ஆசு + இரியன் = ஆசிரியன்
ஆசு என்பது குற்றம், இரியன் அற்றவன் குற்றமற்றவன் என்பதன் பொருளே ஆசிரியன்.
ஆசிரியர் தவறு செய்தார் என்பதே தமிழில் கருத்துப் பிழையான ஒன்று! தவறு அற்றவரையே ஆசிரியன் என்று தமிழில் கூறுகிறோம்.
ஆனால் Teacher என்பதிலுள்ள Teach என்பதன் அர்த்தம் to impart knowledge or skill என்ற பொருளில் வருகிறது. அதாவது அறிவையோ திறனையோ தருபவர் Teacher எனப்படுகிறார். அவர் குற்றமற்றவராக இருக்கத் தேவையில்லை.
இன்று ஆசிரியர்கள் அற்றுப் போய் teacher கள் மாத்திரமே இன்றைய கல்வி முறையில் உருவாக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதனால் தான் பாடசாலைகளில் துஷ்பிரயோகம், கல்வியல் கல்லூரியில் பியர் பார்ட்டி, ஆகவே Teacher தமது அறிவினையும், திறனையும் தருவதுடன் வேலை நின்று போய்விடுகிறது. மாணவனுக்கு ஆதர்சன வழிகாட்டியாக முடியாது. ஆகவே பெற்றோர்கள் பிள்ளைகளை கற்பதற்கு தாம் Teacher இடம் அனுப்புகிறோமா, ஆசிரியனிடம் அனுப்புகிறோமா என்பதில் மிகத்தெளிவும் கவனமும் இருக்க வேண்டும்.
சுயஒழுக்கம் இல்லாத குடிகார, கீழ்த்தர சிந்தனையுடையவர்களும், அறிவும், திறனும் மிகுந்த Teacher ஆக இருக்க முடியும். இத்தகையவர்கள் பிள்ளைகளுக்கு ஆபத்தானவர்களாக இருக்கலாம்.
ஆகவே பெற்றோர்கள் ஆசிரியனுக்கும், Teacher இற்கும் வித்தியாசம் நன்கு வித்தியாசம் தெரியவேண்டும்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.