பலபேர், ஏன் நான் வசிக்கும் ஊரில் கூட நான் Facebook இல் எழுதுவதைப் பார்த்துவிட்டு ஏதோ ஆசிரமம் வைத்து நடத்தும் சாமியார் என்று எண்ணி உரையாடியிருக்கிறார்கள்!
ஒரு முறை தம்பி ஒருவர் நான் உலகத்தை துறந்து இமயமலை சென்றுவிட்டதாக எண்ணிக் கொண்டிருந்ததாக கூறியிருந்தார்!
ஆன்மீகம் எனது அகத்தேடல் மட்டுமே, அதை நிறுவனமயமாக பின்பற்றுவதில் உடன்பாடு இல்லாதவன்! ஒவ்வொருவரும் தனிப்பட தமது அகத்தை மேம்படுத்தும் யோகசாதனையை அடிப்படையாக கொண்ட ஆன்மீகத்தில் நம்பிக்கையுள்ளவன். இதுவே முற்காலத்தில் ரிஷிகளும் சித்தர்களும் பின்பற்றியது! தந்தை வழியிலும், சிறுவயதில் குரு என்னைப் பிடித்துக் கொண்ட சந்தர்ப்ப வசத்தால் இது எனது வாழ்வின் மிக முக்கியமான ஒன்றாகிவிட்டது. இதனால் இன்று பலர் பயன் பெறுகிறார்கள் என்ற காரணத்தால் இந்த role இனை மகிழ்வுடன் சுமந்து கொண்டிருக்கிறேன் என்பது தான் உண்மை.
எனக்கு மிகப் பிடித்த விஷயத்தை எழுதுகிறேன் அவ்வளவு தான்! பல நேரங்களின் எழுத வைக்கப்படுகிறேன் என்று தான் சொல்ல வேண்டும். நான் பின்பற்றுவதை, அறிந்ததை மற்றவர்களுக்கு பயன்படும்படி சொல்லிக் கொடுக்கிறேன். அதுவும் எனது குரு எனக்கு செய்யச் சொன்னதை கடமையாக செய்வதால்,
என்னைப் பற்றி எவராவது அறிமுகப்படுத்தச் சொல்லிக் கேட்டால் எனக்கு என்ன சொல்வது என்று பொதுவாகத் தெரிவதில்லை! அடிப்படையில் நாம் யார் என்பதைத் தானே தேடிக் கொண்டு இருக்கிறோம்.
பொதுவாக கீழ்வரும் tagline இற்குள் என்னை அடக்கலாம்.
சூழலியலாளன்
விவசாய தொழில் முனைவோன்
இயற்கை விவசாய ஆர்வலன்
நிர்வாகி, இயக்குனர்
ஆலோசகன்
சித்த ஆயுர்வேத வைத்தியன்
யோக சாதகன்
உபாசகன்
தத்துவம் கற்கும் மாணவன்
சமூகத்தின் இயக்கவியலை கற்க முனைபவன்
ஆசிரியன்
வாசிப்பாளன்
எழுத்தாளன்
இப்படி பலதை வைத்துக் கொண்டு எதைச் சொல்லுவது என்ற குழப்பத்தில் சில கணங்கள் ஓடிவிடும்.
அடிப்படையில் நான் ஒரு சூழலியலாளன்! என்னை ஒரு வியாபார நிறுவன நிர்வாகியாக்கியதும் சந்தர்ப்ப வசத்தால், கடந்த ஐந்து வருடங்களில் ஒரு பல்தேசிய விவசாய நிறுவனத்தில் பொறுப்பு வாய்ந்த உயர்பதவிவகித்த அனுபவம் விவசாயத்தில் ஈடுபாடு உள்ளவன் ஆக்கியுள்ளது.
கடந்த வருடம் வரை இலங்கையின் மிகப் பெரிய விவசாய ஏற்றுமதி நிறுவனத்தில் துணை இயக்குனராக பணிப் புரிந்துவிட்டு இப்போது நண்பர் ஒருவருடன் சொந்த தொழில் ஆரம்பித்துள்ளேன்!
தற்போதைய ஆர்வம் இயற்கை வேளாண்மை - Natural Organic Agriculture!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.