குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

Sunday, April 14, 2019

தமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா?

தமிழ் வருடங்கள் 60ம் ஆபாசவருடங்களா?
******************************************************
நண்பர் ஒருவர் தமிழ் வருடங்கள் அறுபதிற்கும் எப்படிப் பெயர் வந்தது என்பதற்கு அபிதான சிந்தாமணியில் கூறப்பட்ட கதை ஒன்று பகிர்ந்திருந்தார்.

இதை ஏற்கனவே சில நாத்திகவாதிகள் ஆபாசமாக சித்தரித்து முன்னர் பேசியிருக்கிறார்கள்.

இவர்களுக்கு கூறுவிரும்புவது ஒவ்வொரு சமூகத்திலும் அந்த அந்த அறிவுத்தரத்திற்குத் தக்க ஒவ்வொரு விஷயத்தையும் கூறும் வட்டார வழக்கு இருக்கிறது என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. இப்படி வட்டார வழக்கை வரலாற்றுத்தகவலாகவும் ஒரு சமூகத்தினதும் வரலாறாக அறிவு மட்டமாக கருதுவது தவறனது. சித்தரித்து நம்புவது ராணி காமிக்ஸில் மாயாவி இருந்தார் என்பதை PhD ஆய்வு செய்கிறேன் போன்ற வேடிக்கையான விஷயம்.

அறுபது வருடங்கள் ஏன் வந்தது என்பதை அந்தத்துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்கவேண்டும். முற்காலத்தில் ஜோதிடம் என்பது சித்தாந்தம், கணிதம், சம்ஹிதை, என மூன்று பகுதிகளைக் கொண்டது.

சித்தாந்தம் என்றால் பஞ்சாங்கத்தைக் கணிப்பதற்குரிய வானவியல் கணிதம். அதாவது Astronomical calculations. சைவ சித்தந்தம் அல்ல...

கணிதம் என்பது ஒரு மனிதனுக்குரிய ஜாதகத்தைக் கணிப்பதற்கான கணிதப்பகுதி. இதில் ராசிக்கட்டம், நவாம்சம், தசாம்சம், இப்படி பல நூறு வகையுண்டு.

இப்படி கணிக்கப்பட்ட கணிதத்தின் படி பலன் கூறப்படுவதற்குரிய விதிகள் சம்ஹிதை எனப்படும்.

இன்று ஜோதிடர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களில் பலர் சம்ஹிதையில் தேர்ச்சி பெற்றவர்களே அன்றி சித்தாந்தத்திலோ கணிதத்திலோ அல்ல, சித்தாந்தத்தையும் கணிதத்தையும் கணணி செய்து விடுகிறது.

சித்தாந்தமும் கணிதமும் அறிவியல் (Science)
சம்ஹிதை ஒருவித உள்ளுணர்வுடன் கூடிய கலை (Intuitive art).

சித்தாந்தம் வானியலைப் பற்றியும் உடுக்கள் பற்றியும் தெளிவாகக் கூறும்.

அறுபதுவருடங்களுக்கான விளக்கம் என்பதை அபிதான சிந்தாமணியில் தேடாமல் சித்தாந்ததில் தேடினால் சரியான விளக்கம் கிடைகும்.

எமது வருடப்பிறப்பு சூரியனை அடிப்படையாகக் கொண்டது, இன்று சித்திரை பிறந்தது என்பது மீன இராசியில் நின்ற சூரியன் மேஷத்திற்குள் வந்துள்ளது என்பதே அர்த்தம். இப்படி ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு என்பதும் சூரியன் ஒவ்வொரு இராசிக்குள்ளும் செல்லும் நிகழ்வு, வைகாசி என்பது சூரியன் ரிஷபத்தில் புகுவது. இப்படி பன்னிரெண்டு மாதங்கள் என்பது 360° உடைய நட்சத்திர மண்டலங்களை கடக்க எடுப்பதை ஒரு வருடம் என்கிறோம். இது ஒரு வானவியல் நிகழ்வு, இதில் மதமோ, மூட நம்பிக்கையோ இல்லை.

இப்படி சூரியன் 12 மாதங்களில் 30° உடைய இராசியைக் கடக்கும் போது, அதே அளவு தூரத்தை வியாழக்கிரகம் ஒரு வருடத்தில் கடக்கும். அதே போல் அதைவிடப் பெரிய கிரகமான சனி 30° ஐக் கடக்க இரண்டரை வருடங்கள் எடுக்கும்.

இப்படி வியாழனும் சனியும் சேர்ந்து ஒன்றாக ஒரே இராசிக்கு வருவதற்கு 60 வருடங்கள் ஆகும்.

ஆக இந்த 60 வருடங்கள் என்ற கணக்கு வியாழனும் சனியும் இயங்கும் சுற்றினை குறிக்கும் நிலைகளாகும்.

இன்று சனி தனுசு இராசியில் 26°,11' 20.62" இல் நிற்கிறது, வியாழன் 00°11' 40.26" இல் நிற்கிறது.
இன்று பஞ்சாங்கத்தில் சனியும் வியாழனும் இருப்பது போல் சரியாக அறுபது வருடத்திற்கு பின்னர் 2079 இல் இருக்கும். 2079 ம் வருடத்தை நாம் மீண்டும் விகாரி வருடம் என்று அழைப்போம்.

இந்த வியாழன் சனி சேர்க்கையின் அடிப்படையிலேயே சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடுவார்கள். உங்கள் 60 வயதில் சரியாக நீங்கள் 60 வருடங்களுக்கு முன்னர் பிறந்த நேரத்தில் சனியும் வியானும் எந்த இராசியில் நின்றார்களோ அந்த இராசியில் அப்போது இருப்பார்கள்.

இந்தக்கணிதம் ஐந்தாம் நூற்றாண்டு ஆரியப்பட்டர் எழுதிய சமஸ்க்ருத வானியல் நூலான சூரிய சித்தந்தத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

ஆக நம்ம முன்னோர்கள் ஒண்ணும் மூட்டாள்கள் இல்லை!No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

சாதனையைத் தவறவிட்டல் மனம் மிகவும் துன்பமடைகிறதே?

என்னால் ஒரு நாள் கூட சாதனை செய்யாமல் இருக்க முடியவில்லை, அப்படி இருந்தால் வெறுமையாகவும் துன்பமாகவும் உணர்கிறேன்? இப்படி பலசாதகர்க...