இந்த தியானம்
அழிகின்ற உடலையும்
அதன் வாழ்க்கையையும் பயனற்றதாக்காமல் பைரவரை
உபாசிப்பதற்கே நாம்
பயன்படுத்த வேண்டும்
என்பது பைரவரின்
செம்மையான தேகம்,
புயத்தில் பொற்கவசம் பூட்டப்பட்டிருக்கும் என்ற உருவகவும், மகாவிஷ்ணுவிற்கு அருளிய பெருமையும் சொல்லப்படுகிறது.
நிட்டைக்குள் வாழ்வும்
நின்னடி போற்றவும் நேர்ந்தறியா
வொட்டைச் சடலத்தையான் எடுத்தேன் ஒளி
ஓங்குசெம்
பொற்பட்டைப் புனைந்த
புயமீது மாயன்
படிவம் தந்த
சட்டைக்கு இடம்
தந்தருள்காழி யாபதுத்தாரணனே
நான் இந்த
ஓட்டை சடலத்தை
எடுத்த காரணம்
வாழ்க்கை உம்மைத்
தியானிப்பதிலும் உமது
பாதங்களைப் போற்றவும் மாத்திரமே!
உம்முடைய ஒளி
நிறைந்த செம்மை
நிற புயத்தின் மீது போடப்பட்டிருக்கும் பொன்னால் ஆன
பட்டையைச் சாத்தியிருக்கும் நீர் வைகுண்டம் சென்ற போது
உம்மை அவமதித்த
வாயிற்காவலனின் மேல்
நீர் கொண்ட
கோபம் குறைய
தன்னை அழித்துக்கொண்ட அந்த மாயனிற்கு மீண்டும் உருவம்
தந்து அருள்
புரிந்த
சீர்காழிப்பதியில் உறையும்
ஆபத்து தாரண
பைரவரே
உம்மை நான்
தியானிக்கிறேன்!
{ஸ்ரீலஸ்ரீ சிவஞான
தேசிக சுவாமிகள் அருளிச் செய்த
ஆபதுத்தாரண மாலை
பாடல் 28}
இன்றைய காசிகாபுராதி நாத காலபைரவரின் மங்கள அலங்காரம் அனைவரது தரிசனத்திற்காகவும்!

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.