இதற்கு தாவோ
தத்துவம் விளக்கம்
சொல்கிறது!
மனிதர்களை ஆள்பவர்
குழப்பத்தில் வாழ்கிறார்;
மனிதர்களால் ஆளப்படுபவர் துக்கத்தில் வாழ்கிறார்.
நீங்கள் மற்றவர்கள் மீது ஆதிக்கம்
செலுத்தி உங்களைப்
பெரியவர் என்று
நிரூபிக்கும் உங்கள்
அக நோக்கம்
மற்றவர்களுக்கு உங்கள்
மீது வெறுப்பினை உருவாக்குகிறது என்பது
அர்த்தம்!
நீங்கள் எல்லோரையும் உங்கள் வாய்ப்பேச்சால் கட்டுப்படுத்தி, அதிகாரம்
செலுத்த விரும்பினால் நீங்கள் என்ன
செய்கிறீர்கள் என்ற
விழிப்புணர்வு உங்களிடம் இல்லாமல் போய்விடும்! இதனால் உங்களுக்குள்ளேயே குழப்பம் வர
ஆரம்பிக்கும்! எல்லாவற்ற்றிகும் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தால் நமக்கே நாம்
என்ன செய்கிறோம் என்ற தெளிவு
எமக்குள் இல்லாமல்
போய்விடும்! எல்லாவற்றிற்கு விளக்கம் கொடுப்பவர் மறைமுகமாக தனக்கு
எல்லாம் தெரியும்
என்றும் எல்லோரையும் கவரவேண்டும் என்ற
எண்ணம் கொண்டவர்
என்கிறது தாவோ!
இப்படிக் கவரவேண்டும் என்ற எண்ணம்
இருந்தால் எல்லோரையும் விட அறிவானவன் என்று தனக்குள்
ஒரு மமகாரத்தை ஏற்படுத்திக்கொண்டு எல்லாவற்றிற்கும் வியாக்கியானம் கூறும்,
விளக்கம் கூறி
எல்லோரையும் தக்கவைக்க வேண்டிய நிலைக்குச் சென்று விட
வேண்டியிருக்கும். மனிதன்
எப்போது ஆற்றலில்
எல்லைக்குட்பட்டவன்; முழுமையாகச் செம்மையானவனாக இருக்க
முடியாது! ஆகவே
இப்படி மக்களை
கட்டுப்படுத்த கவர
நினைப்பவர்கள் தமக்குள்
குழப்பத்திலேயே வாழ
வேண்டியிருக்கிறது!
இப்படிப்பட்டவர்கள் மற்றவர்வர்களை தமது வாய்ப்பேச்சால், அதிகாரத்தால் ஆளும்
போது அது
எல்லா மனிதரதும் சுயத்தைத் தாக்குகிறது. எனவே ஆளப்படுபவர்களுக்குள் ஒரு எதிர்ப்பு உணர்வினை உருவாக்குகிறது. ஆகவே நாம்
எவரையாவது வாய்ப்பேச்சால் மயக்கி எம்மைப்
பெரியவராகக் காட்டினோம் என்றால் அதற்கு
மயங்குபவர்கள் மற்றொருபுறத்தில் தாம் அழுத்தப்படுகிறோம் என்ற உளவியல்
தாக்கத்திற்கு ஆளாகிறார்கள்.
அவர்கள் மனித
நிலையில் இருந்து
செய்யும் சிறு
செயல்கள் கூட
பூதாகரமாக்கப்படுகிறது. இப்படித் தாக்கப்படும் போது
இப்படிக் கட்டப்பட்ட அகங்காரக் கோட்டையைக் காப்பாற்ற வாதமும்,
போரும் அவசியமாகிறது! அவரைப் பின்பற்றுபவர்களும், சீடர்களும் ஆதரவு
அளித்தது பல்வேறு
புனித விளக்கங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது.
நீங்கள் எல்லோர்
மீதும் ஆதிக்கம்
செலுத்த நினைத்தால் நிம்மதியாக உங்களுக்கு வசதியான வகையில்
பொங்கல் கொண்டாட
முடியாது! காலில்
செருப்புப் போட
முடியாது! மகள்
பேத்தி போன்றவர்களுக்கு அன்புக்கட்டளை இட்டு
தேனீர் வாங்கிப்
பருக முடியாது!
எல்லாம் தவறாகப்
பார்க்கப்படும்! இதுவே
மனிதனின் தாழ்
இயல்பு!
ஆகவே தாவோவின்
இயக்கம் அறிந்தவர்கள் எவர் மீதும்
ஆதிக்கம் செலுத்துவதில்லை! தாம் ஆதிக்கங்களிற்கு உட்படுவதுமில்லை! வெறுமனே
வெற்றுப்படகாக இந்த
சூன்ய வெளியில்
சித்தம் போக்கு
சிவன் போக்கு
என்று பயணிக்கிறார்கள்!

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.