15-ஜனவரி-2024
பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02
இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்:
சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வரூபே
அவஸ்தானாம்
பொருள்: சித்த விருத்திகளை நிரோதம் செய்த
யோகி அந்த நிலையில் தனது சொந்த மாற்றமற்ற நிலையில் இருக்கிறான்.
சூத்திரம் – 04: விருத்தி ஸாரூப்யம் இதரதர
||
பொருள்: சித்த விருத்திகளை அடக்காத போது
அவன் தன்னை சித்த விருத்திகளுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறான்.
சூத்திரம் – 05: வ்ருத்தய பஞ்சதய்ய: க்லிஷ்டா
அக்லிஷ்டா
பொருள்: சித்த விருத்திகள் ஐந்து வகைப்படும்;
அவற்றை நல்லவை, தீயவை என்று பிரிக்க முடியும்
சூத்திரம் – 06: ப்ரமாண விபர்ய
விகல்ப நித்ரா ஸ்ம்ருத்யா
பொருள் – இந்த ஐந்துவகை விருத்திகளும்
ப்ரமாணம், விபர்யம், விகல்பம், நித்திரை, ஸ்ம்ருதி என்று ஐந்து வகைப்படும்.
சித்தத்தினுடைய நிலைகள் ஐந்து : க்ஷிப்தம்,
மூடம், விக்ஷிப்தம், ஏகாக்ரம், நிருத்தம்
- இன்றைய வகுப்பு பதஞ்சலி யோக சூத்திரத்ஹ்டின் மூன்றாவது சூத்திரம் முதல் ஆறாவது சூத்திரம் வரை நாம் உரையாடியிருக்கிறோம்.
- மூன்றாவது சூத்திரம் இரண்டாவது சூத்திரத்தில் யோகம் என்றால் சித்தத்தில் ஏற்படும் விருத்திகளை, கட்டுப்பாடு அற்று எழும் எண்ண அலைகளை நிரோதம் செய்வது என்பதைச் சாதித்த யோகி எதை அனுபவிப்பான் என்பதைக் கூறுகிறது.
- சித்த விருத்திகளை நிரோதம் செய்தால் அவன் தன்னுடைய உண்மையான இயல்புகளைக் காண்பான். இதை நாம் கடலலையை உதாரணமாகக் கொண்டால் அலைகள் நின்றவுடன் கடலின் அடித்தளம் தெளிவாகத் தெரிவதுபோல் எமது சித்த விருத்தி அலைகள் நின்றால் எமது உண்மையான ஆன்ம இயல்பு எமக்குத் தெரிய ஆரம்பிக்கும் என்று மூன்றாவது சூத்திரம் விளக்குகிறது.
- இப்படி சித்த விருத்தியை அடக்காதவனுடைய நிலை என்ன என்பதை நான் காவது சூத்திரம் விளக்குகிறது.
- சித்த விருத்திகளை அடக்காதவன் தன்னை சித்த விருத்திகளுடன் அடையாளப்படுத்திக்கொண்டு அந்த அலையில் சிக்குப்பட்டு துன்பமுறுகிறான்.
- இந்த இரண்டு சூத்திரங்களும் (03 & 04) சித்த விருத்தியை அடக்கினால் ஏற்படும் நிலையையும், அடக்காமல் விட்டால் ஏற்படும் நிலையை விளக்குக்கிறது. இதனால் சாதகன் பதஞ்சலி கூறும் யோகத்தினுடைய அனுபவம் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்கிறான்.
- சித்தத்தினுடைய நிலைகள் ஐந்து பற்றி பதஞ்சலி குறிப்பிடவில்லை; ஆனால் பதஞ்சலி யோக சூத்திரத்திற்கு உரையெழுதிய வியாசகர் இதை விளக்கியிருக்கிறார்.
- சித்தத்தினுடைய நிலை – 01: க்ஷிப்தம் – இது ஒன்றுக் கொன்று தொடர்பில்லாமல் எண்ணங்களை ஒழுங்குபடுத்த முடியாத நிலை.
- சித்தத்தினுடைய நிலை – 02: மூடம்: இது எண்ணங்கள் எதுவும் தோன்றாத நிலையில் இருப்பது, எளிதில் மறப்பது, எண்ணங்கள் மாறிக்கொண்டு இருக்கும் நிலை.
- சித்தத்தினுடைய நிலை – 03: விக்ஷிப்தம் – எண்ணங்கள் தோன்றிக்கொண்டிருக்கும் நிலை. ஆனால் எது சரி எது பிழை என்று முடிவெடுக்க முடியாத நிலை.
- சித்தத்தினுடைய நிலை – 04: ஏகாக்கரம் – மனம் தான் கவனம் செலுத்தும் பொருளில் நிலைப்பட்டுவிட்ட நிலை; பயிற்சியால் வருவது.
- சித்தத்தினுடைய நிலை – 05: நிருத்தம் இது வைராக்கியத்தால் மனம் தேர்ந்தெடுத்த இலக்கின் மீது மாத்திரம் தனது கவனத்தை எண்ணத்தைச் செலுத்தி வேறு எண்ணங்கள் இன்றி ஒடுங்கிவிட்ட நிலை. விருத்திகள் அனைத்தும் அடங்கிய நிலை.
- க்ஷிப்தம் என்பது நாம் குழந்தைகளாக இருக்கும் போது ஏற்படும் சித்தத்தின் இயக்கம்.
- மூடம் என்பது பொதுவாக வளர்ந்து வரும் சிறுவர்களிடம் காணப்படும் சித்தத்தின் இயக்க்ம்.
- விக்ஷிப்தம் என்பது இளைஞர்களது மன இயக்கம்.
- ஏகாக்ரம் என்பது கற்றலில், வேலையில் மனம் ஒருமுகப்பட்ட பயிற்சியால் ஏற்படும் நிலை.
- நிருத்தம் என்பது யோகிகள் தமது அப்பியாச வைராக்கியத்தால் பெறும் நிலை.
- இப்படி சித்தத்தின் வளர்ச்சி நிலைகள் ஐந்தினையும் ஒரு யோக சாதகன் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிலர் வயது சென்றாலும் அவர்களது சித்தம் க்ஷிப்தம், மூடம், விக்ஷிப்த நிலைகளிலேயே இருக்கும். இவர்கள் தம்மை பயிற்சிக்கூடாக ஏகாக்ர நிலைக்கு கொண்டுவந்தால் மாத்திரமே யோக சாதனையில் முன்னேற முடியும்.
- சித்தத்தின் ஐந்து நிலைகளையும் புரிந்துகொண்ட சாதகன் சித்தத்தில் எழும் விருத்திகளின் வகைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.
- எமது சித்தத்தில் 05 வகை விருத்திகள் இருக்கின்றன; இவை நல்லவை தீயவை எண்று பகுக்க முடியும்.
- இந்த ஐந்து வகை விருத்திகளும்
- பிரமாணம் – உண்மையறிவு
- விபர்யம் – பொய்யறிவு
- விகல்பம் – கற்பனை
- நித்திரை – ஆழந்த உறக்கம்
- ஸ்ம்ருதி – ஞாபகம்
- இந்த ஐந்தும் எமது சித்தத்தில் விருத்திகளை எழுப்பி எம்மை உயர் உணர்வு நிலைக்குச் செல்லவிடாமல் தடுப்பவை என்பதை ஒவ்வொரு சாதகனும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும்.
- இவை பற்றிய பூரண விளக்கம் அடுத்த வகுப்பில் உரையாடப்படும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.