இன்று இறைவனைத்
துதிக்கும் எவரும்
பண்ணுடன் தேவாரமும், இராகத்துடன் கீர்த்தனைகளும் படிக்கிறார்கள்! இங்கு
குரலின் முக்கியத்துவம் இனிமை பெறுகிறது. இப்படிப் படிக்கும் பாடல்கள் கேட்பவர்களின் மனதை ஒலியின்
இனிமையால் மயக்கி
சிறிது நேரம்
மனதிற்கு இன்பத்தினைத் தரும்! பாடல்
முடிந்தபின்னர் நாம்
பழைய குழப்பமான மன நிலைக்கு
வந்துவிடுவோம்! இதற்குக்
காரணம் இனிமையான
ஒலியலைகள் எமது
மூளையில் சாந்தத்தை ஏற்படுத்தி சிறிது
நேரத்திற்கு அவற்றை
அடக்கி வைப்பதால் ஆகும்! உண்மையில் நாம் உன்னத
பலன் பெற
வேண்டும் என்றால்
நாம் பாடும்
பாடலின் ஒவ்வொரு
சொல்லினது அர்த்தம்
உணர்ந்து அது
எமது மனதில்
உருவகமாக் தோன்ற
வேண்டும்! அர்த்தம்
தெரியாமல் பாடும்
தோத்திரங்கள் எம்மை
தியான நிலைக்கு
இட்டுச் செல்லாது!
இந்த இரகசியம்
இந்தப்பாட்டில் சொல்லப்படுகிறது.
அடுத்தது அனேகர்
கடவுளின் உருவங்களை தமது முயற்சியால் மனதில் இருத்தி
தியானிக்க முடியும்
என்று தமது
அறியாமையினால் கருதுகிறார்கள்! எம்மால் கண்களை
மூடி ஒரு
தெய்வத்தின் உருவத்தை
உருவகிக்க முடிந்தால் அந்த ஆற்றல்
அந்த வல்லமை
பொருந்திய தெய்வம்
எமக்கு அருட்கடாட்சித்ததது என்று அர்த்தம்!
பைரவரை தியானிக்க பைரவரின் அருள்
கட்டாயம் வேண்டும்!
இதுவும் இந்தப்
பாடலில் சொல்லப்படுகிறது.
நாம் வணங்குவதற்கு, தியானிப்பதற்கு எமது
மனதிற்கு உதவி
செய்வதற்காக தெய்வ
சக்திகளை கல்லில்
வடித்து அதற்கு
பிராணப் பிரதிஷ்டை என்ற சடங்கின்
மூலம் சைதன்யம்
அல்லது உணர்வு
சக்திகளை ஊட்டுகிறோம். சிற்பி வடித்த
கற்சிலை பிராணப்பிரதிஷ்டைக்குப் பிறகு சைதன்யமுடைய பைரவ சக்தி
வெளிப்படும் உணர்வுள்ள ரூபமாகிறது. இப்படியான சைதன்யம் உள்ள
ரூபத்தை நாம்
தொட்டு வணங்கும்
போது அது
அவர்களில் உயர்
உணர்வினைத் தூண்டுகிறது. உண்மையில் கோயிலில்
இருக்கும் சிலைகளை
முறையான தீட்சைக்கூடாக அனைவரும் தொட்டு
வணங்கும் முறையை
நாம் கொண்டுவரவேண்டும்!
சொல்லாகிய பொருள்
எல்லாம்
உணர்ந்து உனைத்தோத் தரிக்க
வல்லார் தமைத்தொழ
வல்லான் என
என்னை வைப்பதுண்டோ
கல்லால் சிலைதொட்ட நல்லார்
எல்லோருக்கும் கதியளிக்கும்
சல்லாபம் ஆனவ
னேகாழி யாபதுத்
தாரணனே
நான் சொல்லப்படும் சொற்கள் எல்லாவற்றினது அர்த்தம் புரிந்து
உம்மை பாட
வேண்டும்!
உம்மைப் போன்ற
அதிபராக்கிரம வல்லமையுள்ளவரை நான் தொழ
வல்லவனாக என்னை
ஆக்க வேண்டும்!
உம்மை வணங்குவதற்கு நாம் கல்லால்
சிலை செய்கிறோம், அதைத் தொட்டு
வணங்கும் அனைவருக்கு நற்கதியளிக்கும் இன்பமான
பேச்சினை உடைய
சீர்காழிப் பதியில்
உறையும் ஆபத்துத்
தாரண பைரவரே
உம்மை நான்
தியானிக்கிறேன்
{ஸ்ரீலஸ்ரீ சிவஞான
தேசிக சுவாமிகள் அருளிச் செய்த
ஆபதுத்தாரண மாலை
பாடல் 29}
இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.