பொறுத்தார் சந்திரன்
ஆள்வார்! – சந்திரயான் 03
பொங்கினார் தொப்பென
வீழ்வார்! – லூனா – 25
சந்திரயான் – 03 இன்
வெற்றிக்கு பின்னால் பாரதீய மெய்யியலின் சிந்தனை இருக்கிறது; இயற்கையுடன் ஒன்றி
அதிக ஆற்றலை செலவழிக்காமல் எப்படி உயர்வை அடைவது என்பது தான் அது!
பூமியினுடைய
ஈர்ப்பிலிருந்து தப்பி சந்திரனுடைய பாதைக்குள் செல்வதற்கு பூமியின் இயற்கையான
சுழற்சியையும், சந்திரனுடைய இயற்கையான சுழற்சியையும் பயன்படுத்தத் தெரிந்தால் அதிக
செலவில்லாமல் திட்டத்தை சாதிக்கலாம் என்பது இதன் இரகசியம்.
அடுத்தது தமது அறிவைப்
பயன்படுத்தி ரக்கெட் விட்டாலும் தமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது; அதைப்
புரிந்துகொள்ள நமக்கு அமைதியும் அடக்கமும் தேவை; அகங்காரத்துடன் மோதி அதிக செலவில்
பாடம் கற்பதை விட அடக்கத்துடன் அமைதியாக அவதானித்து படிப்படியாக அடைவது என்பது சந்திரயான்
– 03 இனது orbit raising schedule ஆக இருந்தது.
மேற்கத்தேய திட்டங்கள்
எப்போதும் அதிக ஆற்றல், துரித வெற்றி என்று போக்கில் இயற்கையின் அமைப்பை விளங்கி
செயற்படுவதை விட அறிவின் மமதையில் இயங்குபவை! எலான் மாஸ்க் இப்படித்தான் பல
பில்லியன் டாலர்களை வீணாக்கி கொண்டு இருக்கிறார்.
சந்திரனில் தரை
இறங்குவதால் நாட்டிற்கு என்ன நன்மை என்று புலம்பும் சிறு புத்தி
சிந்தனையாளர்களுக்குத் தெரிய வேண்டியது – குறைந்த செலவில் உயர்ந்த தொழில்
நுட்பத்தை செய்யும் ஆற்றலை, வெற்றியை இந்தியா அடைந்துள்ளது. இதனால் ஆகாயத்தை
கட்டுப்படுத்தும் அறிவியலில் நான் நம்பகமான ஒருவன் என்று நிருபித்துள்ளது. இனி
அனேக நாடுகளுடைய சாட்டலைட்டுகளிய வானில் நிறுவும் பணியில் கோலோச்சப்போகிறது. இதன்
பயனாக பல தகவல் பரிமாற்றங்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் மிகுந்த நாடாக உலக அரங்கில்
வரப்போகிறது.
பாரதத்தின் ரிஷிகள்
எப்போதும் தமது ஞானம், அறிவியல் உலகிற்கு நன்மை பயக்க வேண்டும் என்றும், மானிட
குலம் உய்ய வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனை மரபு உடையவர்கள்!
இந்த வெற்றி
மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டியது!

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.