அன்பின் “சிரத்தையாக யோக
வித்தை கற்க
விரும்பும் ” மாணவர்களே,
இன்றைய விரிவுரை தொகுக்கப்பட்டிருக்கிறது; உங்கள் கடமை
இதை அடிப்படியாக வைத்துக்கொண்டு விடுபட்ட
பகுதிகளை சேர்த்து
உங்கள் புரிதல்களையும் சேர்த்து உங்களுக்குரிய வகுப்புக் குறிப்புகளை ஒரு நூலாக
செய்து இறுதியாக
ஆசிரியருக்கு சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.
இது யோகத்தை அதியுன்னத சிரத்தையாக பயிலவேண்டும் என்பவர்கள் பின்பற்ற
வேண்டிய பயிற்சி!
**************************
பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 01
இன்று நீங்கள் கற்றுக்கொண்டவை:
சூத்திரம் – 01: அத
யோக அனுசாசஸனம் || இனி யோகம்
விளக்கப்படும்
சூத்திரம் -02: யோக: சித்த வ்ருத்தி நிரோத:
|| சித்தத்தின் விருத்திகளை ஒடுக்குதலே யோகம்
பதஞ்சலி யோக சூத்திரத்தின் முதல் இரண்டு
சூத்திரங்களைப் புரிந்து
கொள்ள நீங்கள்
புரிந்து வைத்திருக்க வேண்டிய அருஞ்சொற்கள்:
1.பதஞ்சலி மகரிஷி
– சித்த
சுத்தி, வாக்கு
சுத்தி, உடல்
சுத்தி ஆகிய
மூன்று சுத்திக்கும் உரிய அறிவியலைத் தந்த மகரிஷி!
2. யோகம் –
மனிதன் ஆக்கப்பட்டிருக்கும் தத்துவங்களின் இணைவு
3. 24 தத்துவங்கள்
– உயிரைச்
சூழ இருந்து
இயக்கத்தை நடத்தும்
கருவிகள்
4. அந்தக்கரணம் –
மனம் புத்தி
சித்தம் ஆங்காரம்
5. மனம் –
எண்ணம், புலன்
களில் இருந்து
தகவலை வாங்கும்
பகுதி
6. புத்தி –
கேள்வி கேட்டு
ஆராயும் பகுதி
7. சித்தம் –
தகவலை சம்ஸ்காரமாக பதிந்து வைக்கும்
பகுதி
8. ஆங்காரம் –
ஒரு செயலைச்
செய்வதற்கு மையமாக
இருக்கும் பகுதி
9. சம்ஸ்காரம் –
நாம் புலன்
களால் பெற்ற
அனுபவத்தின் பதிவு
10. பஞ்சபூதம் –
ப்ருதிவி, அப்பு,
அக்னி, வாயு,
ஆகாயம்
11. பஞ்ச புலன்
அனுபவம் –
கேட்டல், பார்த்தல், சுவைத்தல், முகர்தல்,
தொடு உணர்ச்சி
12. பஞ்ச ஞானேந்திரியம் – செவி,
கண், நாக்கு,
நாசி, தோல்
13. பஞ்ச கர்மேந்திரியம் – கை,
கால், வாய்,
குறி, குதம்
14. விருத்தி –
ஏற்கனவே பதியப்பட்ட பதிவுகள் கட்டுப்பாடு இல்லாமல் அலைகளாக
எழுந்து செயற்படும் நிலை
15. பதஞ்சலி யோகம்
– 24 தத்துவங்களில் சித்தம் என்ற
பகுதியி எழும்
கட்டுப்படாத விருத்திகளை கட்டுப்படுத்துதலே பதஞ்சலியைப் பொறுத்த வரையில்
யோகம். இந்த
விருத்திகளைக் கட்டுப்படுத்தினால் மற்றைய தத்துவங்கள் அனைத்தும் சிறப்பாக
ஒன்றிணைந்து அதியுயர்
உணர்வு நிலையான
ஸமாதி நிலை
வாய்க்கும். மனிதன்
அதியுயர் சக்தியுடையவன் ஆவான்.
16. பதஞ்சலி யோகசூத்திரம் 195/196 சூத்திரங்கள்
உடையது
17. பதஞ்சலி யோக
சூத்திரம் ஸமாதி/சாதனா/விபூதி/கைவல்ய
என்ற நான்கு
பகுதிகளை உடையது
18. ஸமாதி –
மனிதன் அடையக்கூடிய உயர் உணர்வு
நிலைகள் (super consciousness state) எவை?
19. சாதனா –
உயர் உணர்வு
நிலைய அடைவதற்குரிய பயிற்சி முறைகள்
(practice) எவை?
20. விபூதி –
உயர் உணர்வு
நிலையை அடைவதால்
பெறப்படும் சித்திகள் ஆற்றல்கள் (super powers) எவை?
21. கைவல்யம் - சித்திகள், ஆற்றல்களை விட
உயர்ந்த நிலை
ஒன்று உள்ளது!
22. முற்பிறப்பில் யோகம்
பயின்று தகுந்த
சம்ஸ்காரம் உடையவர்களுக்கு அப்பியாஸ வைராக்கியம் மாத்திரம் போதுமானது
23. முற்பிறப்பில் யோகம்
பயின்று தகுந்த
சம்ஸ்காரத்தைப் பெறாமல்
சாதனை குழம்பியவர்களுக்கு கிரியாயோகம் சொல்லப்படுகிறது.
24. முற்பிறப்பில் யோக
சம்ஸ்காரம் இல்லாமல்
தற்போது தொடங்குபவர்களுக்கு அஷ்டாங்க யோக
முறை சொல்லப்படுகிறது.
25. குரு அவரவர்
சம்ஸ்காரத்திற்கு ஏற்ப
யோக முறைகளைக் கற்பிப்பார்.

No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.