சிருஷ்டி 2024 – வகுப்பு 02
ஹடயோக
பிரதீபிகை வகுப்பு – 01
செவ்வாய்க்கிழமை
09-ஜனவரி-2024
அன்பின்
மாணவர்களே இன்று நீங்கள் கற்றுக்கொண்டவை:
- ஹட என்ற சொல்லிற்கு இரண்டு வகையில் பொருள் சொல்ல முடியும்; பொதுவிளக்கம் பலம் என்பதாகும்; எழுத்துக்களை வைத்து யோக வழியில் பொருள் கண்டால் ஹ என்பது சூரியனையும், ட என்பது சந்திரனையும் குறிக்கும்.
- ஹடயோகம் என்றால் பலத்தை தரும் யோகம் அல்லது உடலில் உள்ள சூரிய சந்திர ஆற்றலை இணைக்கும் முறை என்று பொருள்.
- பிரதீபிகை என்றால் ஒளி விளக்கு என்று அர்த்தம்; ஹடயோகம் பயில விரும்பும் மாணவருக்கு தெளிவான வழிகாட்டும் ஒளி விளக்கு ஹடயோக பிரதீபிகை.
- இந்த நூல் நாத சம்பிரதாய யோக நூல்; நாத சம்பிரதாயம் என்பது சிவபெருமான் பார்வதிக்கு இந்த யோக வித்தையை உபதேசிக்கும் போது அதைக் கேட்டுக்கொண்டிருந்த மீன் பரிணாம உயர்வு பெற்று அடுத்த பிறவியில் மச்சேந்திர நாதர் என்ற சித்தராக மனிதப் பிறவி எடுத்து யோகத்தில் தேர்ச்சிபெற்று யோகியானார். அவரிடன் தீட்சை பெற்று கோரக்க நாதர் இந்த யோகத்தில் தேர்ச்சி பெற்றார். ஆகவே இந்த யோக முறை ஆதி நாதரிடமிருந்து மச்சேந்திர நாதரும், மச்சேந்திர நாதரிடமிருந்து கோரக்க நாதரும் அவர்கள் குருபரம்பரையாகப் பயிற்சி செய்த யோகப் பயிற்சிகளை முறையாகத் தொகுத்து இந்த ஹடயோகப் பிரதீபிகை நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
- மிக உயர்ந்த இராஜயோகத்தில் ஏறிச் செல்வதற்கு ஏணிப்படிபோன்று விளங்கும் இந்த ஹடயோக வித்யாவை எமக்கு உபதேசித்த ஆதி நாதருக்கு நமஸ்காரம்
- முதல் உபதேசத்தின் இரண்டாவது சுலோகம்:
- இராஜ யோகத்தில் வெற்றி பெறுவதாற்காக மாத்திரமே தனது குரு நாதரை வணங்கி ஸ்வாத்மாராம யோகியினால் இந்த ஹடயோக வித்யா உபதேசிக்கப்படுகிறது.
- முதல் உபதேசத்தின் மூன்றாவது சுலோகம்:
- ராஜயோகத்தை பயிற்சிக்க முயற்சிக்கும் சாதகர்கள் பல்வேறு கருத்துக்கள் இருப்பதால் குழம்பி இருட்டில் நிற்பதுபோல் சாதனையில் தடைபட்டிருப்பவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள ஹடம் என்ற இந்த ஒளிவிளக்கை ஸ்வாத்மாராமர் கருணையுடன் ஏந்தி நிற்கிறார்.
- முதல் உபதேசத்தின் நான்காவது சுலோகம்:
- ஹடயோக வித்தை மத்ஸ்யேந்திர நாதர், கோரக்க்ஷ நாதர் பயிற்சித்து சித்தி பெற்ற வித்தை; அவர்களின் அருளாசியால் ஸ்வாத்மாராமர் அறிந்துகொண்டார்.
- இந்த ஹடயோக வித்தையை கீழ்வரும் 33 ஹடயோக சித்தர்கள் பயிற்சி செய்து சித்தியடைந்து இந்த யோகத்தின் மகிமையால் காலத்தினை வென்று இந்த பிரம்மாண்டத்தில் சாசுவதமாக இருந்து உலாவி வருகிறார்கள்: அவர்கள் நாமங்கள்
- ஸ்ரீ ஆதி நாதர்
- மத்ஸேந்திரர்
- சாபரர்
- ஆனந்தர்
- பைரவர்
- சௌராங்கி
- மீனர்
- கோரக்ஷர்
- விருபாக்ஷர்
- பிலேசயர்
- மந்தாநர்
- யோகபைரவர்
- சித்தி
- புத்தர்
- கந்தடி
- கோரகண்டகர்
- ஸுரானந்தர்
- சித்தபாதர்
- சர்படி
- கானேரீ
- பூஜபதர்
- நித்ய நாதர்
- நிரஞ்ஜனர்
- கபாலீ
- பிந்து நாதர்
- காகசண்டீச்வரர்
- அல்லாமர்
- பிரபுதேவர்
- கோடாசோலீ
- டிண்டிணி
- பானுகீ
- நாரதேவர்
- கண்டகாபாலிகர்
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.