நான் ஸ்ரீராமரைச் சரணடைகிறேன்
இப்போது பூமியில்
இராம உணர்வு
விழிப்படையும் நேரம்!
இராமரின் தத்துவம்
என்ன?
எல்லா இதிகாசங்களும், புராணங்களும்
அசுர இயல்பினை
வென்று
மனிதன் தர்மத்தைக் கடைப்பிடித்து
தெய்வ நிலையை
மானிடன் எட்ட
முடியும் என்பதான்!
“ஶ்ரீராம꞉ சரணம்ʼ
மம” என்பது
ஸ்ரீ இராம
அஷ்டாக்ஷரி எனும்
எட்டெடுத்து மந்திரம்!
நான் ஸ்ரீராமரைச் சரணடைகிறேன் என்று
எமது உள்ளத்திற்கு சரணாகதியை ஆழப்பதிக்கும் மந்திரம் இது!
அக்கினியிடம் சரணடையாத
தங்கம் தன்னைச்
சுத்திசெய்த மங்காத
நிலை பெறுவதில்லை! அதுபோல் ஸ்ரீராமரைச் சரணடையாமல் மனிதன்
தெய்வ நிலை
பெறுவதில்லை!
ஸ்ரீ இராம
மந்திரம் அக்கினி
வித்தெழுத்தைக் கொண்டது!
அக்கினியோ எப்பொதும் ஊர்த்துவமயமாய் அனைத்தையும் தூய்மைப்படுத்துவது!
இந்த அஷ்டாக்ஷரி மந்திரத்தை முடிவாகக் கொண்ட அஷ்டாக்ஷரஶ்ரீராமமந்த்ரஸ்தோத்ரம் அற்புதமானது!
இதை விளக்கமாக தியானமாக பார்க்கப்போகிறோம்!
ஸ ஸர்வம்ʼ
ஸித்³தி⁴மாஸாத்³ய
ஹ்யந்தே ராமபத³ம்ʼ
வ்ரஜேத் .
சிந்தயேச்சேதஸா நித்யம்ʼ
ஶ்ரீராம꞉ஶரணம்ʼ மம
.. 1..
விஸ்வஸ்ய சாத்மனோநித்யம்ʼ
பாரதந்த்ர்யம்ʼ விசிந்த்ய ச .
சிந்தயேச்சேதஸா நித்யம்ʼ
ஶ்ரீராம꞉சரணம்ʼ மம
.. 2..
ராம பதத்தை
தியானிக்கும் ஒருவன்
எடுக்கும் காரியங்கள் எல்லாவற்றிலும் ஸித்தியடைந்து இறுதியில் இராம
பதத்தை அடைவான்!
ஆதலால் சொல்லுங்கள் “ நான்
ஸ்ரீராமரைச் சரணடைகிறேன்” என்று!
மனதில் எப்போதும் ஸ்ரீ ராமரை எதோ ஒருவடிவத்தில் எப்போதும் எல்லையற்ற பொருளாகச் சிந்தியுங்கள்! “ நான் ஸ்ரீராமரைச் சரணடைகிறேன்” என்று!

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.