நாளை பதஞ்சலி யோக சூத்திரம் கற்கை அதிகாலை 0500 மணிக்கு ஆரம்பமாகிறது.
குரு வணக்கம்,
காயத்ரி ஜெபம்,
பதஞ்சலி துதி
ஆகியவற்றுடன் முதலாவது
பகுதியான ஸமாதி
பாதம் கற்கப்
போகிறோம்.
சூத்திரம் என்றால்
நூலிழை என்றும்
அர்த்தம், மெல்லிய
நூலிழைகளாக மனம்
பற்றிய யோக
விஞ் ஞானமாக
195 இழைகளை பதஞ்சலி
முனிவர் தந்திருக்கிறார்.
ஒவ்வொரு சூத்திரத்தையும் எடுத்து மெதுவாக
உள்வாங்கி பின்னர்
அனைத்தையும் கோர்த்து
மாலையாக்கும் முறையைப்
பின்பற்றப் போகிறோம்.
பதஞ்சலி யோக
சூத்திரத்தின் முதல்
பகுதியான ஸமாதி
பாதத்தின் நோக்கம்
மைதுனம், உணவு,
பயம், நித்திரை
ஆகிய நான்
கு அடிப்படைகளைக் கொண்டு விருத்தியடையாத சித்தத்திலிருந்து ஏகாக்கிர
சித்தம் எனும்
உயர் மனதை
அடைந்து கடைசியில் ஏகாக்கிரத்தை தாரணா,
தியானத்தில் நீண்ட
நேரத்தில் நிறுத்த
ஏற்படும் நிலையான
ஸமாதியால் தெய்வ
மனம் எனப்படும் ருதம்பரா பிரக்ஞையான தெய்வ ஞானத்தை
அடைவதற்கான படிப்படியான வழி முறை
சொல்லபடுகீறது.
யோகம் என்றால்
சித்த விருத்தியை கட்டுப்படுத்துத்ல் என்று
வரையறுத்து
சித்தம் என்றால்
என்ன?
சித்த விருத்தி
எம்மை எப்படிக்
குழப்புகிறது?
சித்தத்தின் அமைப்பு
எப்படி இருக்கிறது?
சித்த விருத்திகளின் வகைகள் எவை?
சித்த விருத்திகளைக் கட்டுப்படுத்துவதால் ஏற்படும்
பயன்கள்?
சித்த விருத்தியைக் கட்டுப்படுத்துவது எப்படி?
அப்பியாசம் என்றால்
என்ன?
வைராக்கியம் என்றால்
என்ன?
யோக சாதனையில் வரும் தடைகள்
எவை?
தடைகளை வெல்லும்
பொறிமுறை எவை?
ஸமாதி என்றால்
என்ன?
ஸமாதியின் வகைகள்
எவை?
ஸமாதியால் அடைப்படும் பேரறிவு என்ன?
இன்னும் பல
பதஞ்சலி யோக
சூத்திர வகுப்பில் இணைந்து கொள்ள
விரும்புவர்கள் முதல்
கொமெண்டில் உள்ள
இணைப்பினை அழுத்தி
உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கவும்:
ஏற்கனவே சிருஷ்டியின் கற்கையில் இணைந்து
கொண்டவர்கள் இதை
அனுப்பத் தேவையில்லை; இந்த அழைப்பு
தனியே பதஞ்சலி
யோக சூத்திரம் படிக்க விரும்புவர்களுக்கு மாத்திரம்

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.