குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, August 03, 2011

சித்த யோக தெய்வ ஆன்மீக கொள்கை விளக்கம் - 02


11.    உலகியல் நடத்தைகளிற்க்கும் ஆத்மீக நடத்தைகளிற்க்குமிடையில் வேறுபாடுள்ளது. ஒரு ஆன்மீகர் அவரது உறவினர்களாலும் நண்பர்களாலும் உவந்தேற்றுக்கொள்ளப்படமாட்டார். எனெனில் உலகியல் விடயங்களைக் கையாளும் போது அவர் அவர்களோடு ஒத்திசைவதோ அவர்களது விருப்புகளிற்க்கிணங்க நடந்துகொள்வதோ கிடையாது.

12.     சித்த யோக நோக்குகளின் படி ஒருவர் தனது உடை பாவனைகள் முதலான வெளித்தோற்றத்தை வைத்துக்கொண்டு தன்னை நல்லவராகவோ கெட்டவராகவோ கருதிக்கொள்ளக்கூடாது. நல்ல செயல்களைச் செய்வாதாகத் தோன்று ஒருவர் மறைவான தீய நோக்கங்களைக் கொண்டிருக்கலாம். அதேவேளை தனது நடத்தைகளால் தீயவராக தோன்றும் ஒருவர் உள்ளூர தூயமையானதும் பக்திபூர்வமானதுமன நோக்கங்களைக் கொண்டிருக்கலாம்.

13.     சித்த யோகமென்ற உயர் ஞானத்தினைக் கற்றுக்கொள்வதற்கான விருப்பை ஒருவர் உண்மையாகயும் ஆழமாகவும் கொண்டிருப்பாரானால் அவர் மெய்க்குருவைத்தேடி எங்கும் அலையவேண்டியதில்லை அவ்வாறான அறிவியலுக்குரிய பரிபக்குவத்தை அவர் அடையும் தறுவாயில் தனது குரு தனக்கு மிக அண்மித்து இருக்கக் காண்பார்.

14.     சித்த யோக சாதனைகளை புரியும் பொருட்டு ஒருவர் தனது உடை பாவனைகளை, சாதியை அல்லது இறை நம்பிக்கையை மாற்றிகொள்ளவேண்டும் என்று ஆச்சிரமம் கோருவதில்லை. ஆச்சிரமத்தினுடைய மாணாக்கர்கள் ஒரு நபரை அவரது உடை, மற்றும் இன்னோரன்ன செயற்ப்பாடுகள் என்பவற்றை மட்டும் வைத்து அவரை சாதுவாகவோ, சந்நியாசியாகவோ, யோகியாகவோ அன்னது ஞானியாகவோ கருதுவதில்லை.

15.     இந்தநாட்களில் பல இடங்களில் ஹடயோகம் மட்டுமே யோகமென்ற பெயரில் பயிற்றுவிக்கப்படுகிறது. சித்தயோகம்  சொல்கிறது யோகத்தின் உயர் பலாபலன்களைப் பெறும் பொருட்டு உங்களது உடல்களை முறுக்கவோ, வருத்தவோ வேண்டா”. அது சரியான பாதையான இராஜ யோகத்தினைப்புகட்டுகிறது. அதை கிரமமகவும் சிரத்தையுடனும் ஒருவர் பயில்வதன் மூலம் உயர் சித்திகளையும் யோகதத்ன் அதிஉயர் நிலையையும் எய்தலாம்.

16.     இபோதெல்லம் பலபேர் குண்டலினியை விழிப்பிப்பது அதன் பலாபலன்கள் என்பவை பற்றி தமது மூளையை பிசைந்து கொள்கிறார்கள். இந்தநிலைமையைப்பயன் படுத்தி சில போலி யோகிகள் ஆழுறக்க நிலையிலுள்ள பிறரது குண்டலியினை தாங்கள் விழிப்பிபோமென்று கூறிவருகிறார்கள். சித்த யோகத்தின் படி இது ஒருவகையான ஏமாற்று என்பதால் இதை ஏற்றுக்கொள்வதில்லை. எனென்றால் ஒருவரது குண்டலினி மற்றவர்களால் விழிப்பிக்கப்படமுடியாது கூறப்பட்ட சாதனைகளை உயர்ந்தபட்ச சிரத்தையோடு கிரமமாக செய்ய்ஹுவருவதன் மூலமே உபாசகர் குண்டலினியை விழிப்பிக்க முடியும். தயார் நிலையில் இல்லாத பக்குவமற்ற நபர்களிற்க்கு அது அவசியமும் கிடையாது; பாதுகாப்பானது மல்ல. அவ்வாறானவர்களிற்க்கு அதன் மூலம் நன்மையை விட தீங்குகளே அதிகம் நேரும். அனைத்திற்க்கும் மேலாக உண்மையான யோகியிடமிருந்து இராஜயோகத்தின் சரியான பாதைகளைப் பயின்று அதைத் தொடரும் ஒருவரிற்க்கு குண்டலினி தானகவே மேலெலுந்து அவரது யோகமுன்னேற்றத்திற்க்கு துணைபுரியும்.

17.     சில மக்கள் தியானம் என்பதற்க்கு தவறான விளக்கங்களைக் கொண்டிருக்கிறார்கள்.சில பிரர்த்தனைகளை, மந்திரங்களை மானசீகமாக பிரார்த்தித்தல் ஜெபித்தல் என்பவற்றை தியானமாகக் கருதுகின்றனர். இவையெல்லாம் தியானம் இல்லை, ஏனெனில் மந்ர ஜெபம் மனதில் நடைபெறுவது ஆனல் உண்மைத் தியானம் மனங்கடந்து ஊணர்வு நிலை மாத்திரம் செயற்ப்படுவது.

18.     தியானம் பற்றி வேறொரு தவறான ஐயமுள்ளது. அது இராஜ யோகத்தின் உயர் படிநிலைகளை அடைய விரும்பும் ஒருவரது தகுதி தொடர்பானது. தேவையான முன்னாயுத்தங்களை (தீங்கான பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளுதல், விரும்பத்தாகாத நடத்தைகள் குணதிசயங்களிலிருந்து விடுபடல்) செய்து கொள்ளாமலும் தியானத்திற்க்கு முந்திய முதன்நிலைப்பயிற்சிகளை மேற்க்கொள்ளாமலும் எவரும் நேரடியாக தியனத்தை பயிலத்தொடங்கலாம் என்று இவர்கள் எண்ணுகிறார்கள்.

19.     தனது இன்ப துன்பங்களிற்க்கான தனிக்காரணம் மனிதன் ஒருவனே. கடவுளோ அல்லது வேறு வெளிக்காரணிகளோ இதற்க்குப் பொறுபானதல்ல. மனிதனே தனது விதியினை உருவாக்கிக் கொள்கிறான் ஒருவன் தனது கர்மா எப்படி உருக்கப்படுகிறது என்று அறிவனேயானால் அவன் தந்து விதியினையும் மாற்றி அமைக்கலாம். ஆச்சிரமம் தனது மாணவர்களிற்க்கு எப்படி கர்மவினையிலிருந்து மீள்வது என்பதை விஞ்ஞான விளக்கத்துடன் போதிக்கின்றது.

20.     சில பக்த்தர்கள் தாங்கள் இஷ்ட தெய்வங்களை மனித உருவில் நேரில் கண்டதாக கூறுகிறார்கள். இதற்கான விளக்கம்: சில நிலையில் இது உண்மையாகவும் இருக்கலாம். அனால் அவை எங்கோ இருக்கும் தேவருலகிலோ, சொர்க்கத்திலோ இருந்து இறங்கி வந்து காட்சி கொடுப்பதோ வரம் கொடுப்பதோ இல்லை. இவை மனப்பொருளாக்கல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தம் உள்ளே பாவித்ததை வெளியே உருவாக்குவதாகும். இது உண்மையில் மாயஉருவத்தோற்றம் (Hallucination) அல்லது Somnambulism எனும் நிலையாகும். உயர்ந்த மனச சாதனைகளில் சில பக்த்தர்கள் தெய்வங்களை தொட்டு அறிவதும் உண்டு. ஆனால் இவ்வாறான செயல்கள் கடவுளை உணர்தல் என்பவற்றுடன் எதுவித தொடர்யுமற்றவை.

3 comments:

  1. I couldnt type in tamil so posting this comment in english.

    It's good to see finaly someone taking a scientific approach and explaination to siddha yoga and methods. Keep up your good work. may kannia yogeshwarar, agasthiya maharishi, kaaga pujanda maharishi blessings be with you.

    Jai Gurudev
    guruvadi saranam thiruvadi saranam

    ReplyDelete
  2. கடவுளை அறிதல் பற்றிய தங்கள் விளக்கம் அருமை... நம் உணர்வையும் மீறிய அந்த அற்புதத்திற்கு விளக்கம் தேடும் அறிவிலித்தனத்தை சாடும் தங்கள் கருத்துக்கள் நன்று..

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  3. There are 2 books and 3 videos.
    பாருங்கள்! படியுங்கள்! பயன்பெறுங்கள்!

    மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
    இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
    ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

    இங்கே சொடுக்கவும்

    ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
    அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...