இன்றிலிருந்து சில
நாட்களுக்கு பைரவ
தாண்டவ ஸ்தோத்திர தியானங்கள் பார்க்கப்போகிறது. தாண்டவம் என்பது
நடனம் என்று
அர்த்தம்! இந்தத்
தாண்டவங்கள் ஒவ்வொரு
தெய்வங்களும் ஆடும்
வகையில் அதன்
அர்த்தம் பொதிந்திருக்கும்.
ஆனந்த தாண்டவம்
- மகிழ்ச்சியுடன் ஆடும்
நடனம்
திரிபுரா தாண்டவம்
- சிவன் திரிபுரசுரன் என்ற அரக்கனைக் கொன்ற பிறகு
நிகழ்த்தப்பட்ட கோபம்
மற்றும் தைரியத்தின் நடனம்
சந்தியா தாண்டவம்
- ஒரு இனிமையான
மாலை நடனம்
சமர தாண்டவம்
- பிரபஞ்சத்தின் அழிவை
சித்தரிக்கிறது
காளி தாண்டவம்
- தீமையை அழிக்க
சிவனின் உக்கிர
வடிவில் நிகழ்த்தப்பட்டது
உமா தாண்டவம்
- உடல் ஈர்ப்பு
மற்றும் அன்பை
வெளிப்படுத்தும் நடனம்
கௌரி தாண்டவம்
- சிவனும், தூய்மையின் தெய்வமான கௌரியும்
ஆடிய காதல்
நடனம்.
நாம் இங்கு
பார்க்கப்போவது பைரவ
தாண்டவம்! விழிப்புணர்விற்கான தாண்டவம். தாண்டவம்
ஆடும் போது
எமது உடலில்
உள்ள தெய்வ
சக்திகள் விழிப்படைகிறது.
ௐ சண்ட³ம்ʼ
ப்ரதிசண்ட³ம்ʼ கரத்⁴ருʼதத³ண்ட³ம்ʼ
க்ருʼதரிபுக²ண்ட³ம்ʼ ஸௌக்²யகரம்ʼ
லோகம்ʼ ஸுக²யந்தம்ʼ
விலஸிதவந்தம்ʼ
ப்ரகடிதத³ந்தம்ʼ ந்ருʼத்யகரம்
.
ட³மருத்⁴வநிஶங்க²ம்ʼ தரலவதம்ʼஸம்ʼ
மது⁴ரஹஸந்தம்ʼ லோகப⁴ரம்ʼ
ப⁴ஜ ப⁴ஜ
பூ⁴தேஶம்ʼ ப்ரகடமஹேஶம்ʼ
பை⁴ரவவேஷம்ʼ கஷ்டஹரம்
.. 1..
ஓம், நான்
எல்லையற்ற பயங்கர
ரூப பைரவ
வடிவத்தை வணங்குகிறேன், தண்டத்தை வைத்திருப்பவர், எதிரிகளை அழிப்பவர், மகிழ்ச்சியை அளிப்பவர். உலகம் முழுவதும் சுற்றித் திரிபவர்,
மகிழ்ச்சியைத் தருபவர்,
தனது கடுமையான
பற்களைக் காட்டி
நடனமாடுகிறார். துன்பங்களை அழிப்பவனாகவும், பைரவ
வடிவில் சிவபெருமானின் அவதாரமான பைரவ
பூதேஸ்வரனை நான்
வணங்குகிறேன். அவர்
உடுக்கை மற்றும்
சங்கு ஆகியவற்றைப் பிடித்து, உலகை
மயக்கும் இனிமையான
புன்னகையுடன் இருக்கிறார். இந்த பைரவ
வடிவம் எனது
கஷ்டங்களை எல்லாம்
அழிக்கிறது!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.