எம்முடைய சித்தத்தில் எத்தகைய சம்ஸ்காரங்கள் பதிவுகள் உள்ளதோ அதன் படி நாம் இயங்க்குகிறோம். வலிமையான சம்ஸ்காரம் எம்மை நிச்சயமாக அந்த விடயத்தில் இயக்கும்; வலிமை குறைந்த சம்ஸ்காரங்கள் ஆசைகளாக வந்து வந்து போகும்!
யோகம்,
சாதனை இவற்றைக் கற்க வேண்டும் என்ற ஆசை உங்களில் ஏற்படுமாக இருந்தால் நிச்சயமாக உங்களில்
யோகத்திற்குரிய சித்தப் பதிவுகள் இருக்கிறது என்று அர்த்தம்!
அப்படியானால்
என்னால் ஏன் தொடர்ச்சியாக சாதனை, வகுப்பு பயில முடியவில்லை?
யோகம்
பயில வேண்டும் என்ற சம்ஸ்கரத்தை விட உங்கள் சித்தம் மற்றைய உலக வாழ்க்கை பணம் தேடுதல்,
உலகவாழ்க்கையில் பெருமைகளை அடைவதையே முதன்மையாக நினைத்தல் போன்ற சம்ஸ்காரங்கள் உங்களுடைய
வாழ்க்கையின் முதன்மை விடயங்களாக சித்தம் ஏற்றுக்கொண்டுள்ளதால் உங்களுக்கு இருமனப்
போராட்டம் ஏற்பட்டு உங்களது வலிமையான சம்ஸ்காரம் வெல்கிறது.
இதை
வெல்லுவதற்கு வழி உள்ளதா?
ஆம்,
ஆரம்பத்தில் யோக சாதனை கற்கையில் அதி ஆவல் காட்டி சித்தத்திற்கு அழுத்தம் கொடுத்து
உங்களுடைய தீய சம்ஸ்காரங்களை வெல்ல வைக்காமல் சிறிதளவாக முயற்சிக்க வேண்டும்.
உதாரணமாக
குரு மந்திரமும் காயத்ரி மந்திரமும் தினசரி 27 தடவை எப்பாடு பட்டாவது 45 விடாமல் சொல்லிவருவது!
வாரத்தில்
ஒரு நாள் கற்கையைத் தேர்ந்தெடுத்து அதில் மாத்திரம் ஒரு நாள் விடாமல் பங்குபெற்றி பூர்த்தி
செய்வது.
இப்படி
ஒரு வட்டம் பூத்தி செய்துவிட்டீர்கள் என்றால் சித்தத்தில் வலிமையாக யோக சம்ஸ்காரம்
பதிந்து விடும்; இப்படி ஒரு வருடம் தொட்ர் ச்சியாகச் செய்தால் நீங்கள் உங்கள் பழைய
சம்ஸ்காரங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றுவிடுவீர்கள்!
முயற்சியுங்கள்!
உங்களுக்கு
நான் துணையிருப்பேன்!
அன்புடன்
அகஸ்திய
குலபதி
ஸ்ரீ
ஸக்தி சுமனன்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.