்ட நச்சுப் பொருட்களையல்ல!) விக்கிரகத்தினை செய்து அதில் தனது யோகசக்தியினை பாய்ச்சி பழனி தண்டாயுதபாணி சிலையினை பிரதிஷ்டை செய்தார். இதனை விளங்கிக்கொள்ளாத மக்கள் அவர் விஷத்தினை கட்டினார் என கூறி அற்புதமாக்கிவிட்டனர்.

'பாஷாணம்" என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் 'கல்" என்று பெயர், ஆகபாஷாணம் என்பது கல்லினைத்தான் குறிக்கின்றதுவேயல்லாது, விஷத்தினை அல்ல, போகர் கூறிய கீழ்வரும் பாடலினை குறிவிலக்கி  உண்மையான பொருளை பார்ப்போம், 

“மண்ணான தேகமது இருந்துமென்ன
மகிதலத்தில் நெடுங்காலம் வாழ்ந்துமென்ன  
வண்ணமுடன் கலியுகத்த்தில் அனியாயங்கள்
வாகுடனே சதாகாலம் நடக்கும்பாரு நடக்கவே கலியுகத்தார் பிழைக்க
வேண்டி நாமானமனேன்மணியாள் கிரூபையாலே
உள்ளபடி பாடாணம் ஒன்பதும்தான் உருக்கிச் சாய்த்தேன் சிலையாய்தானே

இனி சித்தவித்யா விளக்கத்திற்கு வருவோம் "
  •  “மண்ணான தேகமது இருந்துமென்ன மகிதலத்தில் நெடுங்காலம் வாழ்ந்துமென்ன  வண்ணமுடன் கலியுகத்த்தில் அனியாயங்கள் வாகுடனே சதாகாலம் நடக்கும்பாரு நடக்கவே கலியுகத்தார் பிழைக்க வேண்டி: மண்ணுடன் அழியப்போகும் இந்த தேகம் கலியுகத்தில் கஷ்டப்படப்போகும் மக்கள் நன்மை பெறவேண்டி 
  • உள்ளபடி பாடாணம் ஒன்பதும்தான்", (கவனியுங்கள் பாடாணங்கள் ஒன்பது இல்லை) ஒன்பது பாடாணங்களையும் உருக்கிச்சாய்த்தால் பாடாணங்கள் ஒன்பது என வரவேண்டும்,  
  • உள்ளபடி பாடாணம்: அப்படியென்றால் இருக்கின்ற ஒரு கல் என்று பொருள் அதற்கு, 
  • ஒன்பதும்தான் உருக்கிச் சாய்த்தேன் சிலையாய்தானே என்றால் பிரபஞ்சத்திலுள்ள பராசக்தியினை மனோன்மணி என்ற மனதின் சக்தியாலே ஈர்த்து ஒன்பது ஆதாரங்களூடாக அந்த சக்தியினை செலுத்தி (உருக்கிச் சாய்த்து) சிலையினை பிரதிஷ்டை செய்தேன் என்பதுதான் இதன் விளக்கம்.
சுருக்கமாய் சொல்வதானால் "கலியுகத்து மக்கள் கஷ்டத்தில் இருந்து மீள மண்ணுடன் மறையப்போகும் இந்த உடலில்  மனோசக்தியின் கிருபையாலே ஒன்பது ஆதாரங்களிலும் சக்தியினை ஈர்த்து இருக்கின்ற இந்தக்கல்லில் செலுத்தி சிலையாக்கி வைத்தேன்" என்பதுதான் இந்தப்பாடலின் பொருளாகும்.

இதனை மேலும் விளங்கிக்கொள்ள குரு நாதர் புலிப்பாணியாரது பாடலினை உற்று நோக்குவோம்;

பாரப்பா மலையதுவின் உச்சியிலே
பாங்கான சமாதியருகே கட்டான பாடாணவகை
எட்டுடனொன்று காணவே சேர்த்துவார்த்த
சிலைதானும் நண்ணவே பிரதிட்டைதான் செய்து
நவிலுவேன் பூசை சோடசமுஞ் செய்ய
ஆற்றினேன் பூசைவிதிகள் தானும் ஆராப்பா அறிவார்களாருமில்லை

இதன் சித்த வித்தை பொருள் "இது போகரது சமாதிக்கு அருகில் பழனி மலையில் காணப்படும் தண்டாயுதபாணி கற் சிலையானது ஒன்பது (எட்டுடனொன்று)ஆதாரங்களிலும் போகர் மனச்சக்தியான மனோன்மணியின் அருளால் பிரபஞ்சத்தில் ஒன்றாகிய பராசக்தியினை ஈர்த்துசெலுத்தி பிரதிஷ்டை செய்து வைத்தார், இதற்கு முறையாக பதினாறுவகையான உபசாரங்களை செய்து (இதுவும் வெறும் தூப, தீபம் காட்டி ஐயர் செய்யும் வழிபாடல்ல)    இதிலிருந்து தெய்வ சக்தியினை ஈர்ப்பார் யாருமில்லை' என்று கவலைப்படுகிறார்.

என்ன அருமையாக புலிப்பாணியார் கலியுகத்தில் மக்கள் தம் மனம் போனபோக்கில் மனிதர் உண்மையினை திரித்துரைப்பர் என்பதினை கருத்தில் கொண்டு இந்த பாடலினை தந்திருக்கிறார்.

இவ்வளவும் கூறியும் இல்லை போகர் ஆசனிக்கையும் கந்தகத்தையும் கலந்து கொடிய நஞ்சினைக் கலந்துதான் செய்தார், அவரது பாடலிலேயே ஒன்பது பாடாணங்களது பெயரும் கூறப்பட்டுள்ளதே அதற்கு என்ன கூறப்போகிறீர்கள்? வாதிடும் அன்பர்களே அதற்கும் குறிவிலக்கம் உள்ளது அம்மா! அதையும் பார்த்துவிடுவோமே!

"பாங்கான பாடாணம் ஒன்பதினும் பரிவான விபரம்தான் சொல்லக் கேளு
கௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளை
பகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு பூரணமாய் நிறைந்த சிவசக்தி
நலமான மனோம்மணி கடாட்சதாலே
பூரணமாய் நிறைந்த சிவசக்தி
நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு" - போகர்

இதன் சித்த வித்தை பொருள்;
  •  பாங்கான பாடாணம்; சிலை செய்யப்பயன்பட்ட கல்
  • ஒன்பதினும்; மற்றும் ஒன்பது எனும்
  • பரிவான (resonance) விபரம் சொல்லக்கேளு;இரண்டுக்கும் இடையிலான தொடர்பு (resonance) என்ன என்ற விபரம் சொல்கிறேன் கேள்
  • கௌரி கெந்திச்சீலைமால் தேவி கொடு வீரம்கச்சால் வெள்ளைபகர்கின்ற தொட்டினொடு சூதம்சங்கு: இவையனைத்தும் மனித உடலிலுள்ள சக்தியினை ஈர்க்கும் அகுளம், மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரையிலான ஆதாரங்களின் குழுக்குறி, (இன்னொருபதிவில் சரியாக இவை மனித உடலில் எங்கு இருக்கின்றது என்பதினை வெளியிடுவோம்)
  • பூரணமாய் நிறைந்த சிவசக்தி நலமான மனோம்மணி கடாட்சதாலே: மனச்சக்தியின் அருளாலே பூரணமாய் உள்ள சிவசக்தியான பரம்பொருளை இந்த ஆதாரங்களில்
  • பூரணமாய் நிறைத்து: நானும் நிறைத்ததைபோல் பூரணமடைந்தது போல் 
  • நண்ணிநீ ஒன்பதையும் கட்டுகட்டு:நீயும் முயற்சி செய்து உன்னில் இந்த ஒன்பது ஆதாரங்களிலும் தெய்வ சக்தியினை ஆகர்ஷித்து கட்டி வைத்துக் கொள்! 

ஆகா இப்போது சொல்லுங்கள், போகர் மனிதஉயிரினை கொல்லும் (ஆசனிக் மெல்ல சாகும் விஷம்விஷத்தினை கொண்டு பழனியாண்டவரை செய்தாரா அல்லது தன்யோகசக்தியினை செலுத்தும் முறையினை சூட்சுமமாக சொல்லிச் சென்றுள்ளாரா என்று?

சரி எப்படி இந்த பாஷாணம் என்ற பெருங் குழப்பம் வந்தது? இதற்கு பிறகொரு பதிவில் பதில் சொல்வோம்!


தங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றது, எம்மால் இயன்றளவு தெரிந்த அளவு உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக உள்ளேன்!


போகநாத குருவே துணை!

9 comments:

  1. அருமையான பகிர்வு பொறுமையா படிக்கிறேன்

    ReplyDelete
  2. அருமையான ஆன்மீக பகிர்வு

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. மிகவும் சூட்சுமமான கருத்துக்கள். சித்த மருத்துவத்ததைப் பற்றி அவ்வளவு விரிவாக எழுதி வைத்த சித்தர்கள் குறிப்பில் இதுவும் ஒரு வகையான மருந்தாகவும் இருக்க வாய்ப்பும் இருக்கிறது...

    பகிர்வுக்கு நன்றி..

    http:\\anubhudhi.blogspot.com\

    ReplyDelete
  5. போகரின் பாடலில்
    \\ பாடானம் ஒன்பதும்தான் உருக்கி //

    என்ற வரியில் “பாடானங்கள் ஒன்பது” என்றில்லாமல் “பாடானம் ஒன்பதும்தான்” என்று இருக்கிறது. எனவே “பாடானம்” என்பதற்கு தனியாகவும் “ஒன்பதும்” என்பதற்குதனியாகவும் பொருள் கொள்ளவேண்டும் என்பது உங்கள் கருத்து – இதை சரி என்று வைத்துக் கொண்டால்..

    புளிப்பானியாரது பாடலில் \\ கட்டான பாடானவகை எட்டுடனொன்று // இதற்கு எப்படி பெருள் கொள்வது?

    போகரின் மற்றொரு பாடலில்
    \\ பாங்கான படானம் ஒன்பதினும் பரிவான விபரம்தான்
    சொள்ளக் கேளு // இந்த வரிக்கு எப்படி பெருள் கொள்வது?

    அன்புடன்...

    ReplyDelete
  6. பின்னூட்டமிட்ட அன்பர்களனைவருக்கும் நன்றி! அனைவரது கேள்விகளிற்குமான பதிலை தனிப்பதிவாக தரலாம் என எண்ணியுள்ளேன்! சில Anony MOUSE இந்தக் கருத்துப்பதிவினையும், பகிர்வினையும் தனிமனித தாக்குதல்களாக எண்ணி கருத்துப்பதிந்திருந்தார்கள். அவர்கள் ஏதும் நவபாஷாண பிஸினஸில் ஈடுபடுவதால் எம் பதிவால் அவர்களுக்கு ஏதும் தாக்கமோ தெரியவில்லை, அப்படியானால் தமது முழுப்பெயருடன் கேள்வி கேட்கும் பட்சத்தில் பதிலளிக்கும் சாத்தியம் உண்டு.

    ReplyDelete
  7. மன்னிக்கவும் தவறுதலாக திரு மு. சரவணக்குமார் அவர்களின் பின்னூட்டல் அழிந்துவிட்டது, அது கீழ்வருமாறு;

    மு.சரவணக்குமார் said...
    நல்ல முயற்சி, வாழ்த்துகக்ள் நண்பரே!. உங்கள் பதிவை இரண்டு மூன்று தடவை படித்த பின்னர் எனக்கு சில கேள்விகள் இருக்கிறது.

    1.இந்த பாடல்களை எல்லாம் எந்த புத்தகங்களில் இருந்து எடுத்தீர்கள்?.அந்த புத்தக விவரங்கள் மற்றும் பாடல்களின் எண் மற்றும் இடம்பெற்ற பக்க விவரங்களைத் தரமுடியுமா?

    2.என்னுடைய அனுபவத்தில் சித்தர் பாடல்களில் தகவல்களை மாற்றி மாற்றி வெவ்வேறு இடத்தில் சொல்லியிருப்பதை கவனித்திருக்கிறேன்.இந்த பாடல்களுக்கு முன்னும்,பின்னும் உள்ள பாடல்களில் நீங்கள் முன்வைக்கும் கருத்தினையொட்டி எதுவும் சொல்லப் பட்டிருக்கிறதா?, சொல்லப் பட்டிருந்தால் அந்த பாடல்களை இங்கே பகிரலாமே!

    3.உங்களுடைய முந்தைய பதிவில் பாஷாணஙக்ளின் அறிவியல் பெயர்களை பட்டியலிட்ட நீங்கள்,இங்கு மட்டும் அவை மனித உடலின் சக்தி மையங்கள் என்பதாக சொல்லுவது ஏன்?.இந்த ஒன்பது பாஷாணஙக்ளுக்கு இனையான அறிவியல் பெயர்கள் இல்லையா? அல்லது அதை வேண்டுமென்றே பூசி மெழுக முனைகிறீர்களா?

    4.பாஷாணம் என்ற சொல்லுக்கு தமிழில் கல் என்று எந்த அகராதியில் படித்தீர்கள்? அந்த விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?
    August 3, 2011 9:12 PM

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...