பொங்கல் என்றால்
கரும்பு அவசியம்!
கொழும்பில் இரண்டு
கணுக்கள் உடைய
ஒரு துண்டு
கரும்பு பெரும்
விலை என்பது
நண்பர் ஒருவரின்
புலம்பல்!
ஏன் இப்படிப்
புலம்பவேண்டும் நாம்
சமயம் –
கலாச்சாரம் என்பவற்றை பொருளாதாரத்துடன் இணைத்து
சிந்திக்கத் தெரியாத
மடையர்கள் என்பதால்தான் இந்தப் பிரச்சனை!
கடவுளிற்கு எதற்கு
கரும்பு, பூமாலை
எல்லாம்?
சனத்தொகை குறைந்த
முற்காலத்தில் மூட்டை
மூட்டையாக பூக்கொண்டு அர்ச்சிப்பது, பால்
ஊற்றுவதெல்லாம் சமூகத்தில் உற்பத்தி குறைத்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான். அது இப்போது
காசுகொடுத்தால் எல்லாம்
கிடைக்கும் என்ற
மன நிலையில்
உற்பத்தி செய்யும்
ஆற்றலை இழந்த
சொத்தை சமூகமாக
நாம் மாறிக்கொண்டு வருகிறோம்!
கரும்பு நமக்கு
கிடைக்க வேண்டும்
என்றால் குறைந்தது 10 – 18 மாதங்கள்
ஆகும். இந்தப்
பொங்கலுக்கு கரும்பு
வேண்டும் என்றால்
நாம் போன
பொங்கலுக்கு முன்னர்
கரும்பு நடவேண்டும்! இப்படியில்லாமல் எங்காவது
யாராவது, தானாக
வளந்த கரும்பை
வாங்கி கடவுளிற்கு படைத்துவிட்டால் கடவுளின்
அருள் கிடைத்துவிடுமா?
நாம் எதையும்
விளைவிக்காமல் நாம்
சூரியக்கடவுளிற்கு எப்படி
நன்றி சொல்வது!
உற்பத்தி செய்வது
என்பது மனித
குலத்தின் ஆற்றல்!
இதைச் செய்யாமல் காசேதான் கடவுளடா
என்று பொங்கல்
கொண்டாடினால் இப்படித்தான் இறுதியில் கரும்பு
படைப்பது நின்றுவிடும்!
Aaruthirumurugan
Aaruthirumurugan ஐயா போன்ற சைவப் பெரியார்கள் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாட பூக்களும், கரும்புகளும் தாரளமாகக் கிடைக்ககூடிய வகையில்
பயிரிடலை தமது
அறக்கட்டளைகள், கோயில்களூடாக ஊக்கி விக்க
வேண்டும்! இது
குறித்தளவு எண்ணிக்கையானவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கும்!
விவசாய முயற்சியாளர்கள் பண்டிகைக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து
நியாய விலையில்
எப்படி கிடைக்கச் செய்வது என்று
யோசிக்கலாம்!
கொழும்பில் பொங்கல்
என்றால் எல்லோருக்கும் கரும்பும், பூஜைக்குப் பூக்களும் கிடைக்கும் வகை தோட்டங்கள் வடக்கில், கிழக்கில், மலையகத்தில் உருவாக்கப்பட்டு இது சார்ந்த
பொருளாதாரத்தை கோயில்களுக்கூடாக முன்னெடுக்க வேண்டும்.
சொன்னதற்கு சான்றாக
எம்மூர் கோயிலிற்கு, அயலவர்களுக்குக் கொடுப்பதற்கு கரும்பு எமது
வீட்டில் வளர்க்கப்படுகிறது!

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.