தோளை வலியுடைய தாக்கி – உடற்
சோர்வும்
பிணிபலவும்
போக்கி – அரி
வாளைக்
கொண்டுபிளந்
தாலும் – கட்டு
மாறா
வுடலுறுதி
தந்து – சுடர்
நாளைக்
கண்டதோர் மலர்போல் – ஒளி
நண்ணித்
திகழுமுகந்
தந்து – மத
வேளை
வெல்லுமுறை
கூறித் – தவ
மேன்மை
கொடுத்தருளல்
வேண்டும்.
எண்ணுங்
காரியங்க ளெல்லாம் – வெற்றி
யேறப்
புரிந்தருளல்
வேண்டும் – தொழில்
பண்ணப்
பெருநிதியும்
வேண்டும்-அதிற்
பல்லோர்
துணைபுரிதல்
வேண்டும் – சுவை
நண்ணும்
பாட்டினொடு
தாளம் -- மிகநன்றா
வுளத்
தழுந்தல் வேண்டும் -- பல
பாடத் திறனடைதல் வேண்டும்.

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.