பைரவ உபாசனையின் பிரதான நோக்கம்
நாம் பலம்
பெறுவது; இதைத்
தரக்கூடியது இன்று
நாம் பார்க்க
இருக்கும் ஶ்ரீபை⁴ரவஸர்வப²லப்ரத³ஸ்தோத்ரம்ʼ. - அனைத்து பலத்தையும் தரக்கூடிய தோத்திரம் என்று அர்த்தம்!
பைரவ உபாஸனையின் சிறப்பு எமக்கு
தோன்ற இருக்கும் ஆபத்துக்களை அது
தோன்றமுன்னரே நீக்குவது; மலைபோல் தோன்றிவிட்ட ஆபத்தினை நீக்க
மகாகணபதி உபாஸனை!
சிவகுமாரர்களில் எதற்கும்
அஞ்சாத பயங்கர
நாயகன் பைரவர்!
பிரணவப் பொருள்
விளங்காத பிரம்மனிற்கு குட்டி ஞானத்தைச் சொல்லிக்கொடுக்கும் ஞானகுரு
சுப்பிரமணியர் என்றால்
எதற்கு அஞ்சாமல்
தலையைக் கொய்பவர்
பைரவர்!
இப்படிப்பட்ட பைரவ
உபாசனையின் அனைத்து
பலன் களையும்
பெற கீழ்வரும் தோத்திரத்தை அர்த்தத்துடன் பைரவ சன்னதியில் ஓதி நாம்
நன்மைகள் பெறலாம்!
இதை குருமுகமாக அறிந்தே பயிற்சி
செய்ய வேண்டும்!
இங்கு தகவலுக்காக பகிர்கிறோம்!
இந்த தோத்திரம் கூறும் நாம்
பெற வேண்டிய
பலம்:
1. நாம் அறியாத
எமக்கு நேர
இருக்கும் ஆபத்துக்கள்
2. எமது கர்மவினையைத் தூண்டி நாம்
செய்யும் செய்லாம்
ஏற்படப்போகும் ஆபத்துக்கள்
3. செல்வம் இல்லாத
தரித்திர நிலையால்
வரும் ஆபத்துக்கள்
4. பிள்ளைகள், புகழ்
இல்லாததால் வரும்
மனக் கலக்கங்கள்.
5. எமது கண்களுக்குத் தெரியாமம் எம்மீது
பொறாமைகொண்டு எம்மை
துன்புறுத்த அழிக்க
நினைப்பவர்கள்.
6. நாம் கடமையைச்
சரியாகச் செய்யாததால் வரும் கடங்களால் ஏற்படும் துன்பங்கள்
இந்த ஆறும்
எம்மை வாழ்க்கையில் பலவீனப்படுத்தும்; இவை
நீங்கினால் வரும்
நன்மைகளும் இந்தத்
தோத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றைக் கீழேயுள்ள தமிழ் அர்த்தத்தில் காண்க!
ௐ பை⁴ரவாய
அநிஷ்டநிவாரணாய ஸ்வாஹா
.
மம ஸர்வே
க்³ரஹா꞉ அநிஷ்டநிவாரணாய ஸ்வாஹா .
ஜ்ஞானம்ʼ தே³ஹி
த⁴னம்ʼ தே³ஹி
மம த்³ராரித்³ரயது³꞉க²நிவாரணாய
ஸ்வாஹா .
ஸுதம்ʼ தே³ஹி
யஶோ தே³ஹி
மம க்³ருʼஹக்லேஶநிவாரணாய ஸ்வாஹா .
ஸ்வாஸ்த்²ய தே³ஹி
ப³லம்ʼ தே³ஹி
மம ஶத்ருநிவாரணாய ஸ்வாஹா .
ஸித்³தி⁴ம்ʼ தே³ஹி
ஜயம்ʼ தே³ஹி
மம ஸர்வரூʼணநிவாரணாய ஸ்வாஹா .
ௐ பை⁴ரவாய
அநிஷ்டநிவாரணாய ஸ்வாஹா
.
இதி ஶ்ரீபை⁴ரவஸர்வப²லப்ரத³ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் .
ஓம் பைரவரே
எனக்கு வர
இருக்கும் பேராபத்துக்கள் அனைத்தையும் நீக்குவீராக! என்னை நான்
முழுமையாக பக்தியுடன் அர்ப்பணிக்கிறேன்!
என்னை தாக்க
இருக்கும் கிரக
சக்திகளால் உருவாகும் பேராபத்த்துக்கள் தீயிலிட்ட பஸ்பமாகட்டும்! அவற்றை
நீக்கி நீர்
என்னைக் காப்பாற்றுவீராக! என்னை நான்
முழுமையாக பக்தியுடன் அர்ப்பணிக்கிறேன்!
எனது வறுமையும் தரித்திரமும் என்னைவிட்டு நீங்க எனக்கு
அறிவினையும் செல்வத்தினையும் தருவீர்களாக! என்னை
நான் முழுமையாக பக்தியுடன் அர்ப்பணிக்கிறேன்!
எனது க்லேசங்கள் அகல புத்திரையும், நல்ல புகழையும் கொடுப்பீராக! என்னை
நான் முழுமையாக பக்தியுடன் அர்ப்பணிக்கிறேன்!
எனது எதிரிகளை
அழிக்கும் ஆற்றலைப்
பெற நல்லாரோக்கியத்தையும், பலத்தினையும் தருவீர்களாக! என்னை நான்
முழுமையாக பக்தியுடன் அர்ப்பணிக்கிறேன்!
என்னுடைய அனைத்துக் கடன் களையும்
அடைக்க முழுமையான ஸித்தியையும் வெற்றியையும் தாருங்கள்! என்னை
நான் முழுமையாக பக்தியுடன் அர்ப்பணிக்கிறேன்!
ஓம் பைரவாய
அனைத்து பேராத்துக்களையும் நீக்கி நிவாரணம்
தருபவரே
பைரவ உபாஸனையால் பெறப்படும் அனைத்து
பலன் களையும்
தரும் தோத்திரம் முடிவுற்றது.
இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!
.jpg)
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.