நேற்று எனது
பல்கலைக்கழக மாணவர்களின் தொழில் வழிகாட்டல் பாட நெறிக்கான இறுதி பரீட்சைக் கலந்துரையாடல்! அனைத்து
மாணவர்களும் மிக
உற்சாகமாகக் கலந்து
கொண்டார்கள்! மூன்று
நாட்களாக அதிகாலை
0430 இலிருந்து இரவு
1030 வரை தொடர்
ச்சியான வேலைப்பளு!
இதில் அனேகர்
மிக உணர்ச்சி
வசப்பட்டு தமது
வாழ்க்கையில் என்ன
செய்யப்போகிறோம் என்ற
கவலையில் இருந்த
தம்மை ஒரு
தெளிவான பாதையை
இந்தக் கற்கை
நெறி சிந்திக்க வைத்திருக்கிறது என்று
மகிழ்ச்சியாகக் கூறினார்கள்.
நான் புரிந்துகொண்ட ஒரு விடயம்
இளைஞர்கள், மாணவர்கள் எப்போதும் ஆர்வமும்,
உற்சாகத்துடன் தம்மை
அன்பாகவும் பாசமாகவும் வழி நாடாத்தும் ஆசிரியரை ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஒரு நல்லாசிரியனாக இருக்க எம்மிடம்
ஒழுங்கும், உத்வேகமும், அவர்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து
அவர்களை inspire செய்யக்கூடிய பரந்த அறிவும்
அனுபமும் அவசியம்!
மாணவன் குதர்க்கமாகக் கேள்வி கேட்டாலும் எரிச்சலுறாமல் அவனை
வழிக்குக் கொண்டுவந்து அவன் மனதை
படிப்பில் கொழுவுவதற்குரிய மனத்திடம் இருக்க
வேண்டும்.
மாணவன் தன்னை
விடப் புத்திசாலியானவன், அதீத ஆற்றல்
உள்ளவன் அவனுக்குள் இருக்கும் அந்த
ஆற்றலைச் சரியாகப்
பயன்படுத்துவதற்குரிய விதையை விதைத்து அது
வளர உதவி
செய்வதே ஆசிரியனுடைய பணி!
அவர்களை வசப்படுத்த தன்னைப் பெரிய
ஆளாகக் காட்டிக்கொள்வதோ, எம்மீது கவர்ச்சியுற வைப்பது ஒரு
ஆசிரியன் செய்யக்கூடாத வேலை! சில
ஆசிரியர்கள் தம்மை
மாணவர்கள் மதிக்கக்
கூடிய நிலையில்
வைத்திருக்காமல் மாணவர்களை பலவந்தப்படுத்தி, பயமுறுத்தி தம்மை மதிக்க
வேண்டும் என்று
பந்தா காட்டுபவர்களாக இருப்பதையும் நாம்
காண்கிறோம்!
பல்வேறு கலாச்சார,
மதப்பிண்ணனி, சமூகப்பழக்க வழக்கங்களிலிருந்து அவைவரையும் ஒற்றுமைப்படுத்தி, சகோதரத்துவத்துடன் இயங்க வைக்க
வேண்டும்!
நான் மற்றவர்கள் கற்பிக்காததை கற்பிக்கும் ஒரு வினோத
ஆசிரியன்! நான்
ஒரு விஞ்ஞானம் முறைசாரக் கற்றவன்;
ஆனால் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியன்
அல்ல! நான்
எனது சிறப்புமானிப் பட்டத்தில், முதுமாணிப்பட்டத்தில் இரசாயனவியல் கற்றவன்
ஆனால் இரசாயனவியல் கற்பிப்பதில்லை! சூழலியல்
விஞ் ஞானம்
கற்றவன் ஆனால்
சூழலியல் கற்பிப்பதில்லை!
நான் கற்பிப்பது உனது மனக்குழப்பம் என்ன? அதிலிருந்து எப்படி மீண்டுவருவது? வாழ்க்கையில் இலட்சியம் என்ன? உனது
ஆற்றலை எதற்கு
பயன்படுத்தப் போகிறார்?
உனது அகப்பண்பிற்கு அமைய உனது
தொழிலை வாழ்க்கையை எப்படி அமைக்கப்
போகிறாய்? வெற்றிகரமான வாழ்க்கைக்கு நீ
வளர்த்துக்கொள்ள வேண்டிய
மனப்பண்புகள் என்ன?
தினசரி ஒழுக்கம்
என்ன?
நான் ஒரு
வினோத ஆசிரியன்!
கற்றலும் கற்பித்தலும் ஒரு பேரின்பம்!

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.