இந்தப் பாடலில் பைரவரின் இரண்டு ரூபங்கள் குறிக்கப்படுகிறது. வடுக பைரவர், கங்காளர் என்ற இரண்டு ரூபங்கள். வடுகர் என்பது பிரம்மச்சாரியான வடிவம். கங்காளம் என்பது எலும்பு என்று பொருள். வாமனர் மகாபலியைக் கொன்றதால் ஏற்பட்ட ஆணவத்தை அடக்கிப் பொடிப்பொடியாக்கிய வடிவம் கங்காள வடிவம். இந்த இருவடிவங்களும் பாடலில் தியானிக்கப்படுகிறது. பைரவர் என்றாலே தெய்வங்கள் முதற்கொண்டு ஆணவ மல நீக்கம் தான்
இலையென்றோருவர்க் கிதஞ்சொல்லி
யென்று மிரங்கி
நல்லா
நிலையென்று நீயளித்தாண்டருள்
வாய் நித்தனே
புகலி
மலையொன்றிய் வடுகேச
கங்காள வயிரவனே
தலையொன் றியகைனே
காழி யாபத்துத் தாரணனே
உம்மை நாடிவருபவர்களுக்கு இல்லை என்று
சொல்லிவிடாமல் மனமிரங்கி நல்ல நிலையை
அளித்து ஆண்டருள்பவரே, நித்தியமானவரே!
புகலி எனும்
சீர்காழித் தலத்தில்
எழுந்திருளிய
வடுக பைரவரே
கங்காளா ரூபம்
தரித்த வைரவரே
பிரம்மாவின் ஆணவத்தினை நீக்க தலை
கொய்தவரே
சீர்காழிப்பதி ஆபத்துத்
தாரணனே
உம்மை நான்
தியானிக்கிறேன்.
{ஸ்ரீலஸ்ரீ சிவஞான
தேசிக சுவாமிகள் அருளிச் செய்த
ஆபதுத்தாரண மாலை
பாடல் 18}
இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.