குண்டலினி யோகம்
முழுமையும் காளி வித்தையால் சாதிப்பது எப்படி என்ற சாவியை இந்தப்பாட்டில் திறந்து
காட்டியிருக்கிறார்!
குருவின்றி இந்த வித்தை
பயிற்சிக்கும் அதிகாரம் இல்லை! அவளருளுடையோருக்கு அர்த்தம் புரியட்டும்!
**************************************************
குலகுண்டலினி – பிரம்ம
பூர்ணம் – தாரா
*****************************************************
குல குண்டலினி! பூரண
பிரம்மமே! தாரா
நீ என்னுள் இருக்கிறாய்
நீ என்னுள் இருக்கிறாய்
தாயே
மூலாதாரத்தில்,
சஹஸ்ராரத்தில்,
எண்ணியதெல்லாம் தரும்
மணிப்பூரகத்தில்!
கங்கை இடதுபுறம்
பாய்கிறாள்,
யமுனை வலதுபுறம்
பாய்கிறாள்!
இருவர் நடுவில் சரஸ்வதி
ஓடுகிறாள்!
எங்கு சிவமும்
ஸக்தியும் பிரகாசிக்கின்றனரோ அங்கே!
உன்னைத் தியானித்தல்
என்பது
மாணிக்க செம்பாம்பு
ஸ்வயம்பு லிங்கத்தை சுற்றியதைப் போல்!
இங்கனம் தியானிப்பவன்
பூரண ஆசி பெற்றவன்!
போற்றத்தக்க தாமரைகள்
மூலாதாரம்,
சுவாதிஷ்டானம்,
நாபியில் மணிப்பூரகம்
அநாகதம், விசுத்தி!
நீ அக்ஷரமாக
அவதரிக்கிறாய்!
வம் தொடங்கி ஸம்
பம் தொடங்கி லம்
டம் தொடங்கி பம்
கம் தொடங்கி டம்
அகராதி சோடஷமாய்
கழுத்தில்
ஹம் க்ஷமாய்
புருவமத்தியில்.
என் குரு உறுதியாய்
உபதேசித்தாரே;
அவர் சொன்னார் நீ எனது
உடலில்
இப்படி இருக்கிறாய்
என்று!
நாற்கரத்து பிரம்மன்,
டாகினியும்
அவள் பஞ்சசக்தியும்
ஏறிவரும் தாமரையில்
இருக்க!
யானையும், முதலையும்
ஆட்டுக்கடா,
மான், யானை!
உன் மூச்சுக்
கும்பித்தால் அவளை உணரலாம்
ஹ்ரீங்காரிக்கும்
மதுவருந்திய
தேனியின் ஒலியாக உள்ளே
ஒலிப்பாள்
பிருதிவி, அப்பு, தேஜோ,
வாயு, ஆகஸம்
அனைத்தும் கரையும் உடனே
யம் – ரம் – லம் – ஹம்
– ஹௌம் என்ற அக்ஷரம் ஒலித்தவுடனே!
என்னைக் கருணைப்
பார்வைக்குள் எறிந்துவிடு
நான் மீண்டும் பிறந்து
வருவேன்!
உன் பாதம் மட்டுமே
மூழ்கும் அம்ருதம்
நீயே ஸக்தி,
அநாகதத்வனி!
சிவம் ஓமென்ற பிந்து
சந்திரன் போன்ற பூரண
அம்ருதம்
இந்த ஒரேபரம்பொருளை
எப்படிப் பிளக்க முடியும்?
பூஜையும், துவைதம்
அத்வைதம் என்ற
முரண்பாடும் பற்றி
எனக்குக் கவலையில்லை!
காலத்தின் மகா எஜமானி
காலத்தை நசுக்குவாள்
ஒருதடவை உறக்கம்
கலைந்தால்
பிறகு உறக்கம்
என்பதில்லை அந்த ஆத்மனுக்கு!
அது சிவமாக
மாறிப்போகும்!
அவன் மீளப் பிறந்தாலும்
ஒரு புதிய
உணர்வுடன் பிறப்பான்!
அவனுக்கு முக்தி என்பது
மகளைப்போல்
வணங்கி நிற்பாள்
ஆக்ஞா சக்கரத்தை துளை;
பக்தனின் விரக்தி
காணாமல் போகும்
சதுர், சஷ்டி, தச,
துவாதச சோடஷ துவி
என்ற ஆறு தாமரைகளினூடு
பயணித்து
உச்சியிலே சஹஸ்ரதள
பதுமத்தைச்
சேர்ந்திட வேண்டும்!
பெண் அன்னம் தன்
கம்பீரத் துணையுடன்
கூடி நிற்கும் இறைவனின்
கோட்டையிலே
பிரசாத்தின்
வார்த்தைகளைக் கேளுங்கள்;
யோகியானவன் பேரின்பச்
சாகரத்தில் மிதப்பான்!

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.