இன்று தமிழ் ஆஞ்ச நேய சுவாமி ஜெயந்தி! அனுமனின் ஒரு பெயர்
பிராணேஷ் - வாயு
புத்திரராகிய அவரே
பிராணாயாம ஸித்திகளுக்கு மூலம்! பிராண
சித்தியே யோக
சித்திக்கு வழி!
எமது குருவின் குருவான
ஸ்ரீ கண்ணைய
யோகியார் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்
பண்டிதரிடம் தனது
ஞாபகசக்தியால் கம்பராமாயணத்தை ஒப்புவித்து அவருடைய
பரிந்துரையின் பெயரில்
தமிழ் பண்டிதர்
பரீட்சை எழுதிச்
சித்தியானவர்!
அனுமனைப் பற்றிக் கூறும்
போது அனுமனின்
உப்பிய கன்னங்கள் சக்திப் பிரணாயமத்தின் இரகசியம் என்று
சொல்லுவார்.
நீங்கள் எத்தகைய களைப்பில் இருந்தாலும் கன்னத்தை
உப்பி வாயைக்
குவித்து வெளிமூச்சினை அழுத்தமாக வெளிவிட்டால் இது சக்திப்
பிரணாயாமம் எனப்படும்! இப்படி மூச்சை
வெளிவிடும் போது
உருவாகு அழுத்தம்
பிடரியின் உள்புறத்தை வருடுவதால் உடனடியாக
நரம்பு மண்டலம்
தூண்டப்பட்டு உற்சாகம்
பிறக்கும்! இது
சக்திப் பிரணாயாமம் அல்லது அனுமன்
பிரணாயாமம் என்று
சொல்லுவோம்!
ஆஞ்சனேய ஸ்வாமியின் தியானம்
பற்றிச் சொல்லும்
போது;
உத்³யதா³தி³த்ய ஸங்காஶம்ʼ உதா³ர
பு⁴ஜ விக்ரமம்
.
கந்த³ர்ப கோடி லாவண்யம்ʼ
ஸர்வ வித்³யா
விஶாரத³ம் .
உதய சூரியன் போன்ற
பிரகாசமும்
தேவையான அபார புஜபலமும் உடையவரும்
கோடி மன்மதன் போன்ற
அழகுடையவரும்
ஸர்வ வித்தைகளையும் வல்லவர்
என்று குறிப்பிடப்படுகிறது
மனோஜவம்ʼ மாருத துல்ய
வேக³ம்ʼ
ஜிதேந்த்³ரியம்ʼ பு³த்³தி⁴மதாம்ʼ வரிஷ்ட²ம்
.
வாதாத்மஜம்ʼ வானர யூத²
முக்²யம்ʼ
ஶ்ரீ ராமதூ³தம்ʼ ஶிரஸா
நமாமி ..
மனோவவேகம் என்பது காற்றின்
வேகத்திற்குச் சமம்
புலங்களை அடக்கியவன் புத்திமானைவிடச் சிறந்தவன், வாதம் எனும்
வாயுவின் புத்திரன்! வானர குலத்
தலைவன்! ஸ்ரீ
ராமரின் தூதன்!
சிரம் பணிந்து
வணங்குகிறேன்!

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.