குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


எமது வலைத்தளத்தினை படிப்பவர்கள் ஸ்ரீ வித்தையின் மூலம் எளிமையான முறையில் தெய்வ சக்தியினை பெற்று ஆன்ம உயர்வும் எல்லா சௌபாக்கியங்களும் பெறும் ஸ்ரீ ஜோதியின் விளக்கமும் பங்கு பெறும் முறையும் இந்த இணைப்பில் காண்க


எளிய ஸ்ரீ வித்யா சாதனை வழிகாட்டி: PDF கோப்பாக தரவிறக்கி கொள்ள

ஸ்ரீ வித்யா சாதனை படிவத்தினை நிரப்ப : படிவம்

மனிதனில் தேய்வ சக்தியை விழிப்பிக்கு காயத்ரி சித்த சாதனை : பயிற்சிக் குறிப்பினை தரவிறக்கி கொள்ள


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


ங்கள் அகஸ்திய மகரிஷியின், குருமண்டலத்தின் அருள் பெறுவதற்கு உங்கள் பெயர் எமது பிரார்த்தனையில் இணைக்க இந்த இணைப்பில் உள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.


நீங்கள் ஸ்ரீ ஜோதி இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


அகத்தியர் யோக ஞானதிறவுகோல் வகுப்பும் மூலகுரு மந்திர உபதேசமும் பெற‌ : இந்த படிவத்தை நிரப்பி தொடர்பு கொள்ளவும்

உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்

இங்கே


-அன்புடன் சுமனன் -

Saturday, August 20, 2011

கர்மவிஞ்ஞானமும் ஜோதிடமும் - 01

ஜோதிடத்தின் செயன்முறையினை விளங்க‌ கம்பியூட்டரினை ஒரு உதாரணமாக எடுத்து விளங்க முற்படுவோமானால் இதில் இரண்டு முக்கியமான பாகங்கள் காணப்படுகின்றது. ஒன்று  வன்பொருள்(hardware) மற்றையது அதனை இயக்கும் மென்பொருள் (Software). வன்பொருள் உருவாக்கப்பட்டிருப்பது பௌதிகப் பொருட்க்களால், மென்பொருள் உருவாக்கப்பட்டிருப்பது "ப்ரோகிராமிங் லாங்குவேஜ்" எனப்படும் மொழிகளினால். இந்தப் ப்ரோகிராமிங்கிற்குரிய திட்டம் பயன்படுத்துபவரின் தேவைக்கமைய உருவாக்கப்படுகிறது.இதுபோல் ஒவ்வொரு மனிதனதும் ப்ரொகிரமிங் கோட் தான் ஜாதகம். இது எழுதப்படுவது அந்த மனிதனது பூர்வகர்ம விதிக்கமைய, அவ்விதியின் பலாபலன்களை கூட்டிக் குறைத்து நிர்ணயிப்பது நவகோள்கள்.ஜோதிடத்தின் அடிப்படைகளை விளங்கிக்கொள்வதற்க்கு கர்ம விஞ்ஞானத்தினை நன்கு விளங்கிக்கொள்வது அவசியம். கர்மம் என்பது பொதுவாக செயலினைக்குறிக்கிறது. வெளிப்படையாக சொல்வதானால் உப்புத்தின்றவன் தண்ணிகுடிப்பான் என்பதே சிறந்த உதாரணம். கர்மா என்பது தர்க்கவியலினை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கை. மனித வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு, நன்மை தீமை இப்படியான வேற்றுமைகளிற்க்கு என்னகாரணம் என்பதற்க்கு கர்ம விஞ்ஞானம் பதிலளிக்கிறது. இதன் படி ஒருமனிதன் செயலினைச் செய்துவிட்டால் அதற்குரிய பலன் உடனடியாகவே அவனது பேரட்டில் பதியப்படுகிறது, அதன் படி அவன் தனது செயலிற்கான முடிவினை சூஷ்மமாக முடிவு செய்துகொள்கிறான். தனது இச்சா சக்தி தவிர்ந்து எக்காரணம் கொண்டும் அதற்கான‌ விளைவிகளிலிருந்து அவன் தப்பமுடியாதபடி அவனது செயலிற்கான விளைவுகள் அமைந்துவிடுகின்றன. இதனைக் காட்டும் குறிகாட்டிகளாக கிரகங்கள் செயற்ப்படுகின்றன.

அப்படியென்றால் மனிதன் தனது செய்த செயலிற்கான விளைவுகளை மாற்றவேமுடியாதா? முடியும் என்பதுதான் ஜோதிடம், இப்பிரச்சினையினை தெளிவாக விளங்கிக்கொள்ள மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வுக்கருவியாகவும் ஜோதிடம் பயன்படுகிறது. இதனை அறிந்தபின் தமது இச்சாசக்தியால் வலிந்து முயல்வதனால் அதன் தீவிரத்தினைக் குறைக்கலாம் என்பது ஆன்றோரது முடிவு.

இது பற்றி மேலும் அடுத்த பதிவுகளில் பார்ப்போம்!

2 comments:

 1. தொடர்ந்து எழுதுங்க சுமனன்

  கர்மவிதிகளுக்கும் சோதிடத்துக்கும் உள்ள தொடர்பை இந்த இடுகையில் சரியாகவே சொல்லி வருகிறீர்கள்.,

  பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  நிகழ்காலத்தில் சிவா
  http://arivhedeivam.blogspot.com/

  ReplyDelete
 2. சிறப்பான பதிவு..

  ஆத்ம சாதனை பற்றி சித்தர்களின் மேலதிக கருத்துக்களையெ தங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன்.

  பகிர்வுக்கு நன்றி..

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

முத்தி நெறி அறியாத மூர்க்கரும் சிவமாகலாம்!

முத்தி நெறியறியாத மூர்க்கரொடு முயல் வேனைப் பத்தி நெறியறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்  சித்த மலம் அறுவித்துச் சிவமாக்கியெனை ஆண்ட ...