இன்று எனது
car இனை முழுமையாக திருத்த வேலைக்கு
இடவேண்டிய நிர்ப்பந்தம். சில மணி
நேரம் அவர்கள்
வாடிக்கையாளருக்குத் தந்த
ஓய்வறையில் இருந்து
கீழுள்ள 143 பக்கங்கள் கொண்ட சிறிய
நூலை வாசித்து
முடித்தாயிற்று!
இந்த நூலின்
ஆசிரியர் பேராதனைப் பல்கலைகழக மருத்துவ
பீட சத்திரசிகிச்சைக்கான வாழ் நாள்
பேராசிரியர்!
புத்தருருடைய முழு
உபதேசங்களையும் உள்
வாங்கி அதை
அறிவியல் சட்டத்தில் வைத்து புத்தர்
அறிவியலுக்கு அப்பால்
உள்ளதைப் பற்றிப்
பேசுகிறார் என்ற
வாதத்தை அழகாகக்
கோர்த்து ஒரு
அறிவியல் சாராத
சாதாரண வாசிப்பாளனுக்கும் புரியும் வண்ணம்
பகிர்ந்தளிக்கிறார்.
தமிழில் இப்படியான நூல்களை தமிழ்
அறிவியல் பேராசிரியர்களால் வழங்க முடியவில்லை என்பதும், தமிழில்
எவராவது அறிவியலாளர் ஆகிவிட்டால் நாத்திகம் பேசுவது, மரபுகளைக் கிண்டலடிப்பது தமது
புத்திஜீவித்தனம் என்று
காட்டுவது தமிழிற்கு கிடைத்த சாபக்கேடு!
பேராசிரியர் சன்ன
ரத்ணதுங்க அவர்கள்
எட்டு அத்தியாயங்களாக நூலைப் பிரித்து
முதலாவது அத்தியாயத்தில் இன்றைய அறிவியல்
கண்டடைந்த ஐம்பெரும் பௌதீக சக்திகளான மின் காந்த
சக்தி, வலுவான
அணுப்பிளப்புச் சக்தி,
ஈர்ப்பு சக்தி,
வலுவற்ற அணுப்பிளப்புச் சக்திம், ஐந்தாவது
கருஞ் சக்தி
இவை பற்றிக்
கூறி புத்தர்
இவற்றுக்கப்பாற்பட்ட எம்மை
இயக்கும் உணர்வு
மயமான கர்ம
சக்தியையும் கர்ம
விதியையும் உரையாடுகிறார் என்று அறிமுகப்படுத்தி மனித அறிவதில்
இருக்கும் அங்ககீனத்தை, பலகீனத்ததை விளக்குகிறார். நாம் கருவிகளூடாகவே எல்லா அறிவினையும் பெற வளர்ந்துள்ளோம்; கருவிகளால் எமது
உணர்வு சக்தியை
முழுமையாக அளக்க
முடியாது என்பதை
விளக்குகிறார்.
இரண்டாவது அத்தியாயத்தில் மூளையின் பகுதிகளைப் பற்றிய பரிபூரண
அறிமுகம் தருகிறார். மூளையின் எந்தெந்தப் பகுதிகள் என்ன
செயலுக்கு உறுதுணையாக இருக்கிறது என்ற
விபரங்கள் உள்ளது.
நவீன அறிவியல்
மனதை மூளையின்
வெளிப்பாடாக கருதுகிறது; எமது மெய்யியல் மனம் மூளையை
ஆளுகிறது என்று
உறுதியாகக் கூறுகிறது. இப்போது neural plasticity இனால் படிப்படியாக அறிவியலாலும் இது ஏற்றுக்கொள்ளப் படுகிறது.
மூன்றாவது அத்தியாயம் மூளையில் செயல்பாட்டினை computer tomography, magnetic resonance imaging, Electro
encephalogram, Functional MRI, positron emission tomography, Magneto
Encephalography போன்ற கருவிகளின் மூலம் மனதின்
செய்கையை எப்படிப்
படிக்கிறோம் என்ற
விபரம் தருகிறார்.
நாலாவது அத்தியாயம் மூளை எப்படி
பரிணாமத்தில் கூர்ப்படைந்து மனித மூளையின்
ஆற்றல் எப்படி
விருத்தியடைந்தது என்ற
விபரத்தைத் தொகுக்கிறார். எல்லா விலங்குகளிலும் மனிதனிற்கே உடலின்
சதவீதத்துடன் ஒப்பிடும் போது பெரிய
மூளை வாய்த்திருக்கிறது என்பதையும் எப்படி
இது மனிதனின்
உயர் உணர்வு
நிலை, சிக்கலான
மன இயங்கங்களை அவனால் இயக்கமுடிகிறது என்பதையும் விபரிக்கிறார்.
ஐந்தாவது அத்தியாயம், மூளை வளர்ச்சியுடன் தொடர்புடைய நரம்பியல் விஞ்ஞானம் பற்றிப்
பேசுகிறார்.
ஆறாவது அத்தியாயம் புத்தரின் மெய்யியலும் இன்றைய அறிவியலும் என்ற அத்தியாயத்தினூடாக புத்தரின் நான்கு
உயர்ந்த உண்மைகளும், எட்டு நெறிகளும் பற்றிக் கூறி
அவற்றினைக் கடைப்பிடிப்பதனுடன் தொடர்பு படும்
மூளையின் பகுதிகள்,
அவற்றில் ஏற்படும்
மாற்றங்கள் பற்றி
விபரிக்கிறார்.
ஏழாவது அத்தியாயத்தில் புத்தரின் வாழ்க்கை
நெறிக்கான அபிதம்மம் கடைப்பிடிப்பதனால் மூளையில்
ஏற்படும் மாற்றம்
பற்றி விளக்குகிறார்.
இறுதியாக மூளையும்
தியானமும் என்ற
எட்டாவது அத்தியாயத்தில் தியானத்தின் மூலம்
எப்படி மூளை
மாற்றமுறுகிறது என்ற
அறிவியல் ஆய்வுகளைத் தொகுத்து விளக்குகிறார்.
நூலின் சுருக்கம் நாம் சாதாரண
வாழ்க்கையில் எமது
மூளையை Default Mode Network எனப்படும் கர்மங்களை உருவாக்கி எம்மில் பதிவிக்கும் செயலைச் செய்து
கொண்டிருக்கிறோம்; நீண்ட
விழிப்புணர்வுத் தியானத்திம் மூலம் இந்தப்
பகுதி மெதுவாகச் செயலிழக்கப்பட்டு Central Executive Network என்ற பகுதியினூடாக present movement of life எனப்படும் நிகழ்காலத்தில் வாழும்
தன்மையைப் பெறுகிறோம். இதனை புத்தல்
உள்ளதை உள்ளப்படி காணும் நிலை
- விபஸ்ஸனா என்று
கூறுகிறார். எமது
மூளை தியானப்
பயிற்சியால் மாறுகிறது.
தமிழின் பெருமையாக நாம் திருக்குறள் கூறும் தர்ம
வாழ்க்கையை வாழும்
ஒருவனிற்கு எப்படி
மூளையின் இயக்கம்
இருக்கும் என்று
ஆராயலாம்! ஆனால்
திருக்குறள் காட்டும்
வாழ்க்கையை வாழும்
நபரைக் கண்டுபிடிப்பதுதான் அபூர்வம்!

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.