குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, August 03, 2011

உங்கள் மனதினை அறிந்து கொள்ளுங்கள் - 01

மனதின் தன்மைகள் 01 - புலனறிவு (Perception)

மனம் என்பது பற்றி பற்பல விஞ்ஞான விளக்கங்கள், தத்துவ விளக்கங்கள், மத போதனைகள் என்பன வந்துள்ளன. அவற்றுல் பல ஆழமான ஆராய்ச்சிகள் சாதாரண வாசகர்களால் புரிந்துகொள்ள கடினமானவயாக உள்ளன, இன்னும் சில ஒருவர் தனது நாளந்த வாழ்க்கைக்கு பயன் படுத்தமுடியாதபடி கோட்பாட்டு விளக்கங்களை மாத்திரம் கொண்டதாக உள்ளது. மதம் சார்ந்த விளக்கங்கள் வெறும் மூட நம்பிக்கையினை அடிப்படையாக கொண்டதாக பகுத்தறிவுடன் தர்க்கரீதியாக புரிந்து கொள்ள முடியாதபடி பூடகமா உள்ளது. ஆக மனம் என்பது ஒரு புரியாத புதிராகவே இன்றுவரை பலரிற்கு இருக்கின்றது.

 
சற்று சிந்தனை ஆற்றலுள்ள மனிதன் தனக்கு வரும் நாளந்த பிரச்சனைகளின் மூலம் விடை தேட முனைகிறான். ஒருவன் தனக்கு மட்டுமே குறித்த பிரச்சனை ஏன் வருகிறது என்று புலம்புகிறான்? பொதுவாகப்பார்த்தால் வாழ்க்கையில் பணம் பிரச்சனை, கல்வி பிரச்சனை, வேலைப்பிரச்சனை, திருமணம் பிரச்சனை, சமூகத்தில் பிரச்சனை, நாட்டில் பிரச்சனை என பிரச்சனைப் போராட்டம் நீண்டு கொண்டே போகிறது. இதற்கு பலரும் தமக்குதெரிந்த வழிகளில் தீர்வுகாண முனைகின்றனர், இறுதியின் பிரச்சனைத்தொடர் நீண்டு கொண்டே சென்று ஒன்று ஆன்மீகம், சாமியார், மந்திர மாயம் என்று முடிவுறும், இல்லை பிரச்சனை ஆன்மீகபிரச்சனையாக புதுவடிவம் பெறும், அல்லது இது எமது விதி என்று நொந்தவாறு நடப்பவற்றை ஏற்றுக்கொள்வது, எதிர்பார்த்த விளைவு கிடைக்காமல் விரக்தியில் போராடுவது என புது உருப்பெறும்.

ஆனால் ஒருசில மனிதர் வாழ்க்கையில் வெற்றிபெற்றிருக்கிறார்கள், பலரை தமது கட்டளையின் கீழ் இயங்க செய்திருக்கிறார்கள். நம்பமுடியாத வியக்கும்படியான சாதனைகளை செய்திருக்கிறார்கள், அது எப்படி? நீங்கள் அது அவர்களுடைய பணம், சூழல் என எக்காரணம் சொன்னாலும் அதை விட வேறு ஒரு காரணி இருக்கத்தான் செய்யும். அதுதான் மனம் என்று விஞ்ஞன ரீதியிலாக நிருபித்திருக்கிறார்கள்.

ஒரு மனிதன் எதைச்செய்தாலும், கதைத்தாலும் மனம் என்ற ஒன்றினூடாகவே செய்கிறான் என்பது சற்றே சிந்திப்பவர்களுக்கு விளங்கும். ஆதலால் உங்களுக்கு மனம் என்ற ஒன்று இருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிரறீர்கள். நீங்கள் இந்த கட்டுரையினை வாசிப்பதற்கு என்ன செய்கிறீர்கள்? கண்களால் பார்க்கிறீர்கள் என்று கூறினால் சற்று கண்களை மூடிவிட்டு இதனை நினைவு படுத்த முயற்சிக்கும் போது எதனூடாக செயல் புரிகிறீர்கள்? விஞ்ஞானம் படித்தவர்கள் மூளையினால் என சொல்லக்கூடும், ஆனால் மூளை என்பது கிட்டத்தட்ட ரேடியோ இயந்திரமோ அல்லது கணணியில் உள்ள புரொசசர் போன்றது என்பது இக்கட்டுரையினை தொடர்ச்சியாக படிப்பவர்களுக்கு விளங்கப்படுத்தப்படும்.

எனவே வாசகர்களுக்கு ஒருவன் எந்த செயலினை செய்வதானாலும் மனம் என்ற ஒன்று இயங்காமல் செயல் புரிய முடியாது என்பது சற்று விளங்கியிருக்கும் என்று நம்புகிறேன். இந்த தொடரின் நோக்கம் என்னவெனில் மனம் பற்றிய எளிய செயல் விஞ்ஞான விளக்கங்களுடன் நாளாந்த வாழ்வில் எப்படி பிரச்சனைகளை தீர்ப்பது தொடக்கம், அதீத மனஆற்றல் தொடர்பான கருப்பொருள்கள் சிறிய அனுபவப் பயிற்சிகளுடன் வாராந்தம் விளக்கப்படும்.

மனம் பற்றிய விளக்கம் மேலும் தொடரும்...


2 comments:

  1. மனம் பற்றி அருமையான விளக்கங்கள்.. பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. எளிமையான அருமையான மனம் பற்றிய விளக்கங்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...