மனித மனத்தின் சிந்தனை
போக்கு வினோதமானது.
காலை பிரம்ம முகூர்த்த
தியானத்தில் இணைந்து கொண்ட ஒரு அன்பர் செய்தி அனுப்பியிருந்தார்: தான் கட்டணம்
கட்டி இன்னுமொரு கற்கையில் இணைந்திருப்பதால் அது முடிந்த பின்னரே இங்கு இணைந்து
கொள்ளலாம் என்று!
ஆகா நாம் கட்டணம்
எதுவும் கேட்கவில்லை என்றவுடன் நாம் சொல்லித் தரும் வித்தை முக்கியத்துவம்
அற்றுவிட்டதாகிவிட்டதே என்ற கவலை வந்தது!
இதேபோல் பாடசாலை
ஒன்றிற்கு பிள்ளைகளுக்கு வழிகாட்டலுக்கு வரும் படி அழைப்பு விடுத்துவிட்டு
இறுதியாக எவ்வளவு சேர் எதிர்பார்க்கிறீர்கள் என்றார்?
நான் எதிர்பார்ப்பது
எங்களது பிள்ளைகள் நான் சொல்லித்தரும் அறிவைக் கொண்டு மேன் மக்களாக தமது
வாழ்வையும், மற்றவர்கள் வாழ்வையும் உயர்த்த வல்லவர்களாக ஆற்றலுள்ளவர்களாக
வரவேண்டும் என்பது.
அப்படியென்றால் பணம்
எல்லாம் வேண்டாம் என்று சொல்ல வருகிறீர்களா? என்று கேட்டார்.
பணம் என்பது
யதார்த்தம்; நாம் செய்யும் செயலுக்கு எப்போதும் ஒரு செலவு இருக்கும்; அந்தச் செலவை
பணமுள்ளவர்கள் வசதியுள்ளவர்கள் ஏற்றுக்கொண்டு பங்களிக்க வேண்டும்; அதில் வசதி
இல்லாதவர்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். வறுமையில் இருப்பவர்களிடன் பணம்
வாங்கக் கூடாது. இந்தக் கல்விக்கு இவ்வளவு கட்டணம் என்று கூறக்கூடாது; அவரவர்
தகுதிக்கு தக்க பங்களிப்பு நல்க வேண்டும்; தரும் தொகை பெரியோ சிறிதோ அதுபற்றி
எந்தக் கணிப்பும் செய்யக்கூடாது. அந்த நிகழ்வு சரியாக நிகழ்வும், அந்த நிகழ்வை
நடத்துபவர்களது, நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்திற்கு
தேவையானதைத் தரவேண்டும்.
என்னிடம் கற்கும்
மாணவனுக்கு எனது குரு எனது அகமுன்னேற்றத்திற்கு தனது நேரத்தை எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல் செலவழிக்கிறார்; குருவின் பணி வளர நான் பெற்ற பயன்போல் இன்னும் ஆயிரம்
பேர் பயன் பெற நான் குருவின் பணிகளுக்கு பங்களிப்பு நல்க வேண்டும் என்ற எண்ணம் -
கடமையுணர்வு - தர்ம சிந்தனை வரவில்லை என்றால் உண்மையில் குருவாக நான் எனது
கடமையைச் செய்யவில்லை என்று தானே அர்த்தம்!
இதுவே எனது கொள்கை!
இது சரி தானே ?
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.