முழுமையான தீர்ப்பு ஆவணம் ஆங்கிலத்தில்:
http://www.supremecourt.lk/.../docu.../sc_fr_141_2015.pdf...
இந்த தீர்ப்பிற்கான அடிப்படை "polluter pay concept", அதாவது மாசுபடுத்தியவன் காசைக் கட்டு கருத்து என்று தமிழில் மொழிப் பெயர்க்கலாம்.
இதன் அடிப்படை நீதிமன்ற ஆவணத்தில் தரப்பட்ட படி:
It is an oft-cited and applied principle of environmental law that the “Polluter Pays”. This is reflected in Principle 16 of the Rio Declaration, which states “National authorities should endeavour to promote the internalization of environmental costs and the use of economic instruments, taking into account the approach that the polluter should, in principle, bear the cost of pollution, with due regard to the public interest and without distorting international trade and investment.”.
சுருக்கமாகச் சொன்னால் பணமுள்ளவன் சூழலை மாசுபடுத்தினால் அவனது வருமானமும் சர்வதேசத்தின் வருமானமும் பாதிக்கப்படாமல் செய்த சூழல் மாசிற்குரிய பொருளாதாரப் பெறுமதியை தண்டப் பணமாக கட்ட வேண்டும் என்பது. இது சரியான ஒன்றாக இருக்கலாம்,
இதன்படி பார்த்தால் குறித்த நிறுவனம் நிலத்தடி நீர்த்தேக்கத்தை முழுமையாக சுத்திகரிப்பதற்குரிய செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தீர்ப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாமல் மொத்தம் 20 மில்லியன் மாத்திரம் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
This is an appropriate case to apply the “Polluter Pays” principle. I direct the 8th respondent to pay compensation in a sum of Rs.20 million to offset at least a part of the substantial loss, harm and damage caused to the residents of the Chunnakam area by
the contamination of groundwater in the Chunnakam area and of soil in the vicinity of the 8th respondent‟s thermal power station. Article 126 (4) of the Constitution vests ample jurisdiction in this Court to make the aforesaid Order, which is just and equitable
in the circumstances of this case.
இதன்படி இந்தப் பணத்தைக் கொண்டு கிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The members of panel and the institutions they represent shall be collectively and individually responsible for distributing this sum of Rs. 20 million among persons who reside within a 1.5 kilometre radius of the 8th respondent‟s thermal power station and whose wells have been contaminated with Oil and Grease and/or BTEX, in order to assist those persons to clean and rehabilitate their wells.
நான் ஏற்கனவே குறிப்பிட்ட படி யாழ்குடா நாட்டின் நிலத்தடி நீர்த்தேக்க அமைப்பிற்கு தனியே கிணற்றினை இறைப்பது போதுமான தீர்வாக இருந்திருந்தால் இதுவரை அங்கு வாழும் மக்கள் தாமாகவே இந்தப் பிரச்சனையைத் தீர்த்திருப்பர்கள். முழு யாழ் குடா நாட்டின் நிலத்தடி அமைப்பும் Miocene limestone எனப்படும் சுண்ணக்கல் பாறைகளால் ஆக்கப்பட்டுள்ளது. இந்த பாறைகள் இடையிடையே karsts எனப்படும் துவாரங்கள் கொண்டவை. இவற்றின் சராசரி ஆழம் 100 – 150 m ஆகும். இந்த துளைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை. இவற்றில் தேங்கியுள்ள கழிவு எண்ணெய் எங்கு உள்ளது? எவ்வளவு உள்ளது என்பது பற்றிய சரியான ஆய்வுத்தகவல் இல்லாமல் இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண்பது கஷ்டம்!
ஆகவே இந்தப் பிரச்சினையில் வாதிட்டவர்கள் மன்றிற்கு எது சரியான தீர்வு என்பதை சரியாக ஒப்புவித்தார்களா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!
சூழல் விஞ்ஞானிகளின் ஆலோசனை பெறப்படாமல் வெறுமனே சட்ட நிபுணர்கள் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்ட விதிகளைக் கொண்டு தரப்படும் சூழலியல் தவறுகளுக்கான தீர்வுகள் மக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வினைத் தருமா என்பது பற்றி சட்ட நிபுணர்கள், பல்கலைக்கழக சமூகம், அறிவியலாளர்கள் நிச்சயம் உரையாட வேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.