கருத்தை விட்டு சொற்களைப் பிடித்து வாதாடும் முறை மாறும் வரை புரிந்துணர்வு என்பது ஏற்பட முடியாது. நான் நேற்று முன் தினம் பதிந்த எண்ணங்களின் செயற்பாடுகள் எத்தகையது என்பதற்கு காட்டிய உதாரணத்தை ஒருவர் குறித்த அரசியல்வாதிக்கு எதிராக பிரார்த்தனை செய்யப்பட்டதால் தான் பேரழிவு ஏற்பட்டது என்று வியாக்கியானப்படுத்தி மூடத்தனம் என்று தனது முக நூல் பக்கத்தில் சாடியிருந்தார்.
எண்ணங்களின் இயக்கத்தின் நுண்மை பற்றி எந்த வாசிப்பும் பரீட்சயமும் ஆய்வும் இல்லாமல் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் எதுகை மோனையுடன் எதிராளியை நக்கலடித்து கேலி செய்து கண்டனம் செய்யும் பழைய மரபு அது!
நான் ஒரு Chaos theory ஆய்வாளன். எனது ஆய்வு முதன்மையாக சூழலியலில் இதன் பிரயோகம். பின்னர் மனம், எண்ணங்களில்.
Chaos theory என்ன சொல்லுகிறது என்றால் ஆபிரிக்காவில் பறக்கும் ஒரு பட்டாம் பூச்சியின் இறக்கை ஏற்படுத்தும் அதிர்வினால் உண்டாகும் தாழமுக்கம் வங்களா விரிகுடாவில் புயலாக மாறும் என்று!
இதை நேர்கோட்டுச் சிந்தனையில் (Linear thinking) சிந்திப்பவர்களுக்கு பார்க்க வெறும் கேலிக் கூத்தும் மூடத்தனமுமாகத் தான் தோன்றும். ஆனால் இயற்கையின் நுண்மையில் ஒவ்வொரு சிறு அதிர்வுமே பேரதிர்வாக மாறுகிறது.
இது எண்ணங்களுக்கும் பொருந்தும், நாம் தனிப்பட எண்ணும் எண்ணங்கள் சேர்ந்து எமது மனத்தை ஆக்குகிறது. பல மனங்கள் சேர்ந்து கூட்டு மனமாக ஒரு சமூகத்தின் மனமாக மாறுகிறது. எந்தச் சமூகத்தின் மனதிற்குள் எமது மனம் இருக்கிறதோ அந்தச் சமூகத்தின் பெரும்பான்மை எண்ணமே எமது தலைவிதியைத் தீர்மானிக்கும்! இப்படி சமூக மனம் ஆளத் தொடங்கிய பின்னர் நாம் தனிப்பட நல்லவர்களாக இருந்தாலும் சமூக மனத்தின் தீமைகளை ஏற்றுக்கொண்டு பலன்களை அனுபவிக்க வேண்டியவர்களாகி விடுவோம்.
இதற்கு உதாரணமாக பல நல்ல இஸ்லாமியர்கள் இருந்தாலும் ஏற்பட்டிருக்கும் வலிமையான மதத்தின் பெயரால் ஏற்படும் தீவிரவாதத்தால் அனைவரும் இதற்குள் அடக்கப்படுவது போல!
நல்ல பல இலங்கையர்கள் இருந்தாலும் முட்டாள்களும் கையாலாகதவர்களும் ஆட்சியில் இருந்தால் துன்பத்தை அனுபவிப்பது போல!
ஆகவே பிரபஞ்சத்தில் எதற்கும் நக்கல், கேலி, விளையாட்டுக்கு என்று எதுவும் இல்லை! ஒவ்வொரு எண்ணமும் பெருவிளைவை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.