நாளை வசந்த நவராத்ரி பூர்த்தியாகிறது,
இப்படியான நாளில் ஆடு பலி கொடுப்பது விஷேஷமாக கருதப்படுகிறது.
அதுவும் பைரவரிற்கு, ஆகவே அனைவரும் ஆடு பலிக் கொடுப்பதற்கு தயாராக வேண்டும்.
.
.
.
.
.
.
.
..
...
குரு பைரவ ஸ்வரூபம்,
பைரவருக்கு பிரியமான பலி ஆடு
ஆடு ஆர்வத்துடன் துள்ளிப் போய் ஒரு செடியைக் கடிக்கும், இரண்டு இலை சாப்பிட்டவுடன் அடுத்த செடிக்கு மாறும். இறுதியில் எல்லாச் செடியையும் கடித்து நாசம் செய்து விட்டு ஒரு லீட்டர் பால் மட்டும் தரும்.
இனி விஷயத்திற்கு வருவோம், சில அன்பர்கள் சாதனை தொடங்குவார்கள், சிறிது காலம் செய்வார்கள், அவர்களது பிரச்சனைகள் எல்லாம் உடனடியாக தீரவேண்டும். இல்லாவிட்டால் வேறு குருவைத் தேடிச் செல்வார்கள். அவரிடம் உபதேசம் வாங்கிக் கொண்டு மீண்டும் சாதனை செய்வார்கள். உடனடியாக பலன் வேண்டும், கிடைக்கவில்லை என்றால் அடுத்த குரு, இப்படிப் பயணம் தொடரும். இதில் குரு சற்று கடிந்துக் கொண்டால் குருவில் குறையும் காணத் தொடங்கி விடுவார்கள்.
இப்படி சலனிக்கும் மனதில் உள்ள ஆட்டுப் புத்தியை குருவாகிய பைரவரிற்கு பலியிட்டு விட்டு தனக்கு கிடைத்த சாதனையை கடைசி வரை விடாமல் சாதகம் செய்யும் சாதகருக்கே மனம் ஒருமைப்படும், அதை விடுத்து அந்த மந்திரம், இந்த தந்திரம், அந்த வித்தை, இந்த வித்தை என்று எங்கும் ஓடத் தேவையில்லை. ஆட்டுப் புத்தி இல்லாமல் கிடைப்பதை சரியாக சாதகம் செய்தாலே கேட்காமல் எல்லாம் கிடைக்கும்!
ஆகவே நாளை இராம நவமி வசந்த நவராத்ரியில் உங்களிடம் இருக்கும் ஆட்டுப் புத்தியை பைரவரிற்கு பலியிட்டு உங்கள் பூர்வ புண்ணிய பலனால் கிடைத்த இந்த இறை சாதனையை சிரத்தையாக தினசரி சாதனையாக தொடர்ந்து செய்து வருவோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
சலனிக்கும் புத்தியை இறையிடம் ஒப்படைத்து மனதைத் தூய்மைப்படுத்துவதே ஆட்டுப்பலி!
பதிவை ஒழுங்காக படிக்காமல் எவராவது வீட்டில் ஆடு பலி கொடுத்தால் அதற்கு நாம் பொறுப்பு இல்லை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.