ஒரு விஷயம் எமக்கு விளங்கவில்லை என்றால் அதை அறிவதற்கு பொறுமையும், நிதானமும், முயற்சியும் இருக்க வேண்டும்.
பொறுமையாக, நிதானமாக முயற்சிக்க முடியாதவர்கள் எதையும் விமர்சிக்க தகுதி அற்றவர்கள்.
இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் எதையும் கேலி செய்வதும், நக்கலடிப்பதும், கீழ்மைப்படுத்துவதும் பகுத்தறிவாக கருதப்பட்டது. எனினும் இன்றைய தொழில்நுட்ப வசதியும், அறிவியல் வளர்ச்சியும் அனைத்தையும் காரண காரியத்துடன் இயங்கும் பிரபஞ்சமாகவே பார்க்கும் மனதை மக்களுக்கு உருவாக்கியுள்ளது.
மனதின் நுண்மையைப் புரிந்துக் கொள்ளாதவர்களும், எதையும் அர்ப்பணிப்புடன் ஈடுபடத் தயாராக இல்லாதவர்களுக்கு தமக்குப் புரியாத விஷயங்கள் உலகத்தில் இல்லை என்ற நினைப்புடன் கிணற்றுத் தவளைகளாகத் தான் இருக்கிறார்கள்.
தம்மை அறிவியலாளர்களாக காட்டிக் கொள்ள பல ஆயிரம் வருட பாரம்பரியம் உள்ள கலாசாரத்தை கொச்சைப்படுத்த நினைப்பது மூடத்தனம். எந்த ஒரு அறிவும் ஞானமும் காலம் போக போக பித்தளையில் களிம்பேறுவது போல், இரும்பு துருப் பிடிப்பது போல் அரசியலாலும், அதிகாரத்தாலும் உண்மை நோக்கத்திலிருந்து விலகுவது தவிர்க்க முடியாதது.
ஆகவே எமது பாரம்பரியத்தில் கடைப் பிடிக்கப்பட்டவற்றில் வாழ்விற்கு உதவக் கூடிய விஷயங்களை முழுமனதுடன் ஏற்று, தவிர்க்க வேண்டியவற்றை தவிர்ப்பது அவசியமானது.
இளம் பயிரைக்காக்க வேலி அவசியமாக இருக்கும். அதே வேலி வளரும் போது பயிரை வளரவிடாமல் தடுக்கும் செயலைச் செய்வது போன்ற நிலைதான் பல மத, கலாசார கட்டுப்பாடுகள்.
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.